Visitors have accessed this post 345 times.

ஒரு தலை காதல்

Visitors have accessed this post 345 times.

Normal
0

false
false
false

EN-US
X-NONE
TA

MicrosoftInternetExplorer4

ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணின் மீதோ இல்லை ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணின் மீதோ வரும் ஈர்ப்புக்கு அடுத்த நிலையின் பெயர் தான் காதல்…

 

இதில் இரண்டு நபருக்கும் அந்த உணர்வு தோன்றுகிறது என்றால் அது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது.. ஆனால் யாரோ ஒருவருக்கு மட்டும் அந்த உணர்வு வந்தால் அதை தான் ஒரு தலை காதல் என்கிறார்கள்..

 

இங்கு நம் கதையிலும் நம்முடைய நாயகன் மித்ரன் அவனுடைய கல்லூரி தோழியான நித்யாவை ஒருதலையாக காதலிக்கிறான்..

 

ஆனால் மித்ராவுக்கு அவன் மீது அப்படி எந்தவிதமான எண்ணமும் கிடையாது.. அவள் அவனுடன் நட்புடன் தான் பழகினாள்.

 

 

ஆரம்பத்தில் அவனும் அப்படித்தான் இருந்தான்.. ஆனால் போகப் போக அவள் மீது அவனுக்கு ஒரு விதமான ஈர்ப்பு உருவாகி பின்னாளில் அது காதலாக மாறியது..

 

தன்னுடைய காதலை அவளிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தான்.. ஆனால் எங்கே தன்னுடைய காதலை சொல்லப் போய் அது தற்பொழுது இருக்கும் நட்பினை முறித்துக் கொள்ளும் அளவுக்கு போய்விடுமோ என்ற பயம் வேறு இருந்தது..

 

மித்ரனின் நட்புகள் அவனிடம் அவனுடைய காதலை சொல்லும்படி எவ்வளவு வற்புறுத்தி பார்த்தும் அவன் வாய் திறக்காமல் அப்படியே இருந்தான்.. இதற்கிடையில் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் நித்யாவிற்கு திருமண ஏற்பாடு நடைபெற்றது..

 

அவள் அந்த தகவலை தன்னுடைய நட்புகளிடம் வந்து பகிர்ந்து கொண்டாள்.. அதைக் கேட்டவன் மிகவும் அதிர்ந்து போனான்…

 

அந்த சமயத்தில் கூட அவனுடைய நட்புகள் அவனிடம் போய் உன்னுடைய காதலை சொல் என்று எவ்வளவு சொல்லிப் பார்த்தும் அப்பொழுதும் அவன் கேட்கவில்லை..

 

நித்தியா தன்னுடைய நிச்சயதார்த்தத்திற்கு தன்னுடைய நட்புகள் அனைவரையும் அழைத்து இருந்தாள்.. மித்ரனையும் சேர்த்து தான்..

 

அந்த மேடையில் அவள் சிரித்த முகமாக நிற்பதை பார்த்த மித்ரனின் இதயம் வலித்தது..

 

அவள் மற்றொரு ஆணின் கையில் மோதிரத்தை போட்டு விடுவதை கலங்கிய கண்களுடன் நின்று பார்த்திருந்தான்..

 

அதன் பிறகு இரண்டு மூன்று நாட்கள் அவன் கல்லூரி பக்கமே வரவில்லை.. அவனுடைய நட்புக்கள் அவனுக்கு எவ்வளவு போன் செய்து பார்த்தும் அதையும் அவன் எடுக்கவில்லை.. என்ன செய்வது என்று இவர்களுக்கும் குழப்பமாக தான் இருந்தது..

 

அவனுடைய காதலுக்கு அவன் தான் முதல் அடியை எடுத்து வைக்க வேண்டும் நாம் அவனுக்கு உதவி தான் செய்ய முடியும் என்று அவர்களும் அமைதி காத்தனர்..

 

கல்லூரி முடியும் தருவாயில் தான் நித்யாவின் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது..

 

அதுவரைக்கும் நித்தியா எப்பொழுது போல் கல்லூரிக்கு வந்தாள்..

 

தன் நட்புகளிடமும் எப்பொழுதும் போல் பழகினாள்.. ஆனால் ஏனோ மித்ரன் மட்டும் அவளிடம் பேசுவதை குறைத்துக் கொண்டது போல் அவளுக்கு தோன்றியது..

