Visitors have accessed this post 391 times.

home tips

Visitors have accessed this post 391 times.

ஹாய் பிரண்ட்ஸ் இன்னைக்கு உங்களுக்கு சில வீட்டுக் குறிப்புகள் சொல்லலாம்னு இருக்கேன் அவங்க பிரெண்ட்ஸ் அது என்ன அப்படின்னு பார்க்கலாம். கேஸ் அடுப்பு மற்றும் சமையல் மேடையில் சோப் ஊற்றி நல்லா தேய்ச்சு ஊற விடுங்கள் அப்புறம் தண்ணி ஊத்தி துடைத்தால் எண்ணெய் பிசுக்கு போய் விடும்.

கண்ணாடி பாட்டில் துர்நாற்றம் போக அதில் பாதி அளவு தண்ணீர் ஊற்றி ஒரு சிட்டிகை கடுகு அல்லது சோடா உப்பு போட்டு குலுக்கி ஊற வைத்து கழுவலாம்.

சமையல் அறையில் எண்ணெய் பிசுக்கு இருக்கும் . டைல்ஸ் சாதாரண துணியால் துடைத்த பின் வெதுவெதுப்பான தண்ணீரில் சலவை சோடா கலந்து பிசுக்கு உள்ள இடங்களில் பூசி காய்ந்த துணியால் துடைத்தால் பளிச்சென்று மின்னும்.

பீங்கான் பாத்திரங்களை உப்பு கலந்த தண்ணீரில் கழுவினால் அவை புதியது போல் ஜொலிக்கும்.

காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சு தோல்களை அலமாரியில் போட்டுவைத்தால் பூச்சிகள் வராது.

வெண்ணெயை லேசாக உப்பை தூவி வைத்தால் பல நாட்கள் கெடாமல் இருக்கும்.

டைனிங் டேபிளை துடைக்கும் துணியில் கொஞ்சம் உப்பு அல்லது கற்பூரம் வைத்து துடைத்தால் ஈ மற்றும் பூச்சிகள் வராது. 

பட்டுப்புடவையை துவைக்கும் போது குளிர்ந்த வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தலாம்.

ஃபேன் சுத்தம் செய்யும் போது துடைப்பம் கொண்டு பயன்படுத்துவதை விட பழைய தலையணை உறையைப் பயன்படுத்தினால் தூசிகள் வெளியேறி பரவாமல் தலையணைக்குள் மட்டும் இருக்கும் வேலை எளிதாக முடியும்.

கழிப்பறைகளை சுத்தம் செய்ய பேக்கிங் சோடா மட்டும் போதுமானது. வரவேற்பறை, சமையலறை என அனைத்தும் சுத்தம் செய்ய பேக்கிங் சோடா பயன்படுத்தலாம்.

இரவு தூங்க செல்லும் முன்பு கிச்சன் சின்கில் சிறிது பேக்கிங் சோடாவை தூவி விட்டு காலையில் பழைய டூத் பிரஷ் கொண்டு தேய்த்து கழுவினாள் புதியது போல் மின்னும்.

கண்ணாடியை துடைக்கும்போது பழைய செய்தித்தாளை தண்ணீரில் நினைத்து துடைத்தாள் கண்ணாடி பளிச்சென்று இருக்கும்.

எலுமிச்சை சாருடன் பேக்கிங் சோடா கலந்து கிச்சன் குழாய்களை துடைத்தாள் பளிச்சென்று சுத்தமாகிவிடும்.

காய் நறுக்கும் பலகையில் உப்பு தூவி அரை மூடி எலுமிச்சம்பலத்தை கொண்டு தேய்த்தால், சுத்தமாக இருக்கும்.

கண்ணாடிப் பாத்திரம் உடைந்துவிட்டால் சிறிது அரிசி மாவை பிசைந்து அந்த இடத்தை ஒற்றி எடுத்தாள் கண்ணாடித் துகள்கள் மாவில் ஒட்டிக்கொள்ளும்.

பால் பாத்திரத்தை குளிர்ந்த நீரால் கழுவி பின் பாலை ஊற்றி அடுப்பில் வைத்தாள் பால் அடி பிடிக்காது.

காய்கள், பழங்கள் வெட்டும் கத்தியில் இருக்கும் கறைகளை நீக்க அதன்மீது வெங்காயத்தை தேய்த்து துணியால் துடைத்தால் சுத்தமாகிவிடும்.

பிரட்டை நெய்யில் வறுத்துசூப்பின் மேல் தூவினால் சுவை அதிகரிக்கும்.

இஞ்சியை ஈரத்துணியை கொண்டு சுத்தி தண்ணீரின் மேல் வைத்தால்,7 நாட்கள் வரை கெடாமல் இ௫க்கும்.

சிறிது சர்க்கரை கலந்த நீரில் கீரையை ஊற வைத்தபின் சமையல் செய்து சாப்பிட்டால் கீரை தனி ருசியாக இருக்கும்.

முட்டைக்கோசை நறுக்கும் போது அதில் உள்ள தண்டுகளை எறிந்து விடாமல் சாம்பாரில் சேர்த்தால் சுவையாக இருக்கும்.

தேங்காய் பர்பி செய்யும் போது வேர்க்கடலையில் சிவப்பு தோலை நீக்கி உடைத்து நெய்யில் வறுத்துப் போட்டால் நன்றாக இருக்கும்.

வடகம் செய்யும்போது கருவேப்பிலையை அரைத்து கலந்து செய்தால் வடகம் தனி ருசியாகவும், மனமாகவும் இருக்கும்.

தோசை மாவு அரைக்கும் பொழுது கொஞ்சம் ஜவ்வரிசி யும் சேர்த்து அழைத்தாள் தோசை மெல்லியதாகவும் சுவையும் அதிகரிக்கும்.

குளியலறையில் பல நாட்கள் மணமாக இருக்க கால் கப் தண்ணீரின் ஒரு பாக்கெட் ஷாம்புவை கரைத்து சுவரின் மேல் தெளித்துவிட்டால், ஒரு வாரம் வரை பாத்ரூம் நறுமணத்துடன் இருக்கும்.

வெள்ளைக் கலர் ஷூவை சுத்தம் செய்ய பழைய டூத் பிரஷ் கொண்டு டூத் பேஸ்டை வைத்து நன்றாக தேய்த்து காய்ந்த துணியை வைத்து துடைத்தா.ள் புதியது போல் இருக்கும்.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam