Visitors have accessed this post 607 times.
மஞ்சளில் நற்குணம்:
மஞ்சள் ஒரு சிறந்த மூலிகையாகும். மஞ்சளில் அதிகப்படியான மருத்துவ குணம் உள்ளது. அடிபட்ட காயங்களில் மஞ்சள்தூள் பயன்படுத்தலாம் சிறியவர் முதல் பெரியவர் வரை காயங்களில் மஞ்சத்தூள் பயன்படுத்துவதன் மூலம் காயங்களில் ஏற்படும் கிருமித் தொற்றுகள் வராமல் பாதுகாத்துக் கொள்ளும் நாள்பட்ட ஆறாத காயங்கள் இருந்தால் அவற்றின் மீது மஞ்சள் தூள் மற்றும் சிறிய வெங்காயத்தை நன்றாக சூடு செய்து கட்டினால் ஒரு வாரத்திற்குள் அந்தக் காயம் முற்றிலும் குணமாகிவிடும் பெண்கள் மஞ்சள் தேய்த்து குளிப்பதன் மூலம் முகங்களில் பருக்கள் ஏற்படாமல் தடுக்கின்றது மற்றும் பெண்கள் உடலில் மஞ்சள் தேய்த்து குளிப்பதன் மூலம் தோல் நோய்கள் வராமல் தடுக்கின்றது மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினியாகும் மஞ்சளை முகத்தில் பெண்கள் உபயோகிப்பதன் மூலம் முகங்கள் பல பலக்கும் மற்றும் வழுவழுப்பாகவும் இருக்கும்
உப்பு வேப்பிலை மற்றும் மஞ்சளை நீரில் கரைத்து வாசலில் தெளித்தால் சிறுசிறு விஷ பூச்சிகள் வீட்டிற்குள் வருவதை தடுக்கின்றது மஞ்சளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நன்மையைத் தரும்
மஞ்சள் ஒரு இயற்கைப் பொருளாகும் எனவே எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாது அனைவரும் இவற்றை பயன்படுத்தலாம்.