 

ஒருமுறை அவளும் அவனிடம் ஏன் என்று கேட்டு விட்டாள்.. அதை அவன் எதிர் பார்க்கவில்லை.. அவளிடம் என்ன சொல்லி சமாளிப்பது என்று அவனுக்கு தெரியவில்லை.. அதனால் ப்ராஜெக்ட் விஷயம் என்று சொல்லி சமாளித்தான் மித்ரன்..

 

அது எல்லாம் கேட்ட அவனுடைய நட்புகளுக்கு கோபம் தான் வந்தது.. ஒரு கட்டத்தில் நாமே சொல்லலாமா என்று கூட நினைத்தார்கள்.. ஆனால் அப்பொழுதும் மித்ரன் தான் தடுத்து நிறுத்தினான்..

 

நித்யாவின் திருமண ஏற்பாடுகளும் வேகமாக நடைபெற்றது..

 

கல்லூரியில் உள்ள தன்னுடைய நட்புகள் அனைவருக்கும் பத்திரிக்கை வைத்தாள் நித்தியா.. பத்திரிக்கையில் அவளுடைய பெயரை பார்த்த உடனேயே தன்னுடைய இதயத்தை யாரோ வெட்டி எடுப்பது போல் ஒரு வலி வந்தது மித்திரனுக்கு..

 

அந்த பத்திரிகையை நெஞ்சில் வலியுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

எதிரில் நித்தியாவோ தன் தோழிகளுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்தாள்.. அவளுக்கு இந்த வாழ்க்கை தான் சந்தோஷம்.. அவள் நன்றாக வாழட்டும் என்று தன்னுடைய காதலை குழியில் போட்டு புதைக்க முடிவு செய்தான்..

 

திருமணத்திற்கு முதல் நாள் மாலை நண்பர்கள் அனைவரும் நித்யாவின் வீட்டிற்கு சென்றனர்.. அங்கிருந்து மண்டபத்திற்கு போவதாக முடிவு செய்து இருந்தனர்..

 

மித்ரன் அங்கு போன உடனேயே நித்யாவின் முகத்தை தான் பார்த்தான்.. ஏனோ இன்று அது கலை இழந்து இருப்பது போல் ஒரு உணர்வு அவனுக்கு வந்தது..

 

ஒருவேளை வீட்டை விட்டு பிரியப் போவதால் இருக்கும் சோகம் என்று நினைத்துக் கொண்டான்..

 

நித்யாவோ தன் நட்புகளிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு மீண்டும் அமைதியாகிவிட்டாள்..

 

அனைவரும் ஒன்றாக ஒரு வேனில் மண்டபத்திற்கு சென்றனர்..

 

நித்தியாவிற்கு பின்பு இருந்த இருக்கையில் தான் மித்ரன் அமர்ந்து இருந்தான்.. அவள் வீட்டை விட்டு கிளம்பும்போது அழுது கொண்டு வந்ததால் மிகவும் சோர்வாக அமர்ந்திருந்தாள்..

 

ஏனோ அவளை சமாதானம் செய்ய வேண்டும் என்ற உணர்வு தோன்றியது அவனுக்கு.. ஆனால் இங்கு அவளுடைய சொந்தங்களும் கூடியிருக்கிறார்கள். இந்த சமயத்தில் நாம் எதுவும் பேச வேண்டாம் என்று அமைதியாக இருந்தான்..

 

அவனுடைய அருகில் இருந்த நண்பனும் இப்பொழுதாவது சொல்லுடா உன்னுடைய காதலையாவது அவள் தெரிந்து கொள்ளட்டும் என்று கேட்டான்.. ஆனால் அவனோ இனி சொல்லி என்ன ஆகப்போகிறது ஒருவேளை சொன்னால் அவள் என்னை நினைத்து வருத்தப்படுவாள்..

 

வேண்டாம் என்று மறுத்து விட்டான்..

 

அன்று சிறிதாக ரிசப்ஷன் போல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. பெண்ணும் மாப்பிள்ளையும் மேடையில் நிற்க.. சொந்தங்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.. மாப்பிள்ளை முகம் என்னவோ சந்தோஷத்தில் இருந்தது.. ஆனால் அதற்கு மாறாக பெண்ணின் முகம் மிகவும் வாடிப் போய் இருந்தது..

