Visitors have accessed this post 347 times.

பொருளாதாரம்

Visitors have accessed this post 347 times.

1.பொருளாதாரம்  

பொருள் +ஆதாரம் =பொருளாதாரம் 

பொருள் இல்லை என்றால் இவ்வுலகு இல்லை. பொருளாதாரம் என்பதை “Economics ” என்று ஆங்கிலத்தில்   அழைக்கப்படும் 

இதனை ‘பொருளியல் ‘ என்று  தமிழில் கருத்தில் கொள்ளலாம் 

 

மேம்பாடு

 

இந்த பொருளாதாரம் இரு வகைகளில் பாகுபாடும். அவை

தனி மனித மேம்பாடு மற்றும் மொத்த சமூதாய மேம்பாடு என்று வகைப்படும். 

 

தனி மனித மேம்பாடு, தனி மனித வருவாய்        (  per capita income) பற்றியே பதிவாகும். 

தனி மனித வருமானம் என்பது சம்பளம் அல்லது வேறு வருவாய்: தொழில் மற்றும் வர்த்தக 

சார்ந்த துறைகள் வழியாக வரும் வருமானம். 

இதில் குடும்ப சிலவீனங்கள் நீக்கி விட்டு வரும் மொத்த வருமானம் (gross income) பிறகு வரிகள் கழித்து மீண்ட தொகை நிகர வருமானம் (net Income). 

 

இதைப் போலவே தேசிய மொத்த வருமானமும் கணக்கிடப்பட்டுள்ளது. 

தனி மனித வரி, மற்றும் தேசிய மொத்த வரி வகைகள் தனித்தனியாகக்

கணக்கிட்டு பின்னர் தேசிய வருவாய் பதிவிறக்கம் செய்யப்படுகிறது. 

 

தணிக்கை 

 

தணிக்கையாளர்களால் தணிக்கை செய்யப்பட்ட பொருளாதாரம் தேசிய வருமானதத்தை கட்டமைக்கும். இதுவே பொருளியலின் “மூலவிதை” என்றும் கருத்தில் கொள்ளலாம். 

அறிவுப் பூர்வமான உண்மையான கணக்காள்மையே நேர்மையான வல்லமையை

முறைப் படுத்தும். 

 

தவறான தணிக்கை 

 

இது தனி மனித முன்னேற்றத்தை வெகுவாக பாதிக்கும். உதாரணமாக மாதம் ரூபாய் 4 லட்சம் வருமானம் உள்ள ஒருவருக்கு வருடவருமானம் 48 லட்ச ரூபாய். இதில் அவரின் எல்லா செலவுகளும் தோராயமாக மாதம் ரூபாய் 1 லட்சம் வீதம் வருடம் சுமார் 12 லட்சம் என கணக்கில் கொண்டால் மீதியுள்ள ரூபாய் 36 லட்சம் என்ற நிகரவருமானத்தை முறையாக அங்கீகரிக்கப்பட்ட தணிக்கைப் படுத்தும் போது தோராயமாக ரூபாய் 12 லட்சம் வரை வருமானவரி நிர்ணயம் ஆகும். 

இந்த கட்டமைக்கப்பட்ட வரி நிர்ணயம் தனிமனித செல்வாக்கை வெகுவாக சீர் அமைக்கிறது. 

 

செலுத்தப்பட்ட வரி தான் தனிமனித “செயல் திறனை” நிரவகிக்கிறது. 

 

தகுதிச் சான்று 

 

மேற்கண்ட செயல் திறன் தான் தனிமனித வளர்ச்சியை கட்டமைக்கும் தகுதிச்சான்று. இஃது சரியாக முறைமைப்படுத்தபட்டால்

தனி மனித வளர்ச்சி தங்கு தடையின்றி அமையும் என்பதில் எந்த ஐயமில்லை. 

