மேற்கு தொடர்ச்சி மலை

Visitors have accessed this post 190 times.

 

நாம் வாழும் உலகில் பல்வேறு வகையான உயிரினங்கள் வாழ்கின்றன. ஆனால் தற்காலத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு வனங்கள் அழிக்கப்படுவது சாதாரணமான ஒரு விஷயம் ஆகிவிட்டது. இதற்கு மிக முக்கிய காரணம் மக்கள் தொகை பெருக்கம். இந்த விஷயம் ஒருபுறம் இருந்தாலும்   வனவிலங்குகளை  பாதுகாக்காவும்  வளங்களை பாதுகாக்கவும் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது  அதனால்தான் இன்னும் இந்த உலகில் ஏதோ ஒரு சில இடங்களில் வனங்களும்  வன விலங்குகளும் நிம்மதியாக வாழ்கின்றன .  அந்தவகையில் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையிலான சில சுற்றுலாத் தளங்களான வனங்களையும் வன விலங்குகளையும் பற்றி இனி காண்போம்.

மேற்கு தொடர்ச்சி மலைகள்

தொடர்ச்சி மலைகள் இந்தியத் துணைக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளன இம்மலைத்தொடரானது   குஜராத் மற்றும் மராட்டிய எல்லையில்  உள்ள தபதி ஆற்றுக்குத் தெற்கே இது தொடங்குகிறது. கோவா, கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா, வழியாக செல்லும் இம்மலைத்தொடர் கன்னியாகுமரியில் முடிகிறது. இம்மலைத் தொடரின் நீளம் சுமார் 1600 கிலோ மீட்டர் இம்மலைத் தொடரின் உயரம் 900 கிலோ மீட்டர் . இம்மலைத் தொடர்  1,60,000 சதுர கிலோ மீட்டரில் கொண்டுள்ளது. இம்மலைத்தொடரின் மிக உயரிய சிகரமாக ஆனைமுடி உள்ளது. இதன் உயரம் 2,695 மீட்டர். உலகின் பல்லுயிர் வளம் மிக்க பகுதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்றாகும். இங்கு சுமார் 139 வகையான பாலூட்டிகள் உயிர்வாழ்கின்றன. 108 வகை பறவைகளும்  176 வகை இருவாழ்விகள் மற்றும் 5000 வகையான பூக்கும் தாவரங்கள் உள்ளன இம்மலைத் தொடரை உலகின் பாரம்பரிய இடமாக (UNESCO)  அறிவித்துள்ளது.

இம் மலைத்தொடர் அரபிக்கடலில் இருந்துவரும் குளிர்ந்த காற்றைத் தடுத்து மேற்கே உள்ள கேரளா மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளில். அதிக மழையை கொடுக்கிறது. இம்மலைத்தொடருக்கு  மேற்கே உள்ள தக்காணப் பீடபூமி குறைந்த அளவு மழையைப் பெறுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சுற்றுலாத்தலங்கள் நீலகிரி ,ஏலகிரி ,ஆனை மலை, பொதிகை மலை ,பழனி மலை, கொடைக்கானல் ,குற்றாலம்,

மேற்கு தொடர்ச்சி மலையில் வாழும் வன விலங்குகளை பற்றி இனி பார்ப்போம்

வங்காளப் புலி

சுந்தரவனக் காளைகளுக்கு வெளியே இம்மலைத் தொடரிலேயே வங்காளப் புலிகள் அதிகமாக காணப்படுகின்றன . இவ்விலங்கு உணவுச் சங்கிலியில் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவின் தேசியச் சின்னமாக வங்காள புலி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய  சிறுத்தை

இந்திய சிறுத்தையினம் மழை காடுகள், ஊசியிலைக் காடுகள், மற்றும் இலையுதிர் காடுகளில் காணப்படுகின்றது. இவற்றின் வாழ்விடம் அழிக்கப்படுவதாலும் . இடப்பற்றாக்குறையின்  காரணமாகவும் . மேலும் இவை கால்நடைகளை வேடையாடுவதாலும்  இவை அழிந்து வரும் வன விலங்குகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது

இந்திய  யானை

மேற்கு தொடர்ச்சி மலையில் காணப்படும் மிக முக்கிய உயிரினம் யானை  . இவை அதன் தந்தத்திற்காக வேட்டையாடப் படுவதாலும்   அவற்றின் வாழிடம் அழிப்பு போன்ற காரணத்தினாலும் இவையும்  அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்திய காட்டெருமைகள்
காட்டெருமைகள் அடிப்படையில் சாதுவானவை  ஆயிரம் கிலோவுக்கு மேல் எடை கொண்டவை காடுகள் அழிக்கப்படுவதால் இவை விளை நிலங்களை நோக்கிப் படையெடுக்கின்றன . மனிதர்கள் இவற்றைத்துறத்துவதால்  அதனுடைய உள்ளுணர்வால் உந்தப்பட்டு இது மனிதர்களை தாக்கும். புலிகளுக்கு காட்டெருமை மிக முக்கிய  இரையாகும்.

