Visitors have accessed this post 830 times.
முடி உதிர்வதற்க்கான காரணங்கள் இரண்டு விஷயங்கள் மட்டுமே,
* முதலாவது, சத்து குறைபாடு…..
* இரண்டாவது, பராமரிப்பின்மை….
சத்து குறைபாடு
சத்து குறைபாடு காரணமாக முடி உதிர்கிறதா என்பதை கண்டறிய சின்ன டிப்ஸ், நம்முடைய முடியில் சிறிதளவு எடுத்துக் கொண்டு அதை சற்று ஈரத்தை நனைத்து சிக்கில்லாமல் வைத்துக் கொண்டு தங்களது விரல் நுனியால் அழுத்தம் கொடுத்து சற்று மேலிருந்து கீழாக இழுத்தால் கையில் முடி வந்திருக்கும். அதில் 6 முதல் 8 முடி வரை இருக்கும் பட்சத்தில் அது சாதாரணமானது. அதுவே 10 அல்லது அதற்கு மேல் வந்திருந்தால் அது சாதாரணமானது அல்ல. இது சத்து குறைபாடு காரணமாக இருக்கலாம்.
இப்படி இருக்க நீங்கள் மருத்துவரை அணுகி தீர்வு காண வேண்டும்.
சாதாரணமாக முடி உதிர்தல் பிரச்சினை உள்ளவர்கள் சிறிய அளவிலான டிப்ஸ் பாஃலோவ் செய்தாலே போதுமானது.
ஷாம்பு பயன்படுத்தும் போது சிலர் அப்படியே பாட்டிலோடு கொட்டுவார்கள். அது தவறானது. ஷாம்புவை நேரடியாக முடிக்கு பயன்படுத்தும் போது அதிலுள்ள கெமிக்கல் காரணமாக முடி உதிர்தல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
ஷாம்பு பயன்படுத்தும் போது அதற்கு சரிபாதியாக தண்ணீர் கலந்து தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்தலை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.
ஷாம்புவை முடியின் வேர் கால்கள் வரை தேய்த்து குளிக்க வேண்டும் இல்லை என்றால் தலையின் வேர் கால்களிலேயே தங்கிவிடும்.
தங்கள் முடியின் அளவுக்கேற்ப ஷாம்புவை பயன்படுத்தினாலே போதுமானது. அளவுக்கு அதிகமாக ஷாம்புவை பயன்படுத்தும் போது முடி உதிர்தல் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆயில் மசாஜ்
தலைக்கு ஆயில் மசாஜ் என்பது மிகவும் புத்துணர்ச்சியாகவும், இரத்த ஓட்டம் சீராக இருக்கவும் உதவுகிறது.
அதுமட்டுமல்லாமல் ரிலாக்ஸாக இருக்கவும் உதவுகிறது.
சிலருக்கு தலையில் எண்ணெய் வைத்துக் கொண்டு வெளியே சென்றால் பிடிக்காது, தலை ஒட்டி இருப்பது போல உணர்வார்கள்.
அவர்கள் தலைக்கு குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு ஆயில் மசாஜ் செய்து குளிக்கலாம் அல்லது முதல் நாள் இரவு எண்ணெய் தேய்த்து விட்டு மறுநாள் காலையில் ஷாம்பு பயன்படுத்தி குளிக்கலாம்.
எந்தவொரு மசாஜ் செய்தாலும் தலை முடியின் வேர் கால்கள் வரை தேய்க்க வேண்டும்.
இது போன்ற சில விஷயங்களை ஃபாலோவ் செய்தாலே முடி உதிர்தல் பிரச்சினை வராமல் தடுக்கலாம்.
இந்த டிப்ஸ் எல்லாமே ஆரம்ப கட்டத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே. அடிக்கடி முடி உதிர்தல், தலை சீவும் போது, தலை குளிக்கும் போது, முடி அதிகமாக விழும் போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்று கொள்வது நல்லது.
இந்த டிப்ஸ் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
நன்றி🙏