 

மாறக தணிக்கையாளர்களின் தவறான வழி நடத்துதல், வருவாய் கணக்கைக் குறைத்துக் காட்டுதல், வரியைக் குறைத்து மதிப்பிடுதல் இன்ன பிற வழிகளால் தனிமனித தகுதி வெகுவாக குறைக்கப்பட்டு அவரின் செயல் திறன் பாதிக்கப்படுகிறது. இதனால் 

அவரின் தகுதி கட்டமைப்பு முற்றிலும் தகர்ந்து 

போகின்றது. இது முற்றிலும் மாறுபட்ட முன்னேற்றம் இன்மைக்கு வழி வகுக்கும். 

இது அவரை தகுதி அற்றவர் ஆக்கும் என்பதில்

கிஞ்சித்தும் ஐயமில்லை. 

 

தகுதித் திறன் 

 

தகுதித் திறன் (Credential) இது தான் மனித மேம்பாட்டின் அடிப்படை. இதன்மீது தான் முன்னேற்றம், வளர்ச்சி, வல்லமை போன்ற எல்லா மேல் கட்டமைப்புகள் நிலைப்படும். 

 

தகுதிச் சான்று  எப்படி இன்றியமையாததோ

அப்படித்தான் தகுதித் திறனும் வெகுவாக 

முக்கியமானது. 

இன்றைக்கு பல வேலைகள், தொழில்கள், திட்டங்கள், வர்த்தகங்கள் என்று எல்லா நிலைகளிலும் எல்லா இடங்களிலும் தகுதித் திறன் முற்றிலும் இன்றியமையாதது. 

 

சரியான தகுதி இல்லை என்றால் மேற்சொல்லப்பட்ட எல்லா தனிமனித முயற்சிகளும் அவை மேற்கொள்ளும் எல்லா 

தொழில்கள், வர்த்தகங்கள், ஏற்றுமதி இறக்குமதி இன்னபிற அனைத்து முன்னேற்றங்கள் முடக்கப்படும் என்பது 

உள்ளங்கை நெல்லிக்கனி. இதற்கு வேறு எந்த 

வழிகளோ வாய்ப்புகளோ இல்லை என்பதும் 

பேருண்மை. 

 

வல்லமை 

 

ஆகவே முறையான சரியான தணிக்கை, முறன் படாத பிறழ் இல்ல தனிமனித கணக்கு ஆய்வு மற்றும் நேர்மையான வரி விதிப்பு வரி

செலுத்துதல் தான் தனி மனித ஒழுக்கம், மேலாண்மை, முன்னேற்றம், வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்பதை *மனிதம் வேதமாக* சிந்தையில் நிறுத்தி செயல் படுத்த வேண்டும். 

 

வல்லமையை தனிமனிதன் தான் உருவாக்க வேண்டும். அது மந்திரத்து மாங்காய் அல்ல. 

ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு தணிக்கையாளனும் இந்த உண்மையை உணர்ந்தால் நேர்மையாக நடந்தால் வல்லமை 

ஒரு வாய் வார்த்தை அல்ல அது உழைப்பின் வெற்றி என்பதை உலகம் முழுவதும் உரக்கச் சொல்லும். 

 

” உண்மையைச் சொல்லி நன்மைச் செய்தால் 

உலகம் உன்னை வணங்கும் “

             *********************************************

 

2.வடக்கு தெற்கு 

 

வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது: இது ஒரு தவறான கருத்து திணிப்பு. 

முதலில் இது எதனால் அப்படி சொல்லப் படுகிறது? வடக்கே நிறைய வாணிப முன்னேற்றம், எண்ணிக்கையில் அடங்கா தொழில்கள் வளர்ச்சி : ஏற்றுமதி இறக்குமதி, விவசாய அபிவிருத்தி, 

கட்டுமான தொழில் வளர்ச்சி, என்று பல்வேறு தரப்பில் இருந்தும் முன்னேற்றம் முனைப்புடன் செயல்படுகின்றது என்பது நிதர்சனம். 

இன்னும் ஒருபடி மேலே போய் சொல்லலாம்:பணிபுரியும் ஊழியர்கள், வேலை ஆட்கள் வெகுவாக 

தெற்கு நோக்கி வரத்தொடங்கிட நிறைய வேலை வாய்ப்புகளை நிறப்புவதும் வடக்கைச் சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். 

இதற்கு உரிய அடிப்படை காரணங்களை ஆய்வு இட்டால் இங்கு வேலை ஆட்கள் பற்றாக்குறையா அல்லது இங்கு இருப்பவர் தகுதி இன்மையா என்றால் இரண்டுமே இல்லை. 

வேலை வாய்ப்புகள் அதிகம் அத்துடன் கிடைக்கும் வேலையை ஏற்றுக் கொண்டு அதில் பணிபுரியும் ஊழியர்கள் வெகு அதிகமாக வடக்கில் இருந்தே வருகின்றனர். சற்று குறைவாக ஊதியம் இருந்தாலும் வடக்கு மக்கள் ஏற்றுக் கொண்டு உழைக்க தயாரானதே மிகவும் சரியான காரணமாக இருக்கலாம். 

 

வளரும் வடக்கு 

 

வடக்கில் பெரும்பாலும் தனி மனித கணக்குகள் நேர்மைக்குள் இருப்பது, பெரும்பாலான கணக்காளர்கள், தணிக்கையாளர்கள் உண்மைக்கு வெகு அருகில் பணிபுரியும் தன்மையை உடையவர்களாக இருப்பதும் பெரும்பாலும் காரணமாக இருக்கலாம். பொதுவான பொருளாதார வளர்ச்சியும் வடக்கை உயர்த்திட

பெரும் காரணமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. 

 

முறன்கள்

 

முரட்டுத்தனமாக முறன்களை முன்னிறுத்தி

முயலும் பெரும்பாலான தெற்கு பகுதி மக்கள் 

உண்மைக்கு வெகுதொலைவில் கணக்கு இயலை, ஆய்வு இயலை,  தணிக்கை இயலை வைத்து இருப்பதும் ஒருவகையில் முறன் வழியின் சாத்தியக் கூறுகள். 

 

தொழிலுக்கேற்ப தொழில் நுட்பம் அறிந்திருந்தும், தொழில் தொடங்கிட  இடம், உழைக்கும் ஆட்கள், முதலீடு இருந்தாலும் தகுதி திறன் குறைபாடுள்ளதால் பெரும்பாலும் தொழில் அல்லது வர்த்தகம், ஏற்றுமதி இறக்குமதி இன்னபிற செய்ய இயலாது தவிக்கும் தலைதாழ்ந்த நிலை இங்கு பரவலாக உள்ளதை மறுக்க முடியாது. 

 

ஆக எதையும் செய்ய செயல்திறன் வேண்டும், செயலாக்க செயல் தகுதி கட்டாயம் வேண்டும் 

செயல் தகுதியே உண்மையான செயலி என்று உணரவேண்டும். 

 

நிர்வாகம் தொடங்க தேவையானவை 

 

எந்த ஒரு தொழில் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கு கீழ் வரும் தேவைகளை அவசியம் 

பூர்த்தி செய்ய வேண்டும் 

 

1.நிலம் (land) 

2.தொழிலாளர்கள்(Labour ). 3.மூலதனம்( capital). மற்றும் 

4.கட்டமைப்பு (organisation ). 

 

இதில் நிலம் தேவைக்கேற்ப தயார்படுத்திட வேண்டும். 

 

தொழிலாளிகள் (அ) இவர்களே கல்வியுடன் முழு தகுதி உள்ளவர்(skilled). (ஆ) தகுதிக்கு பயிற்சியில் உள்ளவர்கள்  ( Semi skilled)(இ) மற்றும் தகுதியும் பயிற்சியும் இல்லாதவர்கள் (unskilled ) என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம். 

 

மூலதனம் 

 

மூலதனம் என்பது குறிப்பிட்ட தொழில் அல்லது வர்த்தகம் தொடங்கிட தேவையான 

முழுத் தொகை. பொதுவாக    வர்த்தகர் அல்லது தொழில் முனைவரின் பங்கு ( Equity) 30% மற்றும் கடன் 70% என்ற விகிதத்தில் கணக்கில் கொண்டு துவக்கப் படவேண்டும். சில போது இந்த விகிதாசாரம் மாற்றத்திற்கு உரியது.   

 

அமைப்பு அல்லது கட்டமைப்பு என்பது மேல் உள்ளவற்றை ஒழுங்காக தொகுத்து செயல்முறைக்கு கொண்டுவருவதே ஆகும். 

 

கடன் பெற்றிட

 

எந்த ஒரு வர்த்தகம் அல்லது தொழில் துவங்க

மேற்கண்ட எல்லாம் இருந்தாலும் கடன் பெற்றிட சில நிபந்தனைகளுக்கு  உட்பட வேண்டி உள்ளது. 

அவை:

1. திட்டவடிவு (project) 

2.பாதுகாப்பு (security) 

3. தகுதிதிறன் (eligibility) 

 

திட்டம் மற்றும் திட்ட வடிவு இதில் இறுதி நுகர்வு ( end use) அத்துடன் தயாரிப்பின் நோக்கம் 

(Business scope) ஆகியவை அவசியமானவை. 

 

பாதுகாப்புடன் ஏற்படுத்தப் படும் கடன் அளிப்பவருக்கும் பெறுபவர்க்கும் நிரந்தர உத்தரவாதத்தை தரும் என்பதில் சந்தேகம் இல்லை. 

 

 

1&2 நிபந்தனைகளை  இருந்தும் 3வது இல்லை என்றால் நிச்சயமாக கடன் வாங்கிட இயலாது. 

 

செயல் காரணி

 

மேற்கண்ட” தகுதி திறன்” மாத்திரமே செயல் காரணீ,அதனாலே இன்றியமையாதாகின்றது. 

இது தான் கடன் பெறவும், பெற்ற கடனுக்கு உரிய வட்டியை செலுத்தும் தகுதியையும் 

கணக்கிட்டு சொல்லிடும் செயலி ஆக செயல்படுகிறது. 

ஆக இந்த தகுதி திறன் இல்லை என்றால் அனேகமாக எல்லா திட்டங்களும் வெறும் 

திட்டங்களாகவே இருந்து விடும். 

ஆகவே தகுதி திறன் தான் மிகவும் அவசியமான செயல் காரணி என்பதை இதற்கு மேலும் சொல்லிட தேவை இல்லை. 

 

முன்தேவை(pre requisite) 

 

அடிப்படையில் முன் தேவைகளை(pre requisite ) பட்டியலில் 

இட்டால் முதல் கட்டமாக பூர்வாங்க சிலவு, 

(pre operative expenses ) தொடர்ந்து ஆரம்ப சிலவுகள்  (preliminary expense .) முதல் நிலை செயல் திட்ட தயாரிப்புக்குரிய உபரி செலவீனம் கொண்ட முன்னிறுப்புத் தொகை போன்றவையே. 

 

ஆரம்பம் & பூர்வாங்க தேவைகள்:

 

ஆரம்பச் செலவுகள் (preliminary expenses) 

துவக்க வெளித் தேவைகள்( Statutories, Legal 

Expenses) 

பூர்வாங்கச் செலவுகள் (pre operative expenses) துவக்க உள் தேவைகள்( Fixed assets, invariable others) 

  1. இவைகள் மூலாதாரமாக கணக்கில் கொள்ளப்படும். இவை மூலதனச் செலவுகள் 

என்று கணக்கிடப்படும். 

 

“உள்ளதைச் சொல்வேன் :நல்லதை செய்வேன், 

வேறு ஒன்றும் தெரியாது.” 

 

***************************************************

 

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam