Visitors have accessed this post 172 times.

மன வலிமை வயதில் இல்லை

Visitors have accessed this post 172 times.

மன வலிமை வயதில் இல்லை

ஒரு ஊரில் ஒரு வயதான பெரியவர் இருந்தார். அவருக்கு வயது  80. அவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருந்தனர். அனைவருக்கும் நல்ல முறையில் திருமணம் செய்து வைத்தார். மகன்கள் இருவரும் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். இணையத்தளம் மூலமாக வாரம்  இருமுறை பேசிக்கொள்வார்கள். அவருடைய மனைவியும் அவரும் தனியாக ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் அரசு  ஓய்வூதியம் பெற்று வாழ்ந்து வந்தார்கள்.

ஒருநாள் இரவு 2 மணிக்கு  திடீரென அவருடைய மனைவிக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. திடீரென மயங்கி கீழே விழுந்துவிட்டார் . அச்சமயம் மிக பலத்த மழை பெய்துகொண்டிருந்தது . அவருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

அவருடைய  மனைவியை உடனே மருத்துமனைக்கு கூட்டிச்செல்ல வேண்டியதாக இருந்தது. உதவிக்கு யாரும் இல்லை . மிகவும் மனம் வருந்தினார். இருப்பினும் அவர் மனம் தளரவில்லை.

சற்றும் தயங்காது அவருடைய மனைவியை தன்னுடைய தோளில் தூக்கிக்கொண்டு காரில் ஏற்றினார் . அந்த நள்ளிரவில் காரை அதி வேகமாக ஓட்டினார் . அவருடைய எண்ணம் முழுவதும் தன்னுடைய மனைவியை எப்படியாவது  காப்பாற்றியாக வேண்டும் என்பதில் இருந்தது .அருகில் உள்ள மருத்துமனைக்கு அழைத்து சென்றார் . மருத்துவர் அவருடைய மனைவியை பரிசோதனை செய்து சிகிச்சை நடை பெற்றது.

மருத்துவர் சற்று நேரம் கழித்து வெளியே வந்தார். உங்கள் மனைவிக்கு இலேசான மாரடைப்பு  ஏற்பட்டுள்ளது என்று கூறினார் . எனினும் பயப்படத் தேவையில்லை. சரியான நேரத்திற்கு அழைத்து வந்ததால் அவரை எங்களால் காப்பாற்ற முடிந்தது என்று கூறினார்.

பெரியவர் கண்களில் கண்ணீ ர்  ஊற்றாக பெருக்கெடுத்தது . சிறிது நேரம் கழித்து  தன்னுடைய மனைவியை பார்க்க அவசர சிகிச்சை அறைக்குள் சென்றார்.

அவருடைய மனைவி கண் விழித்து பார்த்தார். தனக்கு என்ன நேர்ந்தது என்பதை தன்னுடைய கணவரிடம் கேட்டுத்  தெரிந்துகொண்டார். தன்னுடைய கண்களில் ஆனந்தம் பெறுக்காக ஊற்றெடுத்தது.

 தனக்கு மகன்கள், மகள் இருந்த போதிலும் தனக்கு கடைசிவரை  துணையாக கூட இருப்பது தன்னுடைய கணவர் தான் என்பதை எண்ணி பெருமை பட்டார் !

Leave a Comment

Write and Earn with Pazhagalaam