 

எவ்வளவு மேக்கப் செய்து இருந்தாலும் கூட அவள் முகத்தில் இருக்கும் அந்த சோகம் பார்க்கும் மித்திரனுக்கு நன்றாகவே தெரிந்தது.. இவள் ஏன் இவ்வாறு இருக்கிறாள் என்று புரியாமல் குழப்பத்திலேயே சுற்றிக் கொண்டிருந்தான்..

 

நாளை காலை தான் உயிருக்கு உயிராக காதலித்த அவனுடைய காதலிக்கு திருமணம் அதை பார்க்கும் சக்தி தனக்கு இல்லை என்று உணர்ந்தவன்.. அன்று இரவே வீட்டிற்கு கிளம்பலாம் என்று முடிவெடுத்து ஒரு ஆட்டோவை ஏறப் போனான்.. அந்த சமயத்தில் அந்த ஆட்டோவில் அவனுக்கு முன்னால் வேறு ஒரு பெண் ஏறினாள்..

 

திடீரென்று ஒரு பெண் ஏறுவதை பார்த்தவன் அதிர்ந்து போனான்.. ஆனால் மறு நிமிடம் எதுவும் பேசாமல் அந்த ஆட்டோவில் ஏறி அமர்ந்தான்..

 

ஏனென்றால் அதில் ஏறி அமர்த்தது அவனுடைய காதலி நித்யா தான்.. அதை எவ்வாறு கண்டுபிடித்தான் என்றால் ஆட்டோவின் கம்பியில் அவள் கை வைக்கும் பொழுது அவள் கையில் இருந்த தழும்பை வைத்து தான்..

 

சிறு வயதில் சைக்கிள் ஓட்டும் பொழுது அந்த காயம் ஏற்பட்டிருந்தது..  நாளடைவில் அதுவே தழும்பாக மாறி இருந்தது.. கல்லூரியில் சேர்ந்த பொழுது அந்த தழும்பை காட்டி தனக்கு எவ்வாறு அடிபட்டது என்பதை செய்து காண்பித்தாள் நித்யா..

 

மற்றவர்கள் எல்லாம் அவள் செய்ததை பார்த்து சிரிக்க.. ஏனோ மித்ரனுக்கு மட்டும் இப்பொழுது கூட அவளுக்கு வலிக்குமோ என்று தோன்றியது.. அவளுக்கு அன்று ஏற்பட்ட அந்த வலியை இப்போது அவன் உணர்ந்தான்.. அதை ஒரு நிமிடம் நினைத்து பார்த்தான்..

 

அவள் என்று தெரிந்த பிறகும் கூட அவன் அமைதியாக எறி அமர்ந்ததற்கு காரணம் மாலை அவள் முகத்தில் இருந்து அந்த சோகம் தான்..

 

கண்டிப்பாக ஏதோ ஒரு காரணம் இருக்கிறது.. அதற்காகத்தான் யாருக்கும் சொல்லாமல் அவள் இந்த ராத்திரியில் வெளியே வந்திருக்கிறாள் என்பது புரிந்தது..

 

என்ன ஏது என்று முதலில் விசாரிக்க வேண்டும்.. அதற்கு யாரும் இல்லாத இடத்தில் செல்ல வேண்டும் என்று நினைத்தவன்..

 

அந்த ஊரில் இருக்கும் மலை கோவிலுக்கு அடிவாரத்திற்கு போக சொன்னான்.. நடு இரவு என்பதால் கோவிலின் நுழைவாயிலில் ஒரே ஒரு விளக்கு மட்டும் போடப்பட்டிருந்தது..

 

அந்த வெளிச்சத்தில் மட்டுமே அங்கே இருந்தது.. சுற்றி யாருமே இல்லாமல் இருந்தனர்.. ஆட்டோ நேராக அங்குதான் போய் நின்றது.. ஆட்டோவில் வரும்பொழுது கூட மித்ரன் நித்யாவை திரும்பி கூட பார்க்கவில்லை..

 

 

மண்டபத்தை விட்டு வெளியே வந்தவள் யாராவது வருகிறார்களா என்று பார்த்து கொண்டே வந்தாள்.. அங்கு ஒரு ஆட்டோவை பார்த்தவள் உடனே அந்த ஆட்டோவில் எறி அமர்ந்தாள்..