Lion Tailed Macaque (சோலை மந்தி).
இது ஒரு பாலூட்டி உயிரினமாகும் இவை தோலில் மயிர்கள் மற்றும்  மின்னும் கருமை நிறத்தை கொண்டவை . இவற்றின் தமிழ் பெயரை அறியாதவர்கள்  சிங்கவால் குரங்கு என்று தவறாக அழைக்கின்றனர்.

நீலகிரி மந்தி

இவை மேற்குத் தொடர்ச்சி மலையின் நீலகிரி பகுதியில் காணப்படுவதால் இவற்றிற்கு நீலகிரி மந்தி எனப் பெயர். இதன் உடல் பளபளப்பாக கருப்பு நிறத்திலும் தலைப்பகுதியில் மஞ்சளும் பழுப்பும் சேர்ந்து காணப்படும். இவை நீளமான வாலுடன் சாதாரண குரங்கின் அளவிலேயே இருக்கும். இவை அதிக எண்ணிக்கையில் கூட்டமாக வாழும்.

நீலகிரி வரையாடு

இந்த இனம் மேற்குத் தொடர்ச்சி மலைக்கே   உரித்தான சிறப்பான இனம் . 4000 அடி உயரத்தில் உள்ள முகடுகளில் வாழும் சிறப்பான பண்பைபெற்றுள்ளது  தமிழ்நாட்டின் மாநில விலங்கு நீலகிரி வரையாடு

இந்திய மலை அணில்

அணில் வகைகளில் மிகப் பெரிய உடலமைப்பைக் கொண்டது இந்திய மலை அணில் . இது ஒரு தாவர உண்ணி ஆகும் இது பகல் வேளையில் இரைதேடும். மகாராஷ்டிரா மாநிலத்தின் மாநில விலங்கு இந்திய மலையணில்

புள்ளிமான்

இந்திய காடுகளில் காணப்படும்  ஒரு பொதுவான விலங்கினம் புள்ளிமான். இவை பார்ப்பதற்கு வெள்ளை நிற புள்ளிகளுடன் மிக அழகாக இருக்கும்.  உயிரினங்களில் உணவுச் சங்கிலியில் முதலிடத்தில் இருக்கும் விலங்குகளின்  மிக முக்கிய இரை புள்ளிமான்.
இவை தவிர மேற்கு தொடர்ச்சி மலையில் பசுமை போர்த்திய புல்வெளிகள் உள்ளன. இவை மழை நீரை தக்க வைத்துக் கொள்ளும் ஆற்றலைப் பெற்றது. மேலே குறிப்பிட்ட  விலங்குலும்  மேலும்  பல வகையான அபூர்வமான உயிரினங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழ்கின்றன. பல்லுயிர்கள் , பறவைகள் மற்றும் பலவகையான பூச்சியினங்கள், தாவரங்கள் என பல மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளன.
மேற்கு தொடர்ச்சி மலையில்   சலீம் அலி பறவைகள் சரணாலயம் உள்ளது. முதுமலை விலங்குகள் சரணாலயம். முண்டந்துறை களக்காடு வனவிலங்கு சரணாலயம் இங்குதான் உள்ளது. குற்றால அருவியும் மேற்குத் தொடர்ச்சி மலையில்தான் உள்ளது. ஜோக் ஃபால்ஸ் அருவி மற்றும் தலைக்காவிரி இங்குதான் உள்ளது.
இமயமலையில் பனி உருகுவதால் வற்றாத ஜீவநதிகள் உருவாகிறது. ஆனால் பனியே இல்லாமல் ஜீவ நதிகளை உருவாக்கும் சோலைக்காடுகளை போர்த்தி கொண்டிருப்பது மேற்கு தொடர்ச்சி மலை .
ஆயிரக்கணக்கான வனவிலங்குகளின் இருப்பிடத்தை மனிதன் சூறையாடியதால்
இந்தியாவின் வளமிக்க காடுகள் அழிந்து விட்டன. தற்போது மேலும்  அழிக்கப்பட்டு கொண்டும் இருக்கின்றன . இதனால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதியை நோக்கி படையெடுக்கத் தொடங்கின. இதனால் விளைநிலங்கள் அழிக்கப்பட்டு விவசாயிகளுக்கு சேதம் ஏற்படுத்தப்படுகிறது. இதன் விளைவு வனவிலங்குகள்  உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையின் மரங்களான  சந்தன மரம், தேக்கு மரம், ஈட்டி மரம் ,மற்றும் செம்மரங்கள்  அழிக்கப்பட்டு காடுகள் சூறையாடப்படுகின்றன. மேற்கு தொடர்ச்சி மலை என்னும் இறைவன் நமக்கு கொடுத்த கொடை  இன்று நம் கண் முன்னே அழிந்து வருகிறது.இந்த வேகத்தில் காடுகள் அழிந்தால்  வருங்காலத்தில் நாம் காடுகள் வளர்ப்பு குறித்த கவனம் செலுத்தவில்லை என்றால் மேற்கு தொடர்ச்சி மலை என்ற ஒன்று இல்லாமலே போய்விடும்.
காடுகளை பாதுகாப்போம் என்ற உறுதிமொழியை நாம் ஒவ்வொருவரும் ஏற்க வேண்டும்.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam