Visitors have accessed this post 708 times.

முடி உதிர்வா உடனடி தீர்வு

Visitors have accessed this post 708 times.

தலை முடி உதிர்வை தடுக்கும் முறைகள்:

 தலை முடி அதிகமாக உதிர காரணம் உங்கள் உடலில் புரோட்டின் மற்றும் இரும்பு சத்து குறைய தொடகுவதே எனவே சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

 புரதம் மறறும் இரும்பு சத்து அதிகம் உள்ள பாதாம், முட்டை, கறிவேப்பிலை,பயறு வகைகள், நெல்லிக்காய் போன்ற உணவுகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்.

உடல் சூடு அதிகம் இருந்தாலும் முடி உதிரும்.இதை தடுக்க வாரம் இரு முறை நல்லெண்ணை தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். ஷாம்பூ , கண்டிஷனர் போன்ற இரசாயன கலவைகளை தவிர்த்து இயற்கை சீகைகாய், அரப்பு பயன்படுத்தலாம்.

உங்கள் முடி உதிர்வை உடனடியாக நிறுத்த கருவேப்பிலை ஜூஸ் மற்றும் முளை கட்டிய பாசிபயரு தினமும் சாப்பிட வேண்டும்.

கறிவேப்பிலை சிறிது மற்றும் ஒரு நெல்லிக்காய் சேர்த்து நீர் விட்டு அரைத்து வடிகட்டி உப்பு அல்லது தேன் கலந்து பருகவும். இது இள நரையை போக்கும்.

குளிக்கும் முன் ஒரு ஸ்பூன் பாசிபயரு மற்றும் வெந்தயத்தைச் ஊற வைத்து தேயிங்காய் பால் விட்டு அரைத்து அரை மணி நேரம் கழித்து குளிக்க முடி உதிர்வு குறைந்து அடர்த்தியாக வளரும்.

இயற்கை எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள்:

கருவேப்பிலை – ஒரு கைப்பிடி

கருசலாகண்ணி – ஒரு கைப்பிடி

நெல்லிக்காய் – 4

வெந்தயம் – 1 ஸ்பூன்

கருஞ்சீரகம் – 1 ஸ்பூன்

செம்பரு்திப்பூ – 5

தேங்காய் எண்ணெய் – 1/2 லிட்டர்

 வாணலையில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கொடுத்து உள்ள பொருட்கள் அனைத்தையும் அரைத்து சேர்கவும்.மிதமான தீயில் பத்து நிமிடம் காய்து வடிகட்டி பயன்படுத்தவும்.பட்டு போன்ற அடர்த்தியான கூந்தல் வளரும்.

வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam