Visitors have accessed this post 764 times.

வாழை இலை குளியல்

Visitors have accessed this post 764 times.

வாழையிலைக் குளியல்

என்பது இயற்கை மருத்துவ முறையில் பரிந்துரைக்கப்படும் முக்கிய புற மருத்துவக் குளியலாகும். உடலின் மேல் வாழை இலைகளைப் போர்த்திக்கொண்டு அதன்மேல் வாழை நார் அல்லது கயிற்றால் கட்டிவிட வேண்டும்.

வாழை இலைகளின்மீது சூரியக் கதிர்கள் படுவதால் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும். உடலுக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கும். கழிவுகள் மற்றும் உடலில் தேங்கிய கொழுப்பு கரைந்து உடல்எடை குறையும். வாழையிலைக் குளியலுக்கு முன்பு சிறுநீர் கழித்துவிட வேண்டும். எளிய உணவுகளைச் சாப்பிடுவதில் தவறில்லை. நெற்றிப் பகுதியில் கைக்குட்டை அளவு ஈரத்துணியைக் கட்ட வேண்டும்.

கழுத்து வலி, முதுகுவலி, தோள்பட்டை வலி, தலைவலி, ஒற்றைத் தலைவலி, மூக்கடைப்பு, நுரையீரல் கோளாறுகள், சர்க்கரை நோயால் வரும் பாத எரிச்சல், தூக்கமின்மை, சிறுநீரகச் செயலிழப்பு ஆகியவற்றுக்கும் வாழை இலைக் குளியல் உகந்ததாகும்.

புற்றுமண் குளியல்

என்பது கறையான் புற்று மண் எடுத்து சில மூலிகைபொடிகளை கலந்து நீர்விட்டுப் பிசைந்து உடலில் பூசிக்கொள்ள வேண்டும் 60 நிமிடங்கள் வரை மண் குளியல் செய்யலாம். பின்னர் குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். இதனால் உடலைக் குளிர்வித்து, நச்சுத்தன்மையை நீர்க்கச்செய்து உறிஞ்சி வெளியே எடுத்துவிடும். பசியின்மை, மனஉளைச்சலால் ஏற்படும் தலைவலி, உயர் ரத்த அழுத்தம், தோல் நோய்கள் போன்றவற்றுக்கும் இந்தச் சிகிச்சை பயன்படும் 

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam