Visitors have accessed this post 593 times.

மனித உடல்

Visitors have accessed this post 593 times.

இயற்கையின் உருவாக்கத்தில் பல விசித்திரமான விஷயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த விசித்திரமான விஷயங்களில் மனித உடலும் ஒன்று. நாம் உறங்கும்போதும், நான் விழித்திருக்கும் போதும், பயணம் செய்யும்போதும், ஆரோக்கியமான மனிதன் சோர்வாக இருக்கும்போதெல்லாம், நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் தன் வேலையைத் திறம்படச் செய்கிறது. நாம் நோய்வாய்ப்படும் வரை அவற்றின் மதிப்பு நமக்குத் தெரியாது. வாருங்கள், மனித உறுப்புகளைப் பற்றி சில விஷயங்களை அறிந்து கொள்வோம்.

மனித உடலின் சராசரி வளர்ச்சி 21வயது வரை மட்டுமே  21 வயதிற்கு பிறகு மனிதனுடைய எல்லா உறுப்புகளின் வளர்ச்சியும் நின்று விட்டாலும் மனித உடலில் மனிதன் இறக்கும் வரை வளரும் ஒரே உறுப்பு காது மட்டுமே . ஒரு மனிதன் சுமார் ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் அவனுடைய காதின் அளவு ஒரு சிறிய யானையின் காதின் அளவு இருக்கும். காதை பற்றிய இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் நாம் இறந்த பிறகும் . உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் செயல் இழந்தாலும் காது மட்டும் நாம் இறந்த  பின் அடுத்த 2 மணி நேரத்திற்கு செயல்பாட்டில் இருக்கும் இந்த காரணத்தினாலேயே இறந்த சில மணி நேரத்திற்கு இறந்த மனிதர்களுக்கு அருகில் யாரும் அழ வேண்டாம் என்று கூறுகின்றனர்.

நாம் கருவில் இருக்கும் பொழுது முதன் முதலில் உருவாகும் உறுப்பு இதயம் ஆகும் அதேபோல நாம் இறந்த பின்பும் முதலில் செயலிழக்கும் உறுப்பு இதயம் . நாம் இறந்த பிறகும் பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடன்  இருக்கும்.நாம்  பிறந்ததிலிருந்து வளராத ஒரே உறுப்பு  கண்விழி . இன்னும் இறந்த பிறகும் நம்முடைய நகங்களுக்கு எதுவுமே ஆவதில்லை

நம் உடலில் மிகவும் உறுதியான உறுப்பு பல் இது யானையின் தந்தத்தை விட வலிமையானது. ஒவ்வொரு சிறுநீரகமும் 1மில்லியன் வடி கட்டிகளைக் கொண்டுள்ளது  இவை ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகிறது.

மனிதன் தன்னுடைய வாழ்நாளில் 50 டன் உணவையும் 50,000 லிட்டர் நீரையும்  அருந்துகிறான். கண்களின் தசையானது ஒரு நாளைக்கு நூறு ஆயிரம் முறை அசைகிறது அதற்கு சமமான வேலையை நாம் நமது கால்களுக்கு கொடுக்க வேண்டும் என்றால் தினமும் 80 கிலோமீட்டர் நடக்க வேண்டும்
மனித உடலின் மிகச்சிறிய செல் விந்தணு ஆகும் . மனிதன் ஒரு அடி எடுத்து வைக்க 200 தசைகள் பயன்படுத்தப்படுகிறது  மனித வயிற்றில் உள்ள செரிமான அமிலமானது துத்தநாகத்தை கரைக்கும் சக்தி கொண்டது.
நம் உடலில் கட்டை விரலின் நீளமும் மூக்கின் நீளமும் சமமாக இருக்கும் . தும்மலின் வேகம் மணிக்கு சுமார் 150 கிலோமீட்டர்   ஒரு மனிதனுக்கு சுமார் 40 முதல் 100 தலைமுடிகள் தினமும் உதிர்ந்துவிடுகின்றன . நம் உடல் பாகத்தில் மிகவும் வேகமாக வளரக்கூடிய முடி தாடியில்  வளரும் முடிதான் நம் வாழ்நாளில் நாம் தாடியை எடுக்காவிட்டால் சுமார் 30 அடி நீளம் வரை வளரும்.  60 வயதிற்கு பிறகு  நாக்கின் சுவை மொட்டுக்கள் பெரும்பாலும் அழிந்து போயிருக்கும்

மனித மூளையில் 85 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது ஒரு மனிதனின் தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் வரை இருக்கும்.

  ஒரு மனிதனுடைய வாழ்நாளில் அவனுடைய இதயம் சராசரியாக 2000 மில்லியன் முறை துடிக்கும். 500 மில்லியன் ரத்தத்தை பம்ப் செய்யும் மனிதன் தூங்கும்போது கூட இதயம் 340 லிட்டர் இரத்தத்தை பம்ப் செய்யும் ஒரு நாளைக்கு  லட்சம் முறை துடிக்கும்.
நாம் தினமும் கண் இமைகளை சுமார் ஆறு வினாடிகளுக்கு ஒருமுறை நாம் இமைக்கிறோம். இந்த சிமிட்டல் முறை நமது வாழ்நாளில் 25 கோடி முறை நடக்கிறது. மனிதனுக்கு 15 வயது வரைதான் மூளை வளரும்.

ஒரு விஞ்ஞானி மனிதன் மரணம் அடைவதற்கு சில நொடி முன்பு  இருந்த இடையையும்  மரணம் அடைந்த உடனே இருந்த எடையையும் ஒப்பிட்டுப்பார்த்து  21 கிராம் குறைவாக இருந்தை  கண்டறிந்தார் . இதன் மூலமாக அவர் ஆன்மாவின் எடை 21 கிராம் என நிரூபித்தார்.

ஆரோக்கியமான ஒரு மனிதன் ஒரு நாளைக்கு சுமார் 23 ஆயிரம் முறை மூச்சை இழுப்பான்.

மனிதன் பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது.
ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள். நமது ரத்தம்  ஒரு நாளில் 30 கோடி கிலோ மீட்டர் பயணம் செய்கிறது.
நம் மனித உடலில் கிடைக்கும் கொழுப்பை வைத்து 10 சோப்புகள் தயாரிக்கலாம்.
நம் தசைகள் உருவாக்கும் வெப்பம் ஒரு லிட்டர் நீரை ஒரு மணி நேரம் கொதிக்க வைக்கப் போதுமானது.   நான் பிறக்கும் பொழுது 300 எலும்புகளுடன் பிறக்கின்றோம். பின் நாம் வளர்ச்சியடைந்த பின் 206 எலும்புகளே இருக்கும். ஏனென்றால்  பின் நம்முடைய வாழ்நாளில்  எலும்புகள் ஒன்றோடு ஒன்று இணைவதால் 94 எலும்புகள் குறைகின்றன.

ஒரு நாளைக்கு நான் 16 கிலோ காற்றை சுவாசிக்கிறோம.
உடலின் மிகப் பெரிய பகுதியாக இருப்பது தோல் பகுதி. சுமார் 2 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட பகுதி மனித உடலை வெப்பத்திலிருந்து நீரில் இருந்தும் பாதுகாக்கிறது.

நம் உடலில் உள்ள ஈரல் 500 வகையான வேலைகளை செய்கிறது. மனித உடலின் மிகப் பெரிய சுரப்பி கல்லீரல்தான்.
ஒவ்வொரு மனிதனும் அவனுடைய வாழ்நாளில் நடக்கும் கணக்கை பார்த்தால் அவன் பூமியை இரண்டு முறை சுற்றி வருவதற்கு சமமாக இருக்கும்.
நாம் கண்களைத் திறந்து கொண்டு தும்ம முடியாது. 
கண் தானத்தில் விழித்திரை பாதிப்படைந்த இரண்டு பார்வையற்ற  நபர்களுக்கு பொருத்தப்படுகிறது.
நீங்கள் கொட்டாவி விடும்போது நாக்கை தொட்டால் கொட்டாவி உடனே நின்றுவிடும்.
ஒரு மனிதனின் பாலினம் வயது மற்றும் அவனுடைய மரபை ஒரே ஒரு முடியை வைத்து தடயவியல் அறிஞர்கள் துல்லியமாக கண்டறிகின்றனர். நமக்கு மகிழ்ச்சியளிக்கும் செயல்களை பார்க்கும் பொழுது நமது விழித்திரையில் அது சாதாரண நிலையைவிட 45% அளவில் விரிந்து விடுகிறது.
நம் உடலில் இரத்த ஓட்டம் இல்லாத பகுதி நம் கண்ணின் கருவிழியாகும் . ஏனென்றால் கருவியானது அதற்குத் தேவையான ஆக்ஸிஜனை காற்றிலிருந்து நேரடியாக எடுத்துக் கொள்கிறது. பெண்களை காட்டிலும் ஆண்கள் மிகச் சிறிய எழுத்துக்களை கூட படிக்க முடியும். ஆண்களைக் காட்டிலும் பெண்கள் மிகச் சிறிய ஒளியைக் கூட கேட்க முடியும். உடலின் நீளமான எலும்பு தொடை எலும்பு ஆகும்.
உடலில் இரத்தம் ஒரு நாளைக்கு 16 கோடியே 80 லட்சம் மைல்கள் பயணிக்கின்றது. மனித மூளை பிறக்கும் போது 340 கிராம் 20 வயதில் 1400 கிராம். மனித மூளையின் வளர்ச்சி பிறக்கும்பொழுது 340 கிராம். ஆறாவது மாதத்தில் 750 கிராம்.
ஒரு வயதில் 970 காலமாகவும். 2வயதில் 1150 கிராம் ஆகும். மூன்று வயதில் ஆயிரத்து 600 கிராம்.
ஆறு வயதில் 1250 கிராம். 9 வயதில் 1300 கிராம் . 12 வயதில் 1350 கிராம் .20 வயதில் 1400 கிராம். 12 வருடங்களுக்கு பிறகு எட்டு வருடங்களில் மூளை  வெறும் 50 கிராம் அளவே வளர்கிறது.

பெண்களின் இதய துடிப்பு ஆண்களை விட அதிகம் .எல்லா பெரிய உயிரினங்களிலும்  இதயத்துடிப்பு குறைவாகவும். சிறிய விலங்கினங்களில் இதயத்துடிப்பு அதிகமாகவும் காணப்படுகிறது. இதயத்தின் எடை அரை கிலோகிராமிற்கு குறைவாகவே இருக்கும். நீளமான மோதிர விரல் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவது குறைவு என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பல் ஈறுகளில் நோய்தொற்று உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். நம் இதயத்தின் அளவு கைப்பிடி அளவே இருக்கும்.
நம் உடலில் 7% இரத்தம் உள்ளது. ரத்ததானம் செய்வதால் உடல் வலிமை குறைந்து போகாது

Leave a Comment

Write and Earn with Pazhagalaam