Visitors have accessed this post 167 times.
மழையின் சிறு துளியினில்
நனைத்திடும் மகிழ்ச்சி துளி
ஏழையின் கூரை வீட்டினில்
வழிந்திடும் கண்ணீரைத் துடைக்கும் துளி
தோழியர் கூட்டத்துடன் துள்ளி
விளையாடும் இன்பத்துளி
சாலையில் வழிந்திடும் நீரோடையில்
காகிதக் கப்பலுடன் விளையாடும் துளி
விவசாயிகள் நெற்றியில் வழிந்திடும்
வியர்வையின் வெற்றித் துளி
உலகத்தோர் அனைவரின் மூச்சுத்துளி
ஆம் – அதுவே மழைத்துளி !.