Visitors have accessed this post 789 times.
What can we do to help children grow up healthy?
குழந்தைகள் ஆரோக்கியமாக வளர நாம் என்ன செய்ய வேண்டும்?
குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பெற்றோரின் பங்கு
பெற்றால் மட்டும் போதுமா ?
பெற்றால் மட்டும் போதாது . பேணி காக்க வேண்டும் . ஐந்தறிவு உள்ளஉயிரினங்கள் கூட தங்கள் குட்டிகளையும் கன்றுகளையும் அருமையாக பராமரிக்கின்றன. ஆனால் மனிதரில் சிலரோ பெற்றதும் கடமை முடிந்துவிட்டதாக கருதி குழந்தை மடங்களின் விட்டுவிடுகின்றனர். மேலும் பல பெற்றோருக்கு பிள்ளைகளை பராமரிக்கும் விஷயத்தில் கோட்பாடுகளும் அபிப்பிராயங்களும் இருக்கின்றன. இந்த விஷயத்தில் பெற்றோர்கள் அனைவரும் விஷயஞானம் உள்ளவர்களாக விளங்க வேண்டும். பிள்ளைகளை நாம்
ஆரோக்கியமானவர்களாக வளர்க்க வேண்டும். இதற்குசில அடிப்படையான உண்மைகளை முதலில் தெரிந்து கொள்வது நல்லது.
பிறந்தது முதல் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் இயன்றவரை பாட்டில் காலை தவிர்க்க வேண்டும். நான்கு மாதம் முதல் திரவ உணவுகளையும் திட உணவுகள் சிறிது சிறிதாக சேர்த்துக் கொடுக்க வேண்டும்.
வீட்டையும் சுற்றுப்புறச் சூழலையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குழந்தைகளை தினந்தோறும் நீராட்ட வேண்டும் கொதிக்கவைத்து ஆரிய தண்ணீரையே குடிக்க கொடுக்க வேண்டும்
அக்காலத்தில் குழந்தைகளுக்கு எல்லா தடுப்பூசி மருந்தும் செலுத்த வேண்டும். அவர்களுக்கு சுகாதாரமாய் இருக்க கற்றுக்கொடுக்க வேண்டும். விரல் நகங்களை அவ்வப்போது வெட்டிவிட வேண்டும் அணியும் ஆடைகள் தூய்மையாய் இருக்க வேண்டும்.
வருத்தம் பெரிதாகும் வைத்தியரிடம் சென்று நலம் பெற முயற்சிக்க வேண்டும் நாளைக்கு செல்லலாம் என்று நாட்களும் கடத்தக் கூடாது.
இப்படி எல்லாம் அக்கறையுடனும் செயல்பட்டால்தான் உங்கள் குழந்தை ஆரோக்கியமாக வளரும்.
குழந்தைகளுக்கு மிகச் சிறந்த உணவு எது?
சரியான உணவு தான் குழந்தைகளையும் ஓய்வில் இருந்து காப்பாற்றுகிறது . அதுக்குத்தான் எல்லா நோய்களையும் குறிப்பாக தொற்று நோய்களையும் எதிர்க்கின்ற ஆற்றல் உண்டு.
சத்துள்ள உணவு இல்லாவிட்டால் அவர்களுக்கு கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்படும் அடிக்கடியும் நீர்க்கோர்வை ஏற்படும் குழந்தையின் கைகளும் முகமும் வீக்கம் முற்றாலோ
காலில் பழுப்பு நிற புள்ளிகள் அல்லது புண்கள் ஆகியன ஏற்படுதல் உரிய அறிகுறிகள் இருந்தாலும் அந்த குழந்தை விட்டமின குறைபாட்டால் அவதிப்படு கிறது என்று அர்த்தம்.
குழந்தைகளுக்கு நோய் ஏற்பட்டால் சில தாய்மார்கள் ஊட்டச்சத்துள்ள உணவு கொடுப்பதை விட்டு விடுகிறார்கள்.அது தவறு. அப்போதுதான் குழந்தைக்கு ஊட்டச்சத்து உள்ள உணவு மிகவும் அவசியம்.. ஊட்டச்சத்துள்ள உணவு கொடுக்காவிட்டால் குழந்தைகள் மெலிந்து விடும். மற்றும் நோய் எதிர்ப்பு போராட வலிமை இன்று பாதிக்கும்.