 

ஆனால் மித்திரன் திடீரென்று வண்டியில் ஏறிய உடனே அவளுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.. எங்கே தன்னை திரும்பவும் மண்டபத்திற்கு கூட்டிப் போய் விடுவானோ என்ற பயம் அவள் கண்களில் தெளிவாகவே தெரிந்தது..

 

அந்தக் கண்களில் இருந்த பயத்தை பார்த்த பிறகு தான் மித்ரன் அமைதியாக வந்தான். அவன் ஒரு வார்த்தை கூட அவளிடம் பேசவில்லை.. அவளுக்கு தான் தவிப்பாக இருந்தது.. ஆட்டோவில் இருந்து இறங்கிய மித்ரன் அவளை பார்க்க அவளும் எதுவும் பேசாமல் இறங்கினாள்.

 

ஆட்டோ கிளம்பிய பிறகு மித்ரன் திரும்பி நித்யாவின் முகத்தை பார்த்தான்.. அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகையை வெளிப்படுத்தினாள் நித்தியா..

 

மித்ரன் “என்ன ஆச்சு? எதுக்கு இப்ப நீ அழுதுகிட்டு இருக்க?” என்றான் பொறுமையாக..

 

அதற்கு அவளோ அழுது கொண்டே “எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை”..

 

அவன் அதிர்ச்சியுடன் அவள் முகத்தைப் பார்த்தான் “என்ன சொல்ற நீ?? விருப்பம் இல்லையா? அது உங்க வீட்ல சொல்லி இருக்கலாமே நிச்சயம் பண்ணி இவ்வளவு நாளுக்கு அப்புறம் வந்து சொல்ற அதுவும் கல்யாணத்துக்கு முதல் நாள் நைட்”..

 

அந்த மாப்பிள்ளையோட சுயரூபம் என்னன்னு எனக்கு இப்பதான் தெரிஞ்சது.. என்னால அவனை கல்யாணம் பண்ணிக்க முடியாது..

 

அவனை கல்யாணம் பண்றதுக்கு நான் செத்துப் போயிடுவேன்” என்றாள் அழுது கொண்டே..

 

அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை என்ன நடந்தது என்று கேட்டான்..

 

அவள் சொல்ல ஆரம்பித்தாள்.. இது நித்யாவிற்கு வீட்டில் பார்த்த மாப்பிள்ளை தான்.. மாப்பிள்ளையின் குடும்பம், வேலை இது அனைத்தையும் பார்த்து தான் அவளுக்கு பேசி முடித்தார்கள். அவளுக்கும் மாப்பிள்ளை பார்த்தவுடன் பிடித்திருந்தது சரி என்று ஒத்துக் கொண்டாள்.

 

படிப்பு முடிந்த பிறகு திருமணம் அதற்கு முன்னால் நிச்சயம் வைத்துக் கொள்ளலாம் என்றார்கள். அதன்படியே அனைத்தையும் செய்தார்கள்.. நிச்சயம் முடிந்து மறுநாளில் இருந்து அவன் அவளிடம் போனில் பேசுவான்..

 

ஆரம்பத்தில் அவள் அவனிடம் சில நிமிடங்கள் மட்டும் பேசிவிட்டு செல்வாள்.. ஆனால் போகப் போக அவன் அவளிடம் அதிக நேரம் பேச வேண்டும் என்று வற்புறுத்துவான்..

 

அவளால் மறுக்கவும் முடியாது.. சில சமயம் தேர்வு இருக்கிறது என்று சொல்லியும் கூட பேசு என்று கட்டாயப்படுத்துவான்..

 

சரி திருமணம் ஆகப்போகிறது என்று அவளும் சில நாட்கள் பேசினாள்.. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவனுடைய பேச்சுக்கள் வேறு பக்கம் போய் கொண்டு இருந்தது.. அதையெல்லாம் ஏதேதோ சொல்லி அந்த பக்கம் போக விடாமல் சமாளித்துக் கொண்டிருந்தாள்.

 

திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு தோழியுடன் கடைக்கு சென்ற சமயத்தில் தான் அவன் ஒரு பெண்ணுடன் ஒரு கடையில் நின்று பேசி கொண்டிருப்பதை பார்த்தாள்..

 

அப்படி அவர்கள் இருவரும் என்ன பேசுகிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்காக அவர்களுக்கே தெரியாமல் பின்னால் போய் நின்றாள்..

