Visitors have accessed this post 635 times.
- மட்டன் நீலகிரி குருமா:
தேவையான பொருட்கள்:
மட்டன் – 200 கிராம்
வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 100 கிராம்
பட்டை – 2 கிராம்
லவங்கம் – 2 கிராம்
ஏலக்காய் – 2
பச்சை மிளகாய் – 10 கிராம்
சோம்பு – 5 கிராம்
பூண்டு – 25 கிராம்
இஞ்சி – 25 கிராம்
மிளகாய் தூள் – 10 கிராம்
தனியா – 15 கிராம்
தேங்காய் – 1/2 மூடி
கொத்தமல்லி இலை – 1 கட்டு
எண்ணெய் – 50 மில்லி
உப்பு – தேவைக்கு
செய்முறை:
*இஞ்சி, பூண்டு,வெங்காயத்தை விழு தாக்கவும்.
*தேங்காய், பச்சை மிளகாய்,மல்லித ழை இவற்றை தனியே அரைக்கவும்.
*மட்டனை சுத்தம் செய்து நறுக்கி தனியே தயிரில் ஊற வைக்கவும்.
*கடாயில் எண்ணெய் காய வைத்து, காயிந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு சேர்த்து தாளிக்கவும்.
*வெங்காய விழுதை போட்டு நன்றாக வதக்கவும். பின்பு தக்காளி சேர்த்து நன்கு வதக்கி ஏனைய மசாலா பொருட்கள் சேர்த்து நன்கு வதக்கவும்.
*மட்டனை சேர்த்து அதனுடன் அரைத்த தேங்காய் விழுது ,உப்பு சேர்த்து குறைந்த தீயில் நன்கு வேக வைக்கவும்.
*மட்டனை இறக்குவதற்கு முன் மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை,கரி மசாலா தோல் சிறிது சேர்த்து நன்கு கிளறி மல்லி தலை தூவி இறக்கவும்.
*இதே முறையில் மட்டனுக்கு பதில் சிக்கன், மீன் குருமா செய்யலாம்.