ஊட்டச்சத்து குறைபாட் டை எப்படி நாம் அறிந்து கொள்வது?
குழந்தையின் எடை குறைந்தால் அதற்கு ஆரோக்கியம் இல்லை என்று அர்த்தம் அக்குழந்தை கடுமையான நோய் ஆளாகி இருக்கின்றது என்று அர்த்தம் எனவே குழந்தையின் எடை ஓ ரே சீராக இருக்கிறதா என்பதை அறிய அது பிறந்தது முதல் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட திகதியில் எடை பார்த்து ஒரு அட்டவணையில் குறித்து கொள்ள வேண்டும். அப்படி செய்தால்குழந்தையின் எடை ஒரே சீராக இருக்கின்றதா என்பதனை அறிய முடியும் தாய்ப்பாலை மட்டும் குடித்து இதர உணவுகள் குறைவாய் சாப்பிடும் குழந்தைகளுக்கு கூட இந்த ஓட்டு குறைவு ஏற்படுகிறது எனவே பிரதான உணவுகளை போதுமான அளவு கொடுக்க வேண்டும். முக்கியமாக புரதச்சத்து உணவு அவசியம் தேவை.
தாய்ப்பாலை 4 மாதம் வரை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். பிறகு ஜீரணமாகக்கூடிய உணவு வகைகளையும் கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்து கொள்ளவேண்டும்.
மூன்றாவது மாதத்தில் இருந்து தாய்ப்பாலுடன் தக்காளி ஆரஞ்சு போன்ற பழங்களின் சாறு பிழிந்து சிறிதளவு கொடுக்கலாம்.
நான்காவது மாதம் முதல் ஆறாவது மாதம்வரை தாய்ப்பால் மற்றும் பழச்சாறு ஆகியவற்றுடன் வேகவைத்த கீரையை கடைந்து வடிகட்டிய சாரு, அரிசி, கோதுமை, கம்பும், கேழ்வரகு போன்றவற்றில் கஞ்சி கொஞ்சம் கொஞ்சமாய் கொடுத்து வரவேண்டும்.
ஆறாவது மாதம் முதல் வழக்கமாய் கொடுக்கும் தாய்ப்பாலுடன் பின்வருவனவற்றை கொடுக்க வேண்டும். அரிசி, கோதுமை, கம்பு, கேழ்வரகு போன்ற தானியங்களை தனித்தனியே வறுத்து அரைத்துக் கொள்ள வேண்டும் . கொஞ்சம் கொஞ்சம் சேர்த்து கஞ்சி செய்து கொடுக்க வேண்டும்.. இக் கஞ்சியுடன் பசும்பாலை சேர்த்து கொடுக்கலாம். தவிர கீரை, காய்கறி ஆகியவற்றை நன்றாக வேகவைத்து மை போல ஆகி கொடுக்கலாம்.
ஏழாவது மாதத்தில் இருந்து பின்வருமாறு கொடுக்க வேண்டும். வேகவைத்த காய்கறி, கீரை ஆகியவற்றை மெல்லிய துணி மூலம்வடிகட்ட வேண்டும். பின்பு அந்த சாற்றை மட்டும் உணவோடு சேர்த்து கொடுக்கலாம். தவிர வாழைப்பழமும் கொஞ்சம் கொடுக்கலாம்.
ஒன்பதாவது மாதத்தில் இருந்து பின்வருமாறு கொடுக்கவேண்டும் தாய்ப்பாலுடன் பருப்பு கலந்த சோறு கொடுக்கலாம். இட்லி கொடுக்கலாம். வேகவைத்த உருளைக்கிழங்கு, முட்டை, கீரை, காய்கறி ஆகியவற்றை கொடுக்கலாம். மற்றும் சிறிதளவு நீர் பசுவின் பால், எருமைபால்,ஆட்டுப்பால் ஆகியவற்றை அடுத்தடுத்து கொடுக்கலாம்.
மூன்றாவது மாதத்திலிருந்து தாய்ப்பாலுடன்
★ தக்காளி
★ ஆரஞ்சு
★ ஆப்பிள்
★ திராட்சை
★ பழச்சாறு
நான்காவது மாதம் தொடக்கம் