Visitors have accessed this post 116 times.

மகாகவி பாரதி – யார் இவர் இவரைப் பற்றி சிறு குறிப்பு

Visitors have accessed this post 116 times.

மகாகவி பாரதி யார் இவர் இவரைப் பற்றி சிறு குறிப்பு

இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் தன்னுடைய கருத்துக்கள் மற்றும் கவிதைகள் மூலம் மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர்கள் பலர், அதில் தமிழ் நாட்டின் மிக முக்கியமான தலைவர் பாரதியார். உலக மக்கள் உள்ள வரை மறக்க முடியாத கவிஞர். இந்திய மக்களின் மீதும் தமிழ்மொழியின் மீதும் அதிகம் ஈடுபாடும், பற்றும் கொண்டவர் பாரதியார். தேசிய கவி என போற்றப்படும் மாபெரும் புரட்சி வீரர் மகாகவி பாரதியார் பற்றிய ஒரு சில வரிகளை இந்த தொகுப்பில் படித்தறிவோம்.

பாரதியின் பிறப்பு:

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி, பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன் விட்டிலும், வெளியிலும் சுப்பையா என்று அழைக்கப்பட்டார்.

பாரதியின் இளமை பருவம்:

பாரதியார்யின் 5 ஆம் அகவையில் அவரது தாயார் காலமானார். பாரதியின் தந்தை சின்னச்சாமி அய்யர் தன் மகன் தொழில்நுட்ப படிப்பின் மீது கவனம் செலுத்த வேண்டுமென விரும்பினார். ஆனால், பாரதியார் இலக்கியங்களைப் படிக்கவே விரும்பினார். சிறு வயதிலேயே அவருக்கு அற்புதமான கவிதைகளை எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார். அவருடைய 7 ஆம் அகவையில் இருக்கும் போது கவிதை எழுத தொடங்கினார். 11 வயது இருக்கும் போது கவிபாடும் ஆற்றலை பெற்று பாரதி எனும் பட்டத்தை பெற்றார். பாரதி என்பதன் பொருள் கலைமகள்.

பாரதியின் திருமண வாழ்வு:

அக்கால வழக்கப்படி பாரதிக்கும் கடயத்தைச் சேர்ந்த செல்லப்பாவின் மகள் செல்லம்மாவுக்கும் 1897ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது பாரதியின் வயது பதினான்கரை. செல்லம்மாவுக்கு வயது ஏழு. இதற்கு அடுத்த ஆண்டே பாரதியின் தந்தை இறந்தும் போனார். இதனால், காசியிலிருந்த தனது அத்தை உதவியுடன் அலகாபாத் பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருத மொழியையும், இந்தி மொழியையும் கற்றறிந்தார். இது மட்டுமல்லாமல் அவர் வடமொழி, இந்தி, பிரெஞ்சு ஆகிய பல மொழிகளையும் கற்றார். 4 ஆண்டு காலம் கழித்து எட்டயபுரத்தில் வந்து வாசிக்க ஆரம்பித்தார்.

பாரதியின் பணிகள்:

ஆங்கில கவிதை வடிவில் தனிமை இரக்கம்என்ற ஒரு பாடலை விவேகபாநு பத்திரிகைக்கு அனுப்பினார். 1904 ஜுலையில் அந்தக் கவிதை வெளியானது. இதுதான் பாரதி எழுதி வெளியான முதல் கவிதை. எட்டயபுரம் திரும்பிய பாரதி, அரண்மனையில் இரண்டாண்டுகளுக்கு மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழறிஞர் பணியாற்றி வந்தார். இதற்குப் பிறகு சென்னையிலிருந்து வெளியான தமிழ் தினசரியான சுதேசமித்திரனில் துணை ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தார் பாரதி.

பாரதியும் பத்திரிகையும்:

சுதேசமித்திரனில் சேர்ந்து ஓராண்டுக்குள்ளாகவே 1905-இல் சக்ரவர்த்தினி என்ற பெண்களுக்கான பத்திரிகையின் ஆசிரியராகவும் வேலை பார்க்க ஆரம்பித்தார் பாரதி. அதில்வந்தேமாதரம்என்ற பாடலை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். சுப்பிரமணிய பாரதியாருக்கு ..சிதம்பரம் பிள்ளை உடன் நட்பு ஏற்பட்டது. அதன் பிறகு பாரதியார் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார் அதில் அவர் நிவேதிதா அம்மையாரைச் சந்தித்தார் பாரதி. இந்தச் சந்திப்பு பாரதியிடம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அவரை தம் ஞான குருவாக ஏற்றுக்கொண்டார். 1906ஆம் ஆண்டு இந்தியா என்ற பத்திரிகையில் அரசியல் கட்டுரைகளைத் தவிர, பாடல்கள், கதைகள் ஆகியவற்றையும் பாரதி எழுதினார்.

