Visitors have accessed this post 250 times.
மணமணக்கும் பிரியாணி
எப்படி செய்றதுன்னு பாக்கலாம் வாங்க.
பிரியாணியில் தான் நிறைய வகைகள் உண்டு நீ மட்டும் இப்போ என்ன மா புதுசா சொல்லிட போறேன்னு கேக்குறீங்க . கரெக்ட் தான். வாங்க அதையும் சொல்லுறேன்.
தேவையான பொருட்கள் :
* பாசுமதி அரிசி
*எண்ணெய்
* பட்டை வகைகள் ( பட்டை, கிராம்பு, ஏலக்காய்,ஜாதிபத்திரி , கல்பாசி, பிரியாணி இலை , சீரகம்,
சோம்பு)
*வெங்காயம்
*தக்காளி
*பச்சை மிளகாய்
*இஞ்சி பூண்டு விழுது
*தயிர்
*எலுமிச்சை சாறு
*மிளகாய் தூள்
*இறைச்சி
* உப்பு
* புதினா
* கொத்தமல்லி
வாங்க எப்படி செய்வது என்று பாப்போம்:
முதலில் பட்டை வகைகள் அனைத்தையும் வெறும் வாணலியில் இட்டு வறுத்து அரைத்து கொள்ள வேண்டும், ஏன் எனில் இது தான் இதற்கு முக்கியமான மசாலா .
- பிறகு, ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் இட்டு பொன்னிறம் ஆகும் வரை வதக்க வேண்டும் .
- நன்கு பொன்னிறம் ஆகியதும் இஞ்சி பூண்டு விழுதை பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும் .
- அடுத்து, புதினா கொத்தமல்லி இட்டு நன்கு வதக்க வேண்டும்.
- அடுத்து நாம் தக்காளி, எடுத்து வைத்திருக்கும் இறைச்சியை ( கோழிக்கறி அல்லது ஆட்டுக்கறி) சேர்த்து வதக்க வேண்டும்.
- அடுத்து மிளகாய் தூள், பச்சை மிளகாய் , வறுத்து அரைத்த மசாலா ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும் .
- நன்கு கறி வெந்து வந்ததும் உப்பு, தயிர் சேர்த்து கிளற வேண்டும்,
- இப்பொழுது பாசுமதி அரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து அந்த பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.
( இதில் நான் எந்த ஒரு பொருட்களின் அளவையும் குறிப்பிட வில்லை. ஏன் எனில் , நீங்கள் எடுத்துக்கொள்ளும் இறைச்சியை வைத்து தான் நாம் மற்ற பொருட்களின் அளவை அதிகமாகவோ குறைவாகவோ சேர்த்து கொள்ள போகிறோம், உப்பை தவிர . அரிசியின் அளவை தவிர மற்ற பொருட்களின் அளவை தோரயமாகவும், காரத்திற்கு ஏற்ற வாரும் பார்த்து கொள்ளுங்கள் )
எப்பொழுதுமே இறைச்சியின் அளவும் அரிசியின் அளவும் ஒரே அளவாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளலாம்,
உதாரணத்திற்கு , இறைச்சியின் அளவு அரை கிலோ என்றால் அரிசியின் அளவும் அரை கிலோ இருக்குமாறு வைத்து கொள்ளலாம் .
அப்பொழுது தான் இறைச்சியின் முழு சுவையும் அரிசியில் இறங்கி பிரியாணிக்கு முழு சுவையை கொடுக்கும், இல்லாமல் அரைகிலோ இறைச்சிக்கு ஒரு கிலோ அரிசி சேர்த்தால் அரிசியின் சுவை தான் அதிகமாக தெரியுமே தவிர இறைச்சியின் சுவை அல்ல.
கடைசியாக அரைகிலோ அரிசிக்கு முக்கால் டம்ளர் தண்ணீர் சரியாக இருக்கும், அதில் அரிசிக்கு தேவையான அளவு உப்பையும் சேர்த்து கொள்ள வேண்டும், , அதுமட்டுமில்லாமல் பிரியாணி கிரேவியில் கால் டம்ளர் அளவிற்கு இறைச்சியின் தண்ணீர் இருக்கும், அதுவே போதும் .
அரிசியை நன்கு கிளறி தண்ணீர் வற்றும் அளவிற்கு விட்டு பாத்திரத்தை கீழே இறக்க வென்றும், அடுப்பை அணைக்காமல் அதில் ஒரு தோசைக்கல்லை வைக்க வேண்டும் சூடு ஏறியதும் அடுப்பை சிம்மில் வைத்து பிரியாணி பாத்திரத்தை கல்லில் மேல் மூடி போட்டு வைக்க வேண்டும்,
கால் மணி நேரம் இவ்வாறு வைத்த பிறகு , அடுப்பை அணைத்து விட்டு கால் மணி நேரம் அவ்வாறு தம் வைத்து விட வேண்டும்.
முடிந்தது, கால் மணி நேரத்திற்கு பிறகு உங்கள் சுவையான பிரியாணி தயார் .
guys sorry that is not manamakkum biriyani . ” mana manakkum biriyani ” .
by maaran.