Visitors have accessed this post 388 times.
சிக்கன் பிரியாணி:
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி : 1 கிலோ
சிக்கன் : 3/4 அல்லது 1 கிலோ
பெரிய வெங்காயம் : 1/4 கிலோ
தக்காளி : 150 கிராம்
நெய் : 300 கிராம்
தயிர் : 100 கிராம்
தேங்காய் பால் சேற்பதென்றால் முற்றிய தேங்காய் : 1
கறிவேப்பிலை,கொத்தமல்லி ,புதினா இலை,:சிறிதளவு
மசாலா அரைக்க :
புதினா இலை : 1 கைப்பிடியளவு
பச்சை மிளகாய் – 4
மிளகு : 2 ஸ்பூன்
சீரகம் : 1 ஸ்பூன்
சோம்பு : 2ஸ்பூன்
கிராம்பு – 4
பட்டை – 4 சிறிய துண்டு
மிளகாய் தூள் – சிறிதளவு
மஞ்சள் தூள் – சிறிதளவு
இஞ்சி : 100 கிராம்
பூண்டு : 100 கிராம்
சின்ன வெங்காயம் : 150 கிராம்
எண்ணெய் : தேவையான அளவு
உப்பு : தேவையான அளவு
தாளிக்க:
கறிவேப்பிலை,கொத்தமல்லி ,புதினா இலை : 50 கிராம்
முந்திரி பருப்பு : 50 கிராம்
செய்முறை:
மசாலா பொருட்கள் அனைத்தையும் நன்றாகஅரைத்துகொள்ளவும்.
தேங்காய் பால் சேற்பதென்றால் பால் எடுத்து கொள்ளவும்.பெரிய வெங்காயம்,தக்காளியை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
பாஸ்மதி அரிசியை கழுவி தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைக்கவும்.வாணலியை சூடுபடுத்தி எண்ணெய் விட்டு காய்ந்ததும் கறிவேப்பிலை, ,கொத்தமல்லி ,புதினா இலை ,முந்திரி பருப்பு,பிரியாணி இலை சேர்த்து தாளித்து பின் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசலாவை சேர்த்து பச்சை வாசனை போக வதைக்கி பின் சிக்கன் சேர்த்து நன்கு கிளறி அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் , தயிர் சேர்த்து நன்கு வதக்கவும். பின் ஊற வைத்து உள்ள பாஸ்மதி அரிசியை தண்ணீர் வடித்து சேர்த்து 1 தம்ளர் அரிசிக்கு 2 தம்ளர் மற்றும் உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் மூடி வைக்கவும்.(தேங்காய் பால் சேற்பதென்றால் 1 தம்ளர் பால் ,1 தம்ளர் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்)
கறியும், அரிசியும் நன்றாக சேர்ந்து வெந்தவுடன் நெய் சேர்த்து கலந்து இளம் தீயில் வேக விடவும்.
பிரியாணி தயாரானவுடன் இறக்கி எலுமிச்சம்பழம் பிழிந்து,கொத்தமல்லி , புதினா இலை தூவி கிளறி சூடாக சால்னா, தயிர் பச்சடி உடன் பரிமாறவும்.
தயிர் பச்சடி செய்முறை:
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்,தக்காளி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கலந்து பரிமாற போகும் போது தயிர் சேர்த்து கலந்து மல்லி இலை தூவி பரிமாறவும்.