1907ல் சூரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பாரதி கலந்துகொண்டார். இந்த மாநாட்டில்தான் மிதவாதப் பிரிவினருக்கும் தீவிரவாதப் பிரிவினருக்கும் மோதல் மூண்டது. இதில் பாரதியார் தீவிரவாதப் பிரிவிரை‌ ஆதரித்தார். 1907ஆம் ஆண்டு முதல் பாலபாரதா அல்லது யங் இந்தியா என்ற பெயரில் ஒரு ஆங்கில இதழிலும் பாரதி ஆசிரியராக இருந்தார். 1907ல் பாரதி பாடிய மூன்று பாடல்கள் சுவதேச கீதங்கள்என்ற தலைப்பில் சிறிய பாடல் தொகுப்பபாக வெளியானது. 1908ஆம் ஆண்டில் பாலகங்காதர திலகர் கைது செய்யப்பட்டார் பாரதியும் கைதுசெய்யப்படலாம் என்ற சூழல் நிலவியதால் புதுச்சேரியில் அடைக்கலம் புகுந்தார்.

புதுவையில் பாரதி:

பாரதி புதுச்சேரியில் அடைக்கலம் புகுந்தா  பிறகு, “இந்தியாபத்திரிகையின் அச்சகம் புதுவைக்குக் மற்றப்பட்டது. அந்த ஆண்டிலிருந்து புதுச்சேரியிலிருந்து வெளியாக ஆரம்பித்ததுஇந்தியாபத்திரிகை. புதுவையில் இருந்த காலகட்டத்தில் ஒரு பத்திரிகையாளராக பாரதியின் செயல்பாடுகள் மிகவும் தீவிரமானதாக இருந்து. சென்னையில் இருந்த போது வெளியாகி நின்று போயிருந்த விஜயா என்ற இதழ் 1909ல் இருந்து புதுச்சேரியிலிருந்து மீண்டும் வெளியாக ஆரம்பித்தது. 1910ல் இருந்து அரவிந்த கோஷின் கர்மயோகின் இதழின் தமிழ்ப் பதிப்பான கர்மயோகினி வெளியாக ஆரம்பித்தது. பாரதியின் இந்தியா, விஜயா ஆகிய இரு பத்திரிகைகளுக்கும் இந்தியப் பகுதியில் வெளியாவதை பிரிட்டிஷ் அரசாங்கம் தடை செய்தது. 1912ல் பகவத் கீதையின் தமிழ் மொழிபெயர்ப்பு, கண்ணன் பாட்டு, குயில், பாஞ்சாலி சபதம் ஆகிய முக்கியமான நூல்கள் உருப்பெற்றன. ஆனால், எல்லா நூல்களும் அந்த ஆண்டிலேயே வெளியாகவில்லை. சில நூல்கள் அவரது மறைவுக்குப் பிறகும் வெளியாயின. பாரதியார் தமிழில் மட்டும் அல்லாமல் ஆங்கிலத்திலும் புலமையுடன் எழுதக்கூடியவர். The Fox with Golden Tail என்ற ஆங்கில நூலில் அன்னி பெஸன்ட் அம்மையாரின் அரசியலைப் பற்றி ஒரு கேலிக் கதையை எழுதியிருக்கிறார். 1918வரை புதுச்சேரியில் இருந்த பாரதியார் மீண்டும் சென்னை மாநகரத்திற்குத் திரும்ப விரும்பினார். புதுச்சேரியில் இருந்து வெளியேறி பிரிட்டிஷ் எல்லையில் காலடி எடுத்து வைத்த உடன் பாரதியார் கைது செய்யப்பட்டார். நவம்பர் 20ஆம் தேதி கைதுசெய்யப்பட்ட பாரதியார் டிசம்பர் மாத மத்தியில் விடுதலை செய்யப்பட்டார் மொத்தம் 34 நாட்கள் சிறையில் இருந்தார் பிறகு பாரதியார் விடுதலை செய்யப்பட்டார்.

