Visitors have accessed this post 784 times.

மகிழ்ச்சி தரும் பயணம்

Visitors have accessed this post 784 times.

மகிழ்ச்சி தரும் பயணம்

பயணம் என்பது வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது பயணம் என்பது மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும்  மன சோர்வை நீக்கும்  புதிய புதிய அனுபவங்களை கற்றுத்தரும் புதிய நபர்களை சந்திக்க வழி செய்து கொடுக்கும் பயணம்    நல்ல மனிதர்களையும் கெட்ட மனிதர்களின் பிரித்து பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் புதிதான அனுபவம் கிடைக்கும் நாம்  பார்க்காத இடங்கள், மரங்கள், செடிகள், விலங்குகள், பறவைகள் , மனிதர்கள் போன்றவற்றை நாம் காண்பதற்காக  ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக அமைகின்றது இது மன நிறைவை கொடுக்கும் பயணத்தின் மூலம் நாம் தனிமையில் இருப்பதை மறக்க முடியும்சிறியவர் முதல் பெரியவர் வரை மகிழ்ச்சியை தரக்கூடிய ஒன்றாக அமைவதனால் அது எந்த சூழ்நிலையிலும் எக்காரணத்தாலும் மனதை விட்டு மறையாது  நாம் சோர்வான நிலையில் கூட நாம் செய்த பயணங்களை நினைத்துப் பார்த்தால் அது நம் முகத்தில் புன்னகையை ஏற்படுத்தும் வாழ்க்கையில் ஒரு முறை கூட பயணம் செய்யாத ஒரு மனிதர்கள் கூட உலகில் இருக்க முடியாது அது மனிதர்களை மட்டுமல்ல விலங்குகள் பறவைகள் அனைத்தையும் குறிக்கும் அனைவரும் ஏதோ ஒரு சூழ்நிலையில் பயணம் செய்து இருப்பார்கள் பயணம் நம் சுற்றுச் சூழல் களை மாற்றி அமைக்கக்கூடிய ஒரு வழியாகும் நம் சுற்றுச் சூழல் மாறும் பொழுது நம் மன நிலையும் மாறும் உடலில் ஏதேனும் நோய் உள்ள போதோ இல்லை என்றால் மனக்கவலை உள்ள போதோ  நாம் பயணம் செய்வதால் நம் மனதில் மகிழ்ச்சி ஏற்படும் நம் முகத்தில் புன்னகை ஏற்படும் ஒரு வகையான அமைதியைத் தரும் இவை பல பிரச்சனைகளுக்கு தீர்வாக கூட அமையும் வயதான காலத்தில் பயணம் செய்வது நம் மனநிலையில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்  மனதிற்கும் உடலிற்கும் பயணம் என்பது ஒரு சிறந்த மருந்தாக அமையும் நாம் நம் வாழ்க்கையில் பல மகிழ்ச்சிகளை கொண்டு வரமுடியும்

Leave a Comment

Write and Earn with Pazhagalaam