Visitors have accessed this post 86 times.

சிறந்த பேச்சாளர்

Visitors have accessed this post 86 times.

தலைப்பு: சிறந்த பேச்சாளர்

               

                  1. பேச்சின் முறை

                  2. உணர்ந்து பேசுவது

                  3. முக பாவனை

                  4. பார்வையாரை கவர்வது 

                  5. துணிச்சலான பேச்சி

                  6. உலக அறிவு

                  7. சிறிது கதை மூலம் உதாரணம்

 

                  

பேச்சின் முறை:

           முறையாக பேசுவது என்றால் நாம் பேசுவது பிறருக்கு விளங்க வேண்டும் அதாவது அறிந்தவர் , அறியாதவர் இருவரும் விளங்கும் வகையில் அமைந்து இருக்க வேண்டும். தகாத வார்த்தைகளையோ கொச்சை தமிழையோ பேசுவது முறை அல்ல எனவே இவற்றை கவனித்து பேசுவதே பேச்சின் முறை.

 

உணர்ந்து பேசுவது:

                உணர்ச்சி என்றால் நாம் பேசும் வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்க வேண்டும்.நாம் தெரிவிக்கும் கருத்தை நமே நன்கு உணர்ந்து நம் உணர்ச்சி மூலம் பலத்த குரலுடன் வெளிபடுத்த வேண்டும்.அது மக்களின் மனதில் நிற்பதற்கு நாம் வழி வகுக்க வேண்டும்.

 

முக பாவனை:

         பாவனை என்றால் நாம் பேசும் கருத்தை மக்கள் மனதில் பதிய வைப்பதற்கு நம் முகத்தில் வெளிப்படுத்து ரசனை தான் உதாரணத்திற்கு பிறர் தவறை சுட்டிக்காட்டுவதாக நம் பேச்சி அமைந்திருந்தால் நம் முகத்தில் கோபமாக வைத்து ஆக்ரோசத்தை வெளிபடுத்த வேண்டும் அது மக்களுக்கு கோபம் வரும் வகையில் அமைந்து இருக்க வேண்டும்.

பார்வையாரை கவர்வது:

           மக்களுக்கு தூக்கம் வரும் வகையில் நம் பேச்சு இருக்க கூடாது

பார்ப்பவர்களை நம் பேச்சின் மூலம் ஆழ்ந்த சிந்தனைக்கு கொண்டு செல்ல வேண்டும் அது மட்டுமல்ல அவர்களை நம் பேச்சின் மூலம் ஆர்வத்தை ஏற்படுத்தி ஆவர்களை தொடர்ந்து நம் பேச்சைக் கேட்க்கும் செய்ய வேண்டும்.

 

துணிச்சலான பேச்சி:

          துணிச்சலான பேச்சி என்பது நாம் சொல்ல வரும் கருத்தை பயப்படாமல் மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டும் அதன் படி நாம் பேச வேண்டும்

 உலக அறிவு: 

          நம் பேச்சில் உலகத்தில் நடக்கும் நடைமுறைகள், அநியாயங்கள், முன்னேற்றங்கள் இவற்றை இணைத்து கொண்டால் நம் பேச்சை கேட்பதற்கு மக்கள் விரும்புவார்கள்.ஆர்வம் காட்டுவார்கள்.

 

சிறு கதை மூலம் உதாரணம்:

            நாம் சொல்ல வரும் கருத்தை ஒரு சிறு கதை மூலம் தெரிவித்தால் அது மக்களுக்கு நன்றாக விளங்கும்.அதை அவர்கள் மறக்காமல் இருப்பார்கள்.

 

    இவை அனைத்தையும் நாம் கடைபிடித்தால் நாம் சிறந்த பேச்சாளர் ஆக வாய்ப்பு 

அதிகம் உள்ளது.

 

 

         

1 thought on “சிறந்த பேச்சாளர்

Leave a Comment

Write and Earn with Pazhagalaam