Visitors have accessed this post 792 times.

மர்ம புத்தகம்|கதை

Visitors have accessed this post 792 times.

முன்னுரை:

இந்த உலகில் பல மர்மம் நிறைந்த விஷயங்கள் உள்ளன.இது போன்று ஒரு மர்மம் நிறைந்த கற்பனை கதையைத்தான் பார்க்கப்போகிறோம்.

ராஜபுறம்:

ராஜபுறம் எனும் கிராமம்,இங்கு சில மக்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர்.

பல வீடுகள் காலியாகவே இருக்கின்றது.இந்த மர்மத்தை தெரிந்து தனது பத்திரிகையில் எழுத கணேசன் எனும் பத்திரிகையாளர் இந்தகிராமத்திற்கு வருகின்றார்.இவர் இந்த ஊரிலுள்ள நண்பர் வீட்டில் தான் தங்க உள்ளார்.

நண்பர்:என்னப்பா கணேசா எப்படி இருக்க?

கணேசன்:நல்லா இருக்க டா.

கணேசன்:ஆமா இந்த ஊர்ல ஏதோ மர்மமான விஷயம் நடக்குதாமே என்ன அது?

நண்பர்:இப்போதான இங்க வந்திருக்க,போக போக நீயே தெரிஞ்சுப்ப.

கணேசன்:ஏ இந்த ஊர்ல பாதி வீட்டுல ஆளே இல்ல?

நண்பர்:அது ஒரு பெரிய கதை நா உனக்கு அப்பறம் பொறுமையா சொல்ற அப்பத்தா உனக்கு புரியும்.

இந்த ஊரில் ஒரு வழக்கம் இருக்கிறது,6 மணிக்கு மேல் யாரும் இந்த ஊரைவிட்டு வெளியில் போகமாட்டார்கள்.

ஒரு பெரிய அரண்மனை இருக்கிறது இது 300 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த அரண்மனை.இங்கு இரவில் சென்றவர்கள் உயிருடன் திரும்பியது இல்லை.எனவே 6 மணிக்கு மேல் இந்த பக்கம் யாரும் செல்வதில்லை.

நண்பர்:சரி பயணம் பன்னது சோர்வா இருக்கும் போய்குளிச்சிட்டுவா சாப்பிடலாம்.

கணேசன்:சரி நா போய்ட்டு குளிச்சிட்டுவர.

இந்த அரண்மனையின் உள் ஒரு மாயபுத்தகம் இருப்பதாகவும்,அதை சில ஆவிகள் பாதுக்காப்பதாகவும் இந்த ஊர்மக்கள் நம்புகிறார்கள்.

கணேசன்:சரி வா போகலாம்.

நண்பர்:எங்க?

கணேசன்:அட நாதா அப்பவே சொன்னல அந்த அரண்மனைக்கு போகணும்னு.

நண்பர்:டேய் நம்ம அங்க போககூடாது,அங்க போனவங்க எல்லா என்ன ஆனாங்கன்னு உனக்கு தெரியாது.பேசாம ரெண்டுநாள் இருந்து ஊரசுத்திபாத்துட்டு கிளம்பு.

கணேசன்:என்னடா இந்தகாலத்துல கூடவா பேய், பிசாசுனு நம்பிட்டு இருக்க.சரி நீவரலனா பரவால்ல நா போகபோற.

நண்பர்:இல்ல நா போகவிடமாட்ட.உனக்கு ஒண்ணுனா உங்க வீட்டுக்கு யாரு பதில் சொல்றது. பேசாம போய் சாப்பிட்டுட்டு ஓய்வெடு.

அந்த அரண்மனைக்கு சென்று அங்கு என்ன இருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் கணேசனுக்கு அதிகமாகிறது.

இரவு ஆகிவிட்டது,கணேசனும் அவன் நண்பனும் உறங்கிகொண்டு இருக்கிறார்கள்.கணேசன் உறக்கத்திலிருந்து விழிக்கிறான். அந்த அரண்மனையில் என்ன இருக்கிறது என்று பார்க்க இவன் நண்பனிடம் சொல்லாமல் செல்ல முடிவெடுகிறான்.கணேசன் சென்று கதவை திறந்து வெளியில் செல்ல நினைக்கும்போது,ஒருவர் கணேசனை தடுக்கிறார்,அவர் முகம் துணியால் மறைத்திருப்பதால் அவர் யார் என்று தெரியவில்லை.

அந்தநபர்:நீ அந்த அரண்மனைக்கு போககூடாது போனால் அது உனக்கு பெரிய பிரச்சனையை உண்டாக்கும்.

என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார்.

ஆனால் கணேசனுக்கு அங்கு என்ன இருக்கிறது என்று பார்த்து அதை பத்திரிகையில் எழுத வேண்டும் என்று நினைக்கிறான்.

அங்கு செல்வதற்குள் இந்த அரண்மனையை பற்றி தெரிந்து கொள்ள நினைக்கிறான் கணேசன்.

காலை ஆகிறது.

கணேசன்:நீ அரண்மனைக்குதா கூட்டிட்டு போகமாற்ற அந்த அரண்மனைப்பற்றியாது சொல்லு நா தெரிஞ்சிக்குற.

நண்பர்:சரி நீ என் நண்பன் அதனால ஒரு ரகசியத்தை உனக்கு சொல்ற,ஆன இதை உன்பத்திரிகையில் எழுதகூடாது.

கணேசன்:சரி நா இதை பத்தி எழுதமாட்ட.என்ன ரகசியம் சொல்லு.

நண்பர்:இந்த அரண்மனைக்கு போனவங்க உயிர்போயிடத்தா சொன்னாங்கல,அவங்க உயிர் அதனால போகல,சில கொள்ளைக்காரங்க அவங்கள கொன்னுட்டாங்க.இந்த அரண்மனை உள்ள ஏதோ ஒரு மர்ம பொருள் இருக்கு,அதைபாதுக்காகருத்துக்காக,அந்த அரண்மனை வம்சாவழியில வந்த குடும்பம் இப்படி இதை மாதிடாங்க(அந்த அரண்மனைக்கு உள்ள போனதுனாலத்தா அவங்க உயிர்போச்சி அப்டின்னு).இதுக்கு பயந்துட்டுதா சிலர் இந்த ஊற விட்டு வெளிவூர் போய்ட்டாங்க.

கணேசன்:ஆமா இது உனக்குமட்டும் எப்படி தெரியும்?

நண்பர்:ஒரு நாள் நா அந்த அரண்மனைவம்சாவழி குடும்பம் தங்கியிருக்க வீட்டுபக்கம் போயிருந்த அப்போதா அவங்க இதை பத்தி பேசிட்டு இருந்தாங்க அதை என்காதால கேட்ட.

கணேசன்:சரி அந்த மர்ம பொருள் ஒரு புத்தகம்னு சொல்றாங்க?

நண்பர்:அப்டிதா எல்லோரும் பேசிக்குறாங்க.

கணேசன்:அப்போ அந்த புத்தகத பாதுகாக்கும் அந்த ஆவி பொய்யா?

நண்பர்:அதை பத்தி எனக்கு சரியா தெரியல.

இரவு ஆகிறது கணேசனும் அவன் நண்பனும் உறங்க சென்று விட்டனர்,கணேசனுக்கு தூக்கம் வரவில்லை.இவனை அரண்மனைக்கு போகாமல் தடுத்தவன் யார் என்று யோசித்துக்கொண்டிருக்கிறான்.

கணேசன்:எதுக்கு என்ன அந்த அரண்மனைக்கு போகக்கூடாதுன்னு சொன்னா.அவ யாரா இருப்பா.

கணேசனின் மனதில் இந்த விஷயம் ஓடிக்கொண்டிருக்கிறது.

காலை ஆகிறது.

நண்பர்:டே கணேசா இப்போ நம்ம ரெண்டுபேரும் கோவிலுக்கு போய்ட்டு வந்துரலாம் வா.

கணேசன்:எதுக்குடா?

நண்பர்:வா சொல்ற.

இருவரும் கோவிலுக்கு செல்கின்றனர்.

கணேசன்:இப்பொயாது சொல்லுடா எதுக்கு கோவிலுக்கு கூடிட்டுவந்த?

நண்பர்:என்னடா மறந்துடியா? இன்னைக்கி உன்னோட பிறந்தநாள்.

கணேசன்:ஆமா டா மறந்துட.வேற ஒரு விஷயத்த யோசிச்சிட்டு இருந்ததால இதை மறந்துட.

நண்பர்:அப்படி என்னடா யோசன?

கணேசன்:ஒன்னோ இல்லடா நா அப்புறமா சொல்ற.

நண்பர்:சரி வா வீட்டுக்கு போலாம்.

இருவரும் வீட்டிற்கு செல்கின்றனர்.

கணேசனின் நண்பன் கணேசனுக்கு ஒரு சட்டையை பிறந்தநாள் பரிசாக கொடுக்கிறான்.

கணேசன்:எதுக்குடா உனக்கு வீண் செலவு.

நண்பர்:இதுல என்னடா இருக்கு,இன்னைக்கி நீ இந்த சட்டையத்தா போடணும் சரியா.

கணேசன்:சரி நாபோட்டுக்குற.

கணேசன் அந்த சட்டையை உடுத்திக்கொள்கிறான்.இருவரும் காலை உணவை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள்,அப்போது கணேசனின் புதுசட்டை மீது சாம்பார் கொட்டிவிடுகிறது.கணேசன் அதை தண்ணீரால் துடைக்கசெல்கிறான்.அங்கு தண்ணீரை வைத்து துடைக்கிறான் ஆனால் கரை போகவில்லை.அதை கண்ணாடியில் பார்க்கிறான்,அப்போது கணேசனின் முகத்தில் ஒரு அதிர்ச்சி.என்னவென்றால் அன்று இரவு ஒருவர் முகத்தை மறைத்துக்கொண்டு கணேசனை அரண்மனைக்கு போகாமல் தடுத்திருப்பார்,அவர் உடுத்தி இருந்த சட்டையும்,கணேசன் உடுத்தி இருக்கும் சட்டையும் ஒன்றாக இருக்கிறது.அதுமட்டுமல்லாமல் இப்போது கணேசனின் சட்டையில் எங்கு அந்த கரை இருக்கிறதோ, அதே கரை கணேசனை தடுத்தவர் சட்டையிலும் இருந்தது.கணேசன் மிகவும் அதிர்ச்சியடைகிறான்.

கணேசன்:அவ யார இருப்பா?ஒரேமாதிரியான சட்டை சரி,எப்படி இப்போ ஏ சட்டைல இருக்க கரை அப்படியே அவ சட்டைல இருந்துச்சி?எல்லாமே குழப்பமா இருக்கே.

என்று புலம்பிக்கொண்டிருக்கிறான் கணேசன்.

கணேசன்:இதுக்கானவிடை தெரியனுனா அந்த அரண்மனைக்கு கண்டிப்பா போய்யாகனும்.எப்படியாது இன்னைக்கு இரவு அங்க போய்பாதுடனும்.

என்று முடிவெடுகிறான்.

இரவு ஆகிறது இவன் நண்பனிடம் சொல்லாமல் அரண்மனைக்கு செல்கிறான்.காட்டை தாண்டி அரண்மனையை சென்றடைகிறான்.அந்தஅரண்மனை பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக உள்ளது.300 வருடம்ஆனாலும் அந்த கம்பிரம் குறையவில்லை,பார்ப்பதற்கு அழகாகவும் உள்ளது.அந்த நேரத்தில் அந்தப்பக்கம் ராந்தல் விளக்கை எடுத்துக்கொண்டு வயதான ஒருவர் வருகிறார்.கணேசன் சென்று ஒரு மரத்தின் பின் ஒலிந்துக்கொள்கிறான்.அந்த முதியவர் யார் என்று உற்றுப்பார்க்கும்போதுதான் தெரிகிறது அவர் அந்த அரண்மனை வம்சாவழியை சேர்ந்தவர் என்று.

கணேசன்:இவரு இந்த நேரத்துல இங்க என்ன பண்றாரு.

