Visitors have accessed this post 834 times.

வாதம்-பித்தம் கபம்

Visitors have accessed this post 834 times.

வாதம் பித்தம் கபம்

உடலில் வாதம் பித்தம் கபம் எப்போதும் சமநிலையில் இருக்கும் வகையில் நாம் வைத்திருக்க வேண்டும்… எது மிகுதியாக ஆனாலும்… குறைந்து போனாலும் ஏதேனும் தொந்தரவுகள் வந்து கொண்டு இருக்கும்… இதில் உடல் வெப்பம் சற்று அதிகமாக ஆகும் போது.. இரவு நேரத்தில் அது தலைக்கு ஏறி விடும்.. அவ்வாறு தலைக்கு  ஏறும் போது கபத்தை தூண்டிவிடக் கூடியதாக அமைகிறது… அதன் காரணமாக தலையில் சைனஸ் நீர்கோர்ப்பு தலைவலி மூக்கடைப்பு மூக்கில் சதை வளர்ச்சி போன்ற கபம் சார்ந்த தொந்தரவுகள் ஏற்படும்…இதை குறைப்பதற்கு ஆக வேண்டிய எல்லாம் செய்தால் கபம் அளவாகும்.. இந்த தொந்தரவுகள் மறையும்… 

இதை செய்ய 

1. காலையில் எழுந்ததும் தலைக்கு குளித்து விட வேண்டும்.. வெப்பம் சமநிலை அடையும்.. 

2. இரவில் மண்சட்டியில் வைத்த சாதத்துடன் தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சற்று தூக்கலாக கைப்பிடியளவு சி.வெங்காயம் பொடியாக நறுக்கி போட்டு கலந்து மூடிவைத்து காலையில் இந்த நீராகாரம் உண்ணும் போது.. 

3.வாரத்தில் இரண்டு நாட்கள் முழு உடம்புக்கு தலைக்கு என்று நல்லெண்ணெய்… விளக்கெண்ணெய் தேய்த்து ஊறவைத்து வெந்நீரில்  குளித்து வருதல்… 

முக்கியமாக பெருங்குடல் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்..

Leave a Comment

Write and Earn with Pazhagalaam