 

இருவரும் சிறிது நேரம் ஏதேதோ பேசினார்கள்.. அதன் பின் இருவரும் ஒன்றாக ஒரே காரில் ஏறி கிளம்பி சென்றார்கள்.. இவளுக்கு ஏதோ சந்தேகம் தோன்றவே அந்த காரை பின் தொடர்ந்து சென்றாள்..

 

அதுவோ ஒரு வீட்டின் முன்பு போய் நின்றது.. இது யாருடைய வீடு என்று தெரியாமல் யோசனையுடன் அங்கு இறங்கியவள் வீட்டிற்குள் செல்லாமல் உள்ளே என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக ஏதாவது வழி இருக்கிறதா என்று வீட்டை சுற்றி பார்த்தாள்..

 

அப்பொழுது ஒரு அறையின் ஜன்னல் திறந்து இருப்பது அவளுக்கு தெரிந்தது.. சரி அங்கிருந்து பார்ப்போம் என்று உள்ளே எட்டிப் பார்த்தவளுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.. ஏனென்றால் இவளுக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்த அந்த மாப்பிள்ளை அங்கு வந்த அந்த பெண்ணுடன் ஒன்றாக இருப்பதை பார்த்து விட்டாள்..

 

அந்த நிகழ்வை பார்த்த பிறகு அதை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.. இவன் என்ன இப்படி இருக்கிறான் என்று யோசித்தாள்.. இவன் தானா இல்லை வேறு யாருமா என்று மீண்டும் மீண்டும் அவன் முகத்தையே உன்னிப்பாக கவனித்து பார்த்தாள் அது அவனே தான்..

 

ஒரு நிமிடம் அவளுக்கு உலகமே இருண்டு போனது போல் ஒரு உணர்வு வந்தது.. அங்கிருந்து நடைபிணமாக தான் வீடு வந்து சேர்ந்தாள்..

 

வீட்டில் யாரிடம் இதைப் பற்றி சொல்வது என்று அவளுக்கு சுத்தமாக தெரியவில்லை.. மிகவும் பயந்து போய் இருந்தாள்..

 

என்ன பண்ணலாம் என்று யோசித்து கொண்டிருந்தவளுக்கு கல்யாணத்தை நிறுத்திவிட்டு ஓடிவிடலாம் என்ற முடிவு தான் கடைசியாக தோன்றியது..

 

அதனால் தான் இரவோடு இரவாக அந்த மண்டபத்தை விட்டு ஓடி வந்தாள்.. ஆட்டோவில் ஏறி கிளம்ப முற்படும்பொழுது தான் மித்ரன் வந்துவிட்டான்.. அவனைப் பார்த்தவுடன் பயந்து போய் அமர்ந்திருந்தாள்.. எங்கே அவன் உள்ளே அழைத்துச் சென்று விடுவான் என்று..

 

என்று சொன்னவள் திரும்பி திரும்பி அழுது கொண்டே இருந்தாள்.. அவள் சொன்னதை எல்லாம் கேட்டவனுக்கு அந்த மாப்பிள்ளையின் மீது கொலைவெறி வந்தது..

 

நித்தியா இதை பார்த்ததால் இன்று அவள் வாழ்க்கை தப்பித்தது.. ஒருவேளை பார்க்காமல் இருந்திருந்தால் ஒரு நரகத்தில் அல்லவா அவள் வாழ்ந்து இருப்பாள்.. அவனை என்று பல்லை கடித்தான்..

 

நித்யா “ என்னால வீட்டுக்கும் போக முடியாது.. என்னை எங்கேயாவது ஒரு ஹாஸ்டல்ல சேர்த்து விட்டுடு நான் அங்க இருந்துக்குறேன்”.. என்றாள் அழுது கொண்டே…

 

மித்ரன்பைத்தியமா நீ.. அவன் பண்ண தப்புக்கு நீ எதுக்கு தண்டனை அனுபவிக்கணும்.. நாளைக்கு உன்னால கல்யாணம் நின்னு போச்சுன்னு தெரிஞ்சா உங்க அப்பா அம்மாக்கு தான் அவமானம்.. முதல்ல வா மண்டபத்துக்கு போகலாம்..”

 

என்றான் சற்று கோவத்துடன்.. அவளோ வரமாட்டேன் என்று மறுத்தாள்.. ஆனால் அவனோ அவளை வலுக்கட்டாயமாக மீண்டும் ஆட்டோவை பிடித்து மண்டபத்திற்கு அழைத்து சென்றான்..

 

 யாரும் பார்க்காத வண்ணம் அவளை அவளுடைய அறைக்கு அனுப்பி வைத்தவன் அதன் பிறகு தன்னுடைய நட்புகளுடன் இணைந்து செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் சிறப்பாக செய்தான்..

 

மறுநாள் காலை அழகாக விடிய காலையிலேயே மண்டபத்தில் அனைவரும் சுறுசுறுப்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்..

 

ஐயர் சொல்லும் பொருட்களை எல்லாம் நித்யாவின் தாயார் அங்கேயே நின்று எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்.. நித்தியா தன்னுடைய அறையில் என்ன நடக்கப் போகிறதோ என்ற பயத்தில் தயாராகிக் கொண்டிருந்தாள்.. இங்கு மாப்பிள்ளை அறையிலோ ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாசமாக்கி விட்டான் மற்றொரு பெண்ணின் வாழ்க்கையை நாசமாக்க போகும் சந்தோஷத்தில் தயாராகிக் கொண்டிருந்தான் அந்த மாப்பிள்ளை..

 

நல்ல நேரம் வந்துவிட்டது மாப்பிள்ளை அழைத்துவார்கள் என்று சொல்ல.. அவனோ மாப்பிள்ளை கெத்து காட்டிக்கொண்டே நடந்து வந்தான்..

 

ஐயர் மந்திரங்கள் சொல்ல அதை திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான்.. அதன் பிறகு பெண்ணை அழைத்து வாருங்கள் என்று சொல்ல நித்யாவின் தோழிகள் அவளை அழைத்துக் கொண்டு மேடைக்கு ஏறினார்கள்..

 

நித்யாவின் கால்கள் பயத்தில் நடுங்கியது.. அவளுடைய உடம்பும் கூட நடுக்கத்துடன் தான் இருந்தது..

 

ஏனோ தன்னுடைய நண்பனின் மீது இருந்த நம்பிக்கையில் மேடை ஏறி அமர்ந்தாள்..

 

யர் மந்திரங்கள் சொல்லிக் கொண்டிருக்க தாலியை எடுத்து அந்த மாப்பிள்ளையும் கையில் கொடுத்தார்.. அவன் வாங்க இருந்த சமயத்தில் அவனை எட்டி மிதித்த மித்ரன் அந்தப் தாலியை தன் கையில் வாங்கி உடனே நித்யாவின் கழுத்தில் கட்டினான்..

 

யாருமே இதை எதிர்பார்க்கவில்லை.. கண் இமைக்கும் நேரத்தில் இது அனைத்துமே நடந்து முடிந்தது.. அந்த மாப்பிள்ளையின் சொந்தங்கள் இந்த நிகழ்வை பார்த்துவிட்டு சண்டைக்கு வர உடனே போலீஸ் அங்கு வந்து சேர்ந்தனர்..

 

மாப்பிள்ளை சொந்தங்கள் மித்ரனை கைது செய்யும்படி போலீஸிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருக்க போலீஸோ நேராக வந்து அந்த மாப்பிள்ளையை கைது செய்தனர்..

 

என்ன ஏது என்று கேட்ட பொழுது ஒரு பெண்ணை நம்ப வைத்து அவளை ஏமாற்றி கெடுத்து இப்பொழுது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்யப் போகிறான் என்று போலீஸ் சொல்ல அனைவருமே அதிர்ந்து போய் நின்றனர்..

 

இல்லை இது உண்மை இல்லை என்று மாப்பிள்ளை எவ்வளவோ சொல்லி பார்த்தான்.. அப்போது அவன் கெடுத்த அந்த பெண் அங்கு வந்தாள்..

 

வந்தவள் அவன் மீது குற்றம் சொல்ல யாருக்கும் எதிர் பேச்சு பேச முடியாமல் போனது..

 

போலீஸ் அந்த மாப்பிள்ளையை கைது செய்து அழைத்துச் செல்ல மாப்பிள்ளையின் சொந்தங்களும் பின்னாலே சென்றனர்..

 

நித்தியா தன் கழுத்தில் தொங்கிய தாலியைப் பார்த்து மௌனமாக கண்ணீர் சிந்தினாள்.

 

நித்யாவின் தந்தையோ நேராக மித்ரனிடம் வந்து..

 

நீங்க என் பொண்ணோட வாழ்க்கையை அந்த அயோக்கியன் கிட்ட இருந்து காப்பாத்தி இருக்கீங்க.. அதுக்கு நான் உங்களுக்கு என்னோட நன்றிய சொல்லிக்கிறேன்.. ஆனா நீங்க பண்ணது..

 

இதுக்கு என்ன அர்த்தம்.. நாங்க அந்த மாப்பிள்ளை தேர்ந்தெடுக்கும் பொழுது கூட அவளுக்கு விருப்பம் இருக்கான்னு கேட்டுட்டு தான் முடிவு பண்ணோம் ஆனா இப்ப”..

 

என்று அவருக்கு அதற்கு மேல் பேச்சு வரவில்லை..

 

மித்ரனும் கூட இதை எதிர்பார்க்கவில்லை தான்.. அந்தப் பெண்ணை பேசி அழைத்து வருவதற்குள் இங்கு நேரம் ஆகிவிட்டது..

 

சரியாக இவர்கள் உள்ளே வரும் பொழுது ஐயர் தாலியை அந்த மாப்பிள்ளையின் கையில் கொடுக்க சென்றிருந்தார்.. நித்தியாவின் கழுத்தில் ஏறப்போகும் தாலி எக்காரணம் கொண்டும் அவன் கைவிரல் கூட படக்கூடாது என்று நினைத்தவன் வேகமாக ஓடி வந்து அவன் கைக்கு சேர்வதற்கு முன்னால் பறித்து விட்டான்…

 

என்ன உணர்வு தோன்றியதோ தெரியவில்லை அவள் கழுத்திலும் கட்டி விட்டான்..

 

ஆனால் இதை நியாயப்படுத்த அவன் விரும்பவில்லை.. தப்புதான் ஒரு பெண்ணின் சம்மதம் கேட்காமல் திருமணம் செய்து தப்பு தான்.. ஆனால் இப்பொழுது என்ன செய்வது என்று யோசித்தவன் நித்யாவின் தந்தையை நேருக்கு நேராக பார்த்து.

 

மித்ரன் “நான் உங்க பொண்ணு காதலிக்கிறேன்..‌ ஆனா இதுவரைக்கும் உங்க பொண்ணு கிட்ட கூட நான் இந்த விஷயத்தை சொன்னது கிடையாது..

 

சொல்லணும்னு நினைக்கும் போது தான் உங்க பொண்ணுக்கு நீங்க கல்யாணம் ஏற்பாடு பண்ணி இருக்க விஷயம் எனக்கு தெரிய வந்தது..

 

அவளுக்கு அந்த கல்யாணத்துல விருப்பம் இல்லாமல் இருந்திருந்தால் அப்பவே அவளிடம் என் காதலையும் சொல்லி உங்களிடமும் வந்து பேசி இருப்பேன்.. ஆனால் அவளுக்கும் அந்த திருமணத்தில் சம்மதம் என்பதால் தான் என்னுடைய காதலை என் மனதிற்குள் போட்டு புதைத்துக் கொண்டேன்..

 

ஆனால் இன்று நான் செய்தது தவறுதான்.. அது ஏனென்று இப்பொழுது வரை எனக்கே தெரியவில்லை.. அந்த மாப்பிள்ளையும் கையில் தாலி போகக்கூடாது என்றுதான் ஓடி வந்தேன்.. ஏதோ ஒரு உணர்வில் அவள் கழுத்து தாலியை கட்டி விட்டேன்..

 

இதற்கு நீங்கள் எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன்..

 

என்னுடைய காதல் உண்மையானது.. என்னைப் பற்றியும் என் குடும்பத்தை பற்றியும் நீங்கள் விசாரித்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு நம்பிக்கை வந்த பிறகு உங்கள் பெண்ணை என் வீட்டிற்கு என் மனைவியாக அனுப்பி வையுங்கள்..”

 

என்றான் கையெடுத்து கும்பிட்டு..

 

நித்யா தந்தைக்கு அதற்கு மேல் எதுவும் பதில் சொல்ல முடியவில்லை..

 

அவர் அமைதியாகவே நின்று இருந்தார்… நித்யா எதுவும் பேசாமல் தன்னுடைய அறைக்கு செல்ல அதைப் பார்த்த மித்திரன் அவளுக்கு பின்னால் ஓடினான்..

 

மித்ரன் “நித்யா நில்லு.. நான் பண்ணது தப்புதான்.. உன்கிட்ட என்னோட காதலை சொல்லி இருக்கணும்.. ஆனா எனக்கு அந்த அளவுக்கு தைரியம் பத்தல.. என்னை மன்னித்துவிடு..

 

நான் உன்னை உயிருக்கு உயிரா காதலிக்கிறேன்.. இன்னைக்கு இல்ல நான் உன்னை எப்ப பார்த்தேனோ.. அந்த நிமிஷத்தில் இருந்து காதலிச்சுட்டு இருக்கேன்.. என்னுடைய காதலை ஏற்றுக்கொள்”..

 

என்றாள் கெஞ்சலாக அவளோ அங்கிருந்து வாட்டர் பாட்டிலை எடுத்து அவன் மீது வீசிவிட்டு..

 

நித்யா “ஏன்டா ஏன்.. இப்படி பண்ண.. உனக்கு என் மீது காதல் வந்து இருந்தா அன்னைக்கே சொல்லி இருக்கலாமேடா.. 

 

எனக்கும் காலேஜ்ல சேர்ந்த புதுசுல உன் மேல ஒரு விதமான ஈர்ப்பு வந்துச்சு.. ஆனா அன்னைக்கு தான் நீ ஒரு பொண்ணு கிட்ட சொல்லிட்டு இருந்த இந்த மாதிரி வயசுல ஈர்ப்பு வருது சகஜம் தான்..

 

இதுனால உன் படிப்பு பாதிக்கப்படும் போய் உன் படிப்பை பாரு.. கண்டிப்பா உனக்கு ஏத்த ஒருவன் உன்னை தேடி வருவான்னு சொன்ன.. எங்க நானும் உன்கிட்ட வந்து என்னுடைய மனசுல இருக்குற அந்த உணர்வை சொன்னா நீ அந்த பொண்ணு கிட்ட சொன்ன அதே வார்த்தையை என்கிட்டேயும் சொல்லுவியோனு பயந்தேன்..

 

அதனாலதான் அந்த உணர்வை அப்பொழுது என் மனதிலிருந்து தூக்கி போட்டு விட்டு உன்கூட ஃப்ரெண்டா இருந்தேன்..

 

எனக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணி இருக்காங்கன்னு சொல்லும் பொழுது கூட உன் முகத்தில் ஏதாவது மாறுதல் இருக்கான்னு பார்த்தேன்..

 

ஆனா நீ சிரிச்சுக்கிட்டே இருந்த.. அப்பதான் தெரிஞ்சுச்சு நீ என்னை பிரண்டா மட்டும்தான் பார்த்த என்று.. உன் காதலை முன்னாடியே சொல்லி இருந்தா இந்த அளவுக்கு வந்திருக்க வேணாமே டா”

 

என்று சொல்லி அவள் அழ.. அவனுக்கு அப்பொழுதுதான் தான் செய்த தவறு தெரிந்தது. தன் மனதில் அவன் உணர்ந்த காதலை அப்பொழுதே சொல்லி இருந்தால் அவளும் தன்னுடைய உணர்வை காதலாக மாற்றி இருப்பாள்.

 

இப்பொழுது இந்த அளவுக்கு பிரச்சனை வந்து இருக்காது என்று புரிந்தது.. ஒரு நிமிடம் கண்களை மூடி யோசித்தவன் அவள் முன்னால் முட்டி போட்டு.

 

 

மிதரன் ” நான் பண்ணது தப்புதான்.. தப்புக்கு தண்டனையா என் பொண்டாட்டியா என் வீட்டுக்கு வந்து என்னை அதிகாரம் பண்ணு நான் கேட்டுக்குறேன்..

 

என்னையும் என்னோட காதலையும் ஏத்துக்குவியா.. ஐ லவ் யூ நித்யா..”

 

ன்று அவன் சொல்ல அவளோ அவன் கண்ணீரைத் துடைத்து விட்டு..

 

லவ் யூ டூ மித்ரன்” என்றாள்..

 

மித்திரனின் ஒரு தலை காதல் வெற்றியில் முடிந்தது..

 

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam