Visitors have accessed this post 649 times.
வெண்டைக்காயின் மருத்துவப் பயன்கள்
வெண்டைக்காய் சாப்பிட்டால் அறிவு வளர்ச்சி உண்டாகும். இரத்த சோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழவு வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு என அனைத்து நோய்களையும் தீர்க்கும் சிறந்த மருந்தாக வெண்டைக்காய் உள்ளது.
வெண்டைக்காயில் அடங்கியுள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து உடலை குளுமையாக வைக்கிறது. இதிலுள்ள கரையும் நார்ச்சத்தானது கொல்ஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுவதன் மூலம் இதய நோய்கள் வருவதற்கான ஆபத்தை குறைக்கின்றது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமான போலிக் அமிலம் வெண்டைக்காயில் அதிகமாக உள்ளது. கர்ப்பத்ததில் உள்ள குழந்தையானது உள்ளே நல்லபடியாக வளரவும் முதல் ட்ரைமெஸ்டரின் போதான குழந்தையின் நரம்பு குழாய்களின் வளர்ச்சிக்கும் இந்த போலிக் அமிலமானது மிகவும் அவசியம்.
வெண்டைக்காயின் வழவழப்புத் தன்மையில் அதிக மருத்துவப் பலன்களும் மறைந்துள்ளது. இந்த வழவழப்பில் உள்ள நார்ச்சத்து அல்சர் பாதித்தவர்களுக்கு அருமருந்தாக உள்ளது. தவிர மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிற்று உபாதைகள் அனைத்தையும் குணப்படுத்த கூடியவையாக உள்ளது.
பிஞ்சு வெண்டைக்காயை தொடர்ந்து சாப்பிட்டுவர புற்றுநோய் வருவது தடுக்கப்படுகிறது. கிராம்பாசிடிவ் பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தும் தன்மை, பிஞ்சு வெண்டைக்காய்க்கு உண்டு.