Visitors have accessed this post 428 times.
வல்லாரை சட்னி :
தேவையான பொருட்கள் :
வல்லாரை கீரை – 1 கப்
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – 1
பூண்டு – 6 பல்
வர மிளகாய் – 2
பச்சை மிளகாய் – 2
கடலை பருப்பு – 2 ஸ்பூன்
உளுந்து பருப்பு – 2 ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கைப்பிடியளவு
புளி – 1 நெல்லிக்காய் அளவு
கடுகு – 1 டீஸ்பூன்
உப்பு,பெருங்காயம், எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்கடலை பருப்பு ,உளுந்து பருப்பு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்,வர மிளகாய்,பச்சை மிளகாய்,தக்காளி,பூண்டு ,கறிவேப்பிலை,வல்லாரை கீரை, புளி ஆகியவற்றை ஒவொன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.
ஆரிய பின் மிக்சியில் போட்டு உப்பு சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,பெருங்காயம் சேர்த்து தாளித்து பரிமாறவும்.
வல்லாரை கீரை பயன்கள் :
இரத்தத்தில் ஹிமோகுளோப்பின் அளவை உயர்த்தும்.
வல்லாரை கீரை நரம்புகளை பலப்படுத்தி ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.
வாய்புண்ணுக்கு வல்லாரை சிறந்த மருந்தாகும்.
வல்லாரைப் பொடியைக் கொண்டு பல் துலக்கினால் பல்லில் உள்ள கறைகளைப் போக்கும்.
பல் ஈறுகளைப் பலப்படுத்தும்.
வல்லாரை கீரை மலச்சிக்கலைப் போக்கி, வயிற்றுப் புண், குடல்புண்ணை ஆற்றுகிறது.