Visitors have accessed this post 151 times.

இல்லத்தரசிகளின் நிலைமை

Visitors have accessed this post 151 times.

குடும்பத்தின் முதல் ”மருமகளாக” வாக்கப்பட்டேன் , அனைவரையும் போல் எல்ல வித எதிர்பார்புகளுடனும் மனதில் ஆயிரம் சந்தோஷங்களுடனும் இடம் பெயர்ந்தேன் அம்மா வீட்டை விட்டு கணவன் வீட்டிற்கு .

அம்மா அப்பா காதல் திருமணம் செய்தவர்கள் அதனால் அம்மா வீடு உறவுகள் ஆதரவு எங்களுக்கு கிடையாது, அப்பாவின் தம்பி ஒருவர் மட்டுமே எங்களது சொந்தம். 

நான் எனது வீட்டில் கடைக்குட்டி, இரண்டு அண்ணன் ஒரு அக்காவிற்கு அடுத்து நான்.

எனக்கு சொந்தங்கள் என்றல் விருப்பம் அதிலும் அளவுடன் மட்டுமே.

படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்த சமயம் அம்மாவின் உடல்நிலை மோசமாகி விட்டது என்னவென்று பார்த்தால் ”புற்றுநோய்” , முதல் நிலை.

என செய்வதென்று தெரியாமல் இருந்த நிலையில் வந்த வரன் தான் என் கணவர்.

அம்மா மெதுவாக திருமண பேச்சை எடுக்க நான்  இருந்த மனநிலையில் எதையும் சொல்லாமல் இருந்தேன்.

மாலை 4  மணிக்கு மாப்பிளை வீட்டார் வந்து என்னை பார்த்தனர்.

நன் எந்த வித முக பாவனையும் இல்லாமல் அமைதியாக இருந்தேன்.

ஆனால்  ஒரு தடவை கூட மாப்பிளையை நான் பார்க்கவில்லை. 

வந்த வேகத்தில் ஏனை பார்த்து விட்டு அரை மணி நேரத்தில் கிளம்பி விட்டனர் .

ஆனால் எனக்கு ஒரு நிபந்தனை இருந்தது , கண்டிப்பாக மாப்பிளை குடி பழக்கம் இல்லாதவராக இருக்க வேண்டும் என்பதே.

ஏன் எனில் நான் அந்த அளவிற்கு பாதிக்க பட்டிருக்கேன் குடி பழக்கம் உள்ள அப்பா அம்மாவிடம் சண்டை போடுவதை பார்த்து.

அப்பா கெட்டவர், அம்மாவிற்கு மட்டுமே. 

எங்கள் நான்கு பேரையும்  எந்த ஒரு கவலையும் வருத்தமும் இல்லாமல் வளர்த்தவர் அவர். 

எந்த ஒரு ஆதரவும் இன்றி உறவினர்களும் இன்றி , ஒருவர் சம்பளத்திலே எங்கள் நான்கு பேரையும் சந்தோசமாக பார்த்து கொண்டவர் அப்பா. எனக்கு அவர் மேல் தனி பாசம் உண்டு குடிப்பழக்கம் மட்டுமே அவரிடம் பிடிக்காதது.

அம்மா வீட்டிற்கும் கணவர் வீட்டிற்கும் 8 கிலோ மீட்டர் மட்டுமே தூரம்.

எனது மாமியாருக்கு நான்கு சகோதரிகள் இரண்டு தம்பிகள். ஆக மொத்தம் 7 பேர் . 

இதனால் தான் எனக்கு நிறைய சொந்தங்கள் கிடைக்க போகின்ற சந்தோஷத்தில் திருமணமும் முடிந்தது .

திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு வரும் வழியில் கணவனின் கையை பற்றிக்கொண்டு வந்தேன் கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் வர வில்லை அம்மா வீட்டை விட்டு பிரிந்து வருகிறோம் என்று , 

ஆனால் இப்பொழுது வருந்துகிறேன் . நாம் அன்று அழுதுவிட்டு வந்திருந்தாள் இன்று சந்தோசமாக இருந்திருப்போமோ என்று.

ஏன் என்றல் நான் சந்தித்த நிகழ்வுகள் எல்லாம் எனக்கு புதிது மற்றும் புதிரானது .

எனக்கு தேவையான அனைத்தையும் கடவுள் என் ”நாத்தனார் ” ரூபத்தில் கொண்டு வந்து கொடுத்து விட்டார் . 

இனிமேல் தான் ட்விஸ்ட் , அந்த அம்மா என் லைப் ல வந்ததுக்கு அப்புறம் தான் எனக்கே தெரிஞ்சது, சொந்தக்காரங்க பண்ற மொத்த வேலையையும் இந்த ஒரு ஆளே பாத்துரும்னு .

Leave a Comment

Write and Earn with Pazhagalaam