Visitors have accessed this post 768 times.
வெள்ளை நிறத்தை தரும் பால்
பால், மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 20 நிமிடம் கழித்து பின் சுத்தமான நீரால் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்களும் வெளியேறிவிடும்.
பாதாம் பருப்பை ஊறவைத்து பால்விட்டு அரைத்து அந்த விழுதைக் கண்களைச் சுற்றிப் பூசி வந்தால் கருவளையம் குறையும்.
கடலை மாவுடன் சிறிது அளவு பால் மற்றும் நீர் கலந்து முகத்தில் தடவி, உலர்ந்த பின்பு இதமான நீரில் முகம் கழுவுங்கள். அதன் பின்பு சுழற்சி முறையில் உங்களது முகத்தை நன்கு தேய்த்து மசாஜ் செய்வதன் மூலம் உங்களது முகம் பிரகாசம் அடையும்.
சந்தனம், சிறிது ரோஸ் வாட்டர், சிறிது பால் கலந்து முகத்தில் பூசி விட்டு 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி பொலிவாக இருக்கும்.
சரும வறட்சியை நீக்குவதற்கு, வாழைப்பழத்தை நன்கு மசித்து, பால் மற்றும் தேனுடன் கலந்து, முகத்தில் தடவி காய வைக்க வேண்டும். காய்ந்ததும், சிறிது பாலை தொட்டு, அதன் மேல் தேய்த்து மசாஜ் செய்து, பிறகு கழுவ வேண்டும்.
பாலை நன்றாகக் காய்ச்சி ஆற விட்டு சுத்தமான வெள்ளைத் துணி அல்லது பஞ்சை எடுத்து அந்தப் பாலில் தோய்த்து, கண்களின் மீது வைத்துக்கொண்டு 15 நிமிடம் படுத்துக்கொள்ளவும். இப்படிச் செய்துவந்தால் கண் சோர்வு நீங்குவதுடன் கருவளையமும் மறைந்துவிடும். கண்கள் பொலிவுடன் இருக்கும்.