Visitors have accessed this post 764 times.
வெற்றியை நோக்கி ஒரு பயணம் :
குழந்தைக்குத் தெரிந்த முதல் உறவு அம்மா அப்பா குழந்தைக்கு முதல் முதல் கைபிடித்து நடக்க கற்றுக் கொடுப்பதும் அம்மா அப்பா
குழந்தையின் ஒவ்வொரு செயல்பாட்டையும் ஊக்குவிப்பது அம்மா அப்பா பெற்றோர்கள் குழந்தைகளின் ஒவ்வொரு செயல்பாடுகலிளும் உணர்ச்சிபூர்வமாக கலந்து இருக்கின்றன இவ்வாறு குழந்தையின் கை பிடித்து கற்றுக் கொடுப்பது மட்டும் அல்லாமல் குழந்தைகள் தன்னுடைய வாழ்க்கையில் போராடவும் கற்றுக் கொடுக்க வேண்டும்
மிகவும் அதிகமான போட்டி நிறைந்தது இவ்வுலகம் இந்த உலகத்தில் போட்டியிடுவதற்கான தைரியத்தையும் மனவலிமையை குழந்தைகள் பெற்றிருக்க
வேண்டும். போராட கற்றுக்கொண்ட குழந்தை வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றது தோல்வி என்பது இருந்தால் தான் வெற்றியின் ருசி தெரியும்
பிரச்சனைகள் வந்தாலும் பயந்து ஓடாமல் எதிர்த்து நின்று போராட வேண்டும்
எந்த செயலையும் செய்யும் போது பின் வாங்காமல் இருக்க வேண்டும்
குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே அவர்களுடைய வேலையை அவர்களே செய்ய சொல்ல வேண்டும்
அவர்களின் பொறுப்பை அவர்களிடம் விட்டு விடுவது மிக சிறந்த ஒன்று இது அவர்களின் வாழ்க்கைக்கு மிகவும் உதவும் குழந்தைகள் முதலில் தன்மேல் நம்பிக்கை வைக்க
வேண்டும் அவ்வாறு நம்பிக்கை வைத்து விட்டால் குழந்தைகள் வெற்றியை நோக்கி செல்லத் தொடங்கி விடும் தோல்வியைக் கண்டு சிறிதும் பயப்படாமல் இருக்கும் வெற்றி என்ற எழுத்து சிறிதுதான் ஆனால் அதில் கிடைக்கும் மகிழ்ச்சி மிகவும் பெரிதாக இருக்கும்
தோல்வி என்பது சிறு சிறு ஆறுகள் போல எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அதைத் தாண்டி சென்று சேருமிடம் வெற்றி என்ற கடல்