பாரதியின் இறுதி காலம்:

பாரதியார் விடுதலையானதும் தன் மனைவியின் ஊரான கடையத்தில் குடியேறினார். இரண்டு ஆண்டுகள் அங்கேயே இருந்தார். கடையத்தில் இருந்தபோது குடும்பத்தில் வறுமை தாண்டவமாடிய எனவே 1920- ல் மீண்டும் சென்னை வந்தவர் திருவல்லிக்கேணியில் குடியேறினார் மீண்டும் சுதேசமித்திரன் அலுவலகத்தில் உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். பாரதியார் 1921ஆம் ஆண்டு  ஜூலை மாதம், தான் வீட்டெதிரே இருந்த பார்த்தசாரதி பெருமாள் கோவிலுக்கு சென்றார். அங்கு கோவில் யானையால் தாக்கப்பட்டு காயமடைந்தார்.  சில நாட்களுக்குப் பிறகு 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி தனது 39 ஆவது வயதில் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலைப் பெற்றார்.

பாரதியாரின் சிறப்பு:

தமிழ் இலக்கிய வரலாற்றில் புதுக்கவிதைகளை தமிழுக்கு அறிமுகம் செய்த பெருமை பாரதியையே சாரும்.பாரதியின் முப்பெரும் பாட்டு அல்லது முப்பெரும் காவியங்கள் எனப்படுபவை, கண்ணன் பாட்டு குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகும். மேலும் பாரதமாதா, பெண்கள் விடுதலைகும்மி, போன்ற பல கவிதைகளை பாரதியார் தமிழுக்கு தந்துள்ளார். மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும் பாடியவர் பாரதியார்மாதர் தம்மை இழிவு செய்யும் மடைமை தன்னை கொழுத்துவோம்என்று பாடி பெண்கள் சுதந்திரமாக வாழவேண்டும், கல்வி கற்க வேண்டும், ஆண்களுக்கு இணையாக வேலை செய்ய வேண்டும், விரும்பியவர்களை திருமணம் செய்ய வேண்டும் என்ற கருத்துக்களை சமூகத்தில் வலியுறுத்தினார். இதுவே பிற்காலத்தில் புதிய சமூக மாற்றத்தையும் பெண்கள் சுதந்திரம் அடைவதற்கான விதை அன்று பாரதியினால் போடப்பட்டதாகும் பாரதியார் கண்ட புதுமை பெண்கள் இன்று தலைநிமிர்ந்து வாழ பாரதியார் அன்று போராடியிருந்தார்.

பாரதியாருக்கு அரசாங்கம் செய்த சிறப்புகள்:

பாரதியார் இறந்த பின்னாளில் அவர் பாடல்களை நாட்டுடமையாக்கும் கோரிக்கைகள் எழுந்ததன் பின்னணியில் 1949ல் அவரது பாடல்கள் அப்போதைய தமிழக முதல்வரால்  நாட்டுடமையாக்கப்பட்டன. பாரதியாரின் நினைவுகளை போற்றும் வகையில் எட்டயபுரத்தில் அவர் வசித்து வந்த இல்லமும் மற்றும் திருவல்லிக்கேணியில் வாழ்ந்த இல்லமும் நினைவு இல்லமாக தமிழ்நாடு அரசு மாற்றி இன்று வரை பொதுமக்களின் பார்வைக்காக பராமரித்து வருகிறது. இவரது பிறந்த ஊரான எட்டயபுரத்தில், பாரதியின் நினைவாக மணிமண்டபமும் இவருடைய திருவுருவச் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி போன்ற பன்முகம் கொண்டபாரதியாரை மக்கள், ‘கவி’, ‘மானுடம் பாடவந்த மாகவி’, ‘புது நெறி காட்டிய புலவன்’, எண்ணத்தாலும் எழுத்தாலும் இந்திய சிந்தனைக்கு வளம் சேர்த்தவர்’, ‘தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர்,  என்றெல்லாம் புகழ்கின்றனர். உலகதமிழர் நாவில் மக்கள்கவி பாரதியாரின் பெயர் அடிக்கடி உச்சரிக்கபடுகிறது என்றால் அது அவர் ஆற்றிய தொண்டிற்கு மிகையாகாது.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam