Visitors have accessed this post 301 times.
பிரபஞ்சமே
பிரகிருதியால் (Prakriti)
பரிபூரணமாக
பின்னப்பட்ட
பின்பும்
பிள்ளைகள்போல்
பலர்
பிதற்று கின்றனர்
பெண்களுக்கு
போதுமான இடம்
பரிசளிக்கப்படும் என்று!
பைத்தியக்காரர்களே
புரிந்துகொள்ளுங்கள்
பரிணாம வளர்ச்சியில்
பேரன்பையும்
பெரும் கருணையும் கொண்டு
பெண்கள் இட்ட
பிச்சையே இந்த
பிரமாண்ட
பூலோகம்!
https://pazhagalaam.com/6-simple-ways-to-wake-up-to-a-good-hair-day/