Visitors have accessed this post 709 times.
அமைதியாக வாழ்ந்த இந்திய நாட்டில்
ஆங்கிலேயர்களின் அக்கிரமம்……
எதிர்பாரா சூழ்ச்சியின் காரணமாய்
எங்கெங்கும் நிலவியது பதற்றம்…
பாமர மக்கள் பயந்து நடுங்க
பறிபோனது நம் உரிமை……
அடிமைச் சங்கிலியை நம்மீது வீச
அடிமையானோம் ஆங்கிலேயர் வசம்…..
எத்துனை பல போராட்டங்கள்????
எதிர்த்து நின்ற மானிடர்கள்
மறைந்துபோன மாயம் என்ன??….
எத்துனை எத்துனை ஆண்டுகள்????
எத்துனை எத்துனை தவிப்புகள்????
தகர்ந்தது சங்கிலி
கிட்டியது விடுதலை
மகிழ்ச்சியாய் வாழ்ந்த தருணம்……
எங்கும் சுதந்திரம்,,,,, எதிலும் சுதந்திரம்,,,,
இன்றோ…
தலைகீழாய் மாறும் நிலை…
நம் உரிமைக்காக போர் செய்யும் நிலை…
வாழ்வதற்கு இடமில்லாமல் தவிக்கும் நிலை…
அன்று ஆங்கிலேயன்
இன்று இந்தியன்
நமக்கே தெரியாமல் நாம் அடிமைகளாய் வாழ்கிறோம்…….
வந்தாரை வாழ வைக்கும் ஊர் என்பது மறைந்து
விரட்டியடிக்கும் காலம் ஏற்பட்டுவிட்டது……
அந்நிய நாட்டவருக்கு அடிமையாய் தள்ளப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது….
அடிமை,,,, அடிமை,,,, அடிமை,,,,
எத்துனை ஆண்டுகள் தான் அடிமையாய் வாழ்வது!!!!!…..
போராடுவோம்!!
நம் உரிமைக்காக போராடுவோம்!
போராடுவோம்!!
நம் விடுதலைக்காக போராடுவோம்!
விடுதலையே நம் உரிமை!!!!!!
- நம் உரிமையே விடுதலை!!!!!!