Visitors have accessed this post 827 times.
வடா பாவ்
தேவையான பொருட்கள் :
பொருள் – அளவு
உருளைக்கிழங்கு ஒரு கப் (வேக வைத்து மசித்தது)
பச்சைமிளகாய் 4
இஞ்சி 1துண்டு
பூண்டு 1
லெமன் ஜூஸ் 1 டீஸ்பூன்
எண்ணெய் 1 டீஸ்பூன்
சீரகம் 1ஃ4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் 1ஃ4 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
கொத்தமல்லி இலை 1 கப்
எண்ணெய் தேவையான அளவு
கடலை மாவு 3 கப்
மிளகாய்த் தூள் 3 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
சதுரமான பன் 10
புதினா சட்னி 4 டீஸ்பூன்
செய்முறை :
🍟 வடா செய்வதற்கு முதலில் உருளைக்கிழங்கு, பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, லெமன் ஜூஸ், எண்ணெய், சீரகம், மஞ்சள் தூள், உப்பு, கொத்தமல்லி இலை, எண்ணெய் ஆகியவற்றுடன் சிறிதளவு நீர் சேர்த்து நன்றாக கெட்டியாக கலந்து சிறிது நேரம் வைக்கவும்.
🍟 பிறகு கடலை மாவு, மிளகாய்த் தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, அதனுடன் சிறிது நீர் சேர்த்து, பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளவும். பிறகு வடா மசாலாவை எடுத்து உருண்டைகளாகவோ அல்லது வட்டமாகவோ தட்டி கடலை மாவு கரைசலில் தோய்த்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
🍟 பிறகு புதினா சட்னியை அரைத்து வைத்துக் கொள்ளவும். வடா பாவ் பரிமாறுவதற்கு முன்பாக பன்னை இரண்டாக நறுக்கி, அதில் புதினா சட்னியை இரு பக்கங்களிலும் தடவி, இந்த சூடான வடாவை ஒரு பக்கத்தில் வைத்து, அடுத்த ஸ்லைஸால் மூடி உடனே பரிமாறவும். சுவையான வடா பாவ் தயார்.