அவரை பின் தொடர்ந்து அரண்மனைக்குள் அந்த முதியவருக்கு தெரியாமல் செல்கிறான் கணேசன்.அந்த முதியவர் அங்கு ஒரு அறையின் முன் ராஜ ரகசியம் என்று உச்சரிக்கிறார்,அப்போது அந்த அறையின் கதவுகள் திறக்கிறது.இதை ஒளிந்திருந்து கணேசன் பார்த்துக் கொண்டிருக்கிறான்.பிறகு அந்த முதியவர் ஒரு பொருளை வணங்குகிறார், அது ஒரு துணியால் மறைக்கப்பட்டிருக்கிறது.பிறகு அந்த முதியவர் அந்த துணியை எடுக்கிறார்,அதில் ஒரு புத்தகம் இருக்கிறது.

கணேசன்:ஓ அப்போ நம்ம நண்பன் சொன்னது உண்மைதா!

அந்த புத்தகத்தையும் வணங்கிவிட்டு அந்த புத்தகத்தை அந்த துணியால் மூடி விடுகிறார் அந்த பெரியவர்.அந்த அறையை திரும்பவும் அந்த மந்திரத்தை உச்சரித்து பூட்டிவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார்.

அவர் அங்கிருந்து சென்றதும் அங்கு ஒளிந்திருந்த கணேசன் அந்த அறையிடம் சென்று அந்த மந்திரவார்த்தையை உச்சரிகிறான்(ராஜ ரகசியம்).அந்த அறையும் திறக்கிறது.பிறகு உள்ளே சென்று அந்த புத்தகத்தை திறந்துபார்க்கும்போது அதில் எந்த வார்த்தைகளும் இல்லை.

கணேசன்:என்ன இந்த புத்தகத்துல எந்த வார்த்தையும் இல்ல,இதையா இவளோநாள் ராகசியம்னு சொல்லிட்டு இருந்தாங்க?

அங்கு அந்த புத்தகத்திற்கு கீல் ஒரு இடம் இருப்பதை கணேசன் பார்க்கிறான்.

கணேசன்:என்ன இது இங்க ஒரு சின்ன இடம் ரகசியமா வச்சி இருக்காங்க,என்னவா இருக்கோ?

பிறகு அங்கு தன் கையைவிட்டு பார்க்கிறான் அங்கு ஒரு கண்ணாடி இருக்கிறது.அது என்னவென்று பார்த்துக்கொண்டிருக்கும்போது கணேசனின் ராந்தல் விளக்கின் ஒளி அந்த கண்ணாடியில் பட்டு அந்த புத்தகத்தின் மேல் படுகிறது,அப்போது அந்த புத்தகத்தில் சில வார்த்தைகள் தெரிகிறது,அதில் நீங்கள் எந்த நேரத்திற்கும்,எந்த காலத்திற்கும்,எந்த இடத்திற்கும் செல்லலாம் என்ற வார்த்தை அந்த புத்தகத்தில் தோன்றுகிறது.

கணேசன்:என்ன ஒண்ணுமே புரியலயே.எல்லாகாலத்துக்கும்,எல்லா இடத்துக்கும் போலாம்னு போட்டு இருக்கு,ஆனா எப்படி போறது?

என்று கணேசன் யோசித்துக்கொண்டிருக்கும்போது அந்த புத்தகத்திற்கு அருகில் ஒரு எழுதுகோல் தோன்றுகிறது.பிறகு இன்னொருவார்த்தையும் அந்த புத்தகத்தில் தோன்றுகிறது.நீங்கள் எங்கு செல்ல வேண்டும்,எந்த காலகட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பதை எழுதுங்கள் என்று அந்த வார்த்தை இருக்கிறது.

கணேசன்:இதுல எழுதிபாக்கலாமா?ஓரு வேல உண்மையா இருக்குமோ.

கணேசன் அந்த புத்தகத்தில் எழுத நினைக்கிறான்.

நான் என் நண்பன் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று எழுதி அதை பரிச்சிக்க பார்க்கிறான்.

பிறகு அதை எழுதி விடுகிறான்.அப்போது கணேசன் அங்கு மறைந்து தனது நண்பன் வீட்டில் தோன்றுகிறான்.கணேசனுக்கு பெரும் ஆச்சர்யம்,இது உண்மையா என்று தன்னை கிள்ளி பார்த்துக்கொள்கிறான்.அந்த புத்தகமும் அவன் கையிலே இருக்கிறது.அங்கு கணேசனின் நண்பன் உறங்கிக்கொண்டிருக்கிறான்.

கணேசன்:இது உண்மைதாபோல!

பிறகு நான் அரண்மனைக்கு போக வேண்டும் என்று எழுதி அங்கு சென்று விடுகிறான்.அப்போது கணேசனுக்கு ஒரு விஷயம் தோன்றுகிறது.

கணேசன்:ஒரு வருசத்துக்கு அப்புரோ இந்த நேரத்துல என்ன பண்ணிக்கிட்டு இருக்கோன்னு பாக்கலாம்.

நான் ஒரு வருடத்திற்கு முன் நோக்கி செல்ல வேண்டும் என்று அந்த புத்தகத்தில் எழுதுகிறான்,ஆனால் அவன் அங்கேயே தான் இருக்கிறான் இவனுக்கு பயங்கர குழப்பம்.

கணேசன்:என்னடா இது ஏ இந்த புத்தகம் வேல செய்யல?

பிறகு அந்த புத்தகத்தை அங்கேயே வைத்துவிட்டு கணேசன் அரண்மனையின் வெளியில் வருகிறான்,அங்குயாரோ மரத்தின் கீழ் படுத்திருக்கின்றார்.

கணேசன்:என்ன இது நம்ம இந்த அரண்மனைக்கு உள்ளபோகும் போது இங்க யாருமே இல்லையே,இதுயார இருக்கோ?

கணேசன் அருகில் சென்று பார்க்கிறான் கணேசனுக்கு பெரிய அதிர்ச்சி.அது யார் என்றால்அதுவும் கணேசன்தான்.கணேசனுக்கு பேர் அதிர்ச்சி.

கணேசன்:எப்படி இவ என்னமாறியே இருக்கா?

கணேசன் அவனை எழுப்பநினைக்கிறான்,பிறகு தான் தெரிகிறது அவன் கொலை செய்யப்பட்டிருக்கிறான் என்று.பிறகு எதர்ச்சியாக கைகடிகாரத்தை பார்க்கும் போது அதில் 2004 என்று இருகிறது.

கணேசன்:இது எப்படி 2003ல இருந்து 2004 ஆ மாறுச்சி?ஓ அப்படினா நாம ஒரு வருஷோ  முன்னோக்கிவந்துட்டோம்.என்று புரிந்துக்கொள்கிறான்.

கணேசன்:அப்படினா இங்க கொலை செய்யப்பட்டிருக்கிறது நாமதான்.

கணேசனுக்கு பயம் அதிகரிக்கிறது.பிறகு அரண்மனையின் உள்சென்று அந்த புத்தகத்தில் நான் நிகழ்க்காலம் செல்ல வேண்டும் என்று எழுதி நிகழ்க்காலத்திற்கு சென்றுவிடுகிறான்.அந்த புத்தகத்தை அங்கேவைத்துவிட்டு வீட்டுக்கு சென்று படுத்துக்கொள்கிறான்.கணேசனின் முகம் பதட்டத்தால் நிறைந்திருக்கிறது. அவன்மனதில்,யார் இவனை கொள்ளப்போவது என்ற கேள்விகள் எழுந்துக்கொண்டிருக்கிறது.அப்போது அவனுக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது.

கணேசன்:அந்த அரண்மனைக்கு போய் அந்த புத்தகது மூலமா ஒருவருடம் கடந்து,சரியா கொலை செய்யப்படறதுக்கு முன்னாடி போய்ட்டு நாம தடுத்திடலாம்.

என்று அந்த அரண்மனைக்கு செல்ல நினைக்கிறான் கணேசன்.

கணேசன்:நம்ம நண்பனை எழுப்பி கூடகூட்டிட்டுபோலாமா?வேணா அவன் பயப்படுவா,நாம தனியவே போகலாம்.

கணேசன் தனியாகவே அந்த அரண்மனைக்கு திரும்பவும் செல்கிறான்,அங்கு சென்று அந்த புத்தகத்தில் எழுதி,கொலைநடப்பதற்கு முன் செல்ல முயல்கிறான்,ஆனால் கணேசனால் காலத்தை தாண்டி செல்ல முடியவில்லை.கணேசனுக்கு ஒன்றும் புரியவில்லை,மேலும் முயற்ச்சிக்கிறான் ஒன்றும் நடக்கவில்லை,பிறகு அங்கிருந்து சென்று விடுகிறான்.

காலை

கணேசன் ஊருக்கு செல்ல தயாராகிக்கொண்டிருக்கிறான்,கணேசனி  ன் முகம் ஒரு பதடத்திலே இருக்கிறது.அவன் நண்பன் விழித்து பார்க்கிறான்.

நண்பன்:என்னடா உன் துணியலாம் எடுத்து வச்சிட்டு இருக்க?

கணேசன்:ஒரு அவசர வேல உடனே ஊருக்கு போயாகனும்.

நண்பன்:இன்னும் ரெண்டு நாள் இருப்பனு சொன்ன?

கணேசன்:இல்லடா நா கண்டிப்பா போயாகனும்.

நண்பன்:சரி இரு நா வந்து Busஏத்திவிடுற.

கணேசன்:இருக்கட்டோ டா நா போய்க்குற.

என்று சொல்லிவிட்டு அவசர,அவசரமாக கெளம்பிவிடுகிறான்.

நண்பன்:என்ன இவ இவளோபதட்டமாபோறா?

கணேசன் ஊருக்கு சென்று விடுகிறான்.அங்கு அவனுக்கு அந்த ஊரில் நடந்த நிகழ்வுகள் நினைவில் வந்துகொண்டே இருக்கிறது.

கணேசன்:யாரு நம்ம ஒரு வருஷம் கழிச்சி கொல்ல போரங்க?எப்படி அதுல இருந்து தப்பிக்கிறது.

இப்படி யோசித்துக்கொண்டே இருக்கிறான்.

சில நாட்கள் கடந்தோடுகிறது.

கணேசன் அவனுக்கு ராஜபுரத்தில் நடந்த நிகழ்வுகளை ஒரு கற்ப்பனை கதையாக எழுத நினைக்கிறான்.

பிறகு அவன் யோசித்தது போல அந்த விஷயங்களை ஒரு கற்ப்பனை கதையாக எழுதி வெளியிடுகிறான்.இந்த கதை பலரை கவர்கிறது.

ஒரு வருடத்திற்க்கு பிறகு

கணேசன் அவன் எழுதி இருந்த அந்த கதை உண்மையில் நடந்தகதை,அதை வெளியில் சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள் என்பது கணேசனுக்கு தெரியும்,எனவே அவன் அதை ஒரு கற்பனை கதையாக எழுதி இருந்தான்.

கணேசன் ஒருவருடம் முன்னோக்கி செல்லும் போது அங்கு எதிர்க்கால கணேசன் இறந்திருப்பான்,அதுவரை கதையை முடித்திருப்பான்.இந்த கதை சுவாரசியமாக இருந்ததால் அதற்க்கு பிறகு என்னநடந்தது என்று அந்த கதையை எழுதுமாறு அந்த புத்தகத்தை வாங்கியவர்கள் கேட்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

உண்மை என்னவென்றால் அதற்கு பிறகு என்ன நடக்கும் என்பது கணேசனுக்கே தெரியாது.

கணேசனுக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது.அந்த ராஜபுறதுக்கு செல்ல நினைக்கிறான்.பிறகு உறங்கிவிடுகிறான்,திடிரென்று பதற்றமாக விழித்துக் கொள்கிறான்.

கணேசன்:ச்ச கனவா?

தண்ணீர் குடிக்க சமையல் அறைக்கு செல்கிறான் அங்கு அந்த அறையில் பயங்கர வெளிச்சம் தோன்றுகிறது,கணேசனுக்கு ஒன்றும் புரியவில்லை.பிறகு அந்த அறையின் உள் சென்று பார்க்கும்போது அவன் ராஜபுரத்திற்க்கு வந்துவிடுகிறான்,அங்கு சில தூரத்தில் இவனது நண்பன் வீடு இருக்கிறது.இவனது நண்பன் வீட்டை திறந்து கொண்டு இன்னொரு கணேசன் வெளியில் வருகிறான்,அப்போது ஒருவர் முகத்தை மறைத்து கொண்டு அந்த கணேசனிடம் ஏதோ கூறிவிட்டு செல்கிறார்,அதை இந்த கணேசன் பார்த்துக் கொண்டிருக்கிறான்.திடீர் என்று கணேசன் விழித்துக்கொள்கிறான்.என்னவென்றால்,இதுவும் கனவுதான்.

கணேசன்:இந்த கதையையும் முடிக்கனும்,நம்ம கொலை செய்யப்போவதையும் தடுக்கனும் இதுக்கு ஒரேவழி அந்த ஊருக்கு திரும்பவும் போயாகனும்.

கணேசனின் நண்பனிடம் ஊருக்கு வருவதாக சொல்லிவிட்டு அந்த ஊருக்கு செல்கிறான்.அங்கு சென்றதும் இரவு இவன் நண்பனிடம் சொல்லாமல் அந்த அரண்மனைக்கு செல்கிறான்.

கணேசன்:கொலை நடக்கப்போவத எப்படியாவது தடுக்கனும்.அதுக்கு நாம காலத்தை பின் நோக்கிபோகணும்.

என்று,கணேசன் அரண்மனைக்கு போவதை காலத்தின் பின் நோக்கி சென்று தடுக்க நினைக்கிறான்.அப்படி கடந்தகால கணேசனை அரண்மனைக்கு போகாமல் தடுத்துவிட்டால் இந்த கொலை நடக்காது என்று நம்புகிறான் கணேசன்.பிறகு அந்த மாயபுத்தகத்தில் எழுதி கடந்தகாலத்துக்கு செல்கிறான்.அங்கு கடந்தகால கணேசனை தடுபதற்க்கு முன் இவனை கடந்தகால கணேசன் பார்த்துவிடக்கூடாதென்று பக்கத்தில் இருந்த துணியை எடுத்து முகத்தை மறைத்துக் கொள்கிறான்.பிறகு கடந்தகால கணேசன் அரண்மனைக்கு போக வெளியில் வரும் வரை காத்திருக்கிறான்.பிறகு கடந்தகால கணேசன் வீட்டைவிட்டு வெளியில் வரும் போது அவனிடம்சென்று,

நிகழ்கால கணேசன்:நீ அந்த அரண்மனைக்கு போககூடாது,அப்படி போனா ஒரு பெரிய பிரச்சனைல மாடிப்ப என் பேச்சை நம்பு.

என்று கூறிவிட்டு நிகழ்கால கணேசன் சென்று விடுகிறான்.பிறகு தான் நிகழ்கால கணேசனுக்கு ஒரு நினைவு வருகிறது.

நிகழ்கால கணேசன்:இதே விஷயம் தான ஒரு வருசத்துக்கு முன்னாடி நமக்கு நடந்துச்சி.நாமகூட யாரு என்ன அரண்மனைக்கு போகக்கூடாதுன்னு தடுத்திருப்பாங்கனு குழம்பிட்டு இருந்தல?அவகூட என்னமாறியே சட்டை போட்டுட்டு இருந்தா.அப்போ ஒரு வருசத்துக்கு முன்னாடி நாமதா நம்மையே தடுத்திருக்கோ.அப்போ இந்த கடந்தகால கணேசன் நம்ம பேச்சை கேட்கமாட்டா அரண்மனைக்கு போவா கொலையும் நடக்கும் என்று புரிந்து கொள்கிறான் நிகழ்கால கணேசன்.

நிகழ்கால கணேசன்:அந்த கொலையை தடுக்க வேற வழியதா பாக்கணும்.

இந்த கொலை நடப்பதற்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கிறது என்பதை புரிந்துகொள்கிறான்.

இரண்டு நாட்கள் கழித்து

இரவு ஆகிறது,கணேசன் அவன் நண்பன் உறங்கியயுடன் அந்த அரண்மனைக்கு செல்கிறான்.

நிகழ்கால கணேசன்:எப்படியாவது நாம கொலை செய்யப்படப்போவத தடுக்கனும்.

என்று யோசித்துக்கொண்டிருக்கிறான் கணேசன். அப்போது அந்த அரண்மனையில் விளக்கின்வெளிச்சம் தெரிகிறது.

நிகழ்கால கணேசன்:ஓ அப்படினா இப்பதா கடந்தகால கணேசன் ஒரு வருஷம் முன்னோக்கி இங்க வந்து இருப்பா.இப்போ அவன் கொழப்பதுல இருப்பா ஒருவருஷம் முன்நோக்கிவந்தது தெரியாம.

அப்படி யோசித்துக்கொண்டிருக்கும்போது அங்கு சில கொள்ளையர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்,இதை நிகழ்கால கணேசன் பார்த்துவிட்டான்.

நிகழ்கால கணேசன்:இப்போ அந்த கொள்ளைக்காரங்க அரண்மனைக்குள்ள போயிடாங்கனா கடந்தகால கணேசனை ஏதாவது பண்ண வாய்ப்பு இருக்கு.இவங்கள எப்படியாவது திசைதிருப்பனும்.

என்று யோசிக்கிறான்.

பிறகு ஒரு மரத்தடியில் தனது மூச்சை அடக்கிக்கொண்டு படுத்துக்கொள்கிறான்.அந்த கொள்ளையர்களும் இங்கு ஒருவன் இருப்பதை பார்த்து,அரண்மைக்குள் போகாமல் இவனிடம் வருகின்றனர்.நிகழ்கால கணேசனை எழுப்பிபார்கிறார்கள்,

இவன் எழுந்திருக்கவில்லை,மூச்சுஇருக்கிறதா என்று பார்க்கும்போது மூச்சு இல்லை.

கொள்ளையன்:டேய் இவ செதுக்கெடக்குறான், இப்போ நாம இங்க இருந்தா நாம மாடிப்போ வாங்க போயிடலாம்.

என்று கொள்ளையர்கள் அங்கிருந்து சென்று விடுகிறார்கள்.

நிகழ்கால கணேசன்:எப்பா எவளோ நேரம் மூச்ச அடக்குறது.

நிகழ்கால கணேசன் எழுந்திரிக்கும்போது கடந்த கால கணேசன் அரண்மனையில் இருந்து வெளியில் வருகிறான்.திரும்பவும் நிகழ்கால கணேசன் தனது மூச்சை அடக்கிக்கொண்டு படுத்துக்கொள்கிறான்.பிறகு கடந்தகால கணேசன் வந்து பார்க்கிறான்,

அதிர்ச்சியடைகிறான், ஒருவருடம் முன்னோக்கிவந்துவிட்டதை புரிந்து கொள்கிறான்.பிறகு அரண்மனைக்குள் சென்று அங்கிருந்து நிகழ்காலத்திற்கு பதட்டத்துடன் சென்று விடுகிறான்.இப்போது நிகழ்கால கணேசன் எழுந்துகொள்கிறான்,இப்போது தான் நிகழ்கால கணேசனுக்கு புரிகிறது,நாம் கொலைசெய்யப்படவில்லை,நாம் கொலைசெய்யப்பட்டது போல நடித்தது தான் காரணம் என்று.பிறகு கணேசனின் மனம் அமைதியாகிறது,இப்போது எதையும் மாற்ற தேவையில்லை,இந்த புத்தகத்தின் ரகசியம்,ரகசியமாகவே இருக்கட்டும் என்று முடிவெடுகிறான்.இந்த கதை இத்துடன் முடிகிறது.

   நன்றி

 

 

 

 

இக்கதையில் இடம்பெற்றிருக்கும் அனைத்தும் ஒரு கற்ப்பனை.இந்த கதை ஒரு பொழுதுபோக்கு நோக்கதிற்கு உருவாக்கப்பட்டவை மட்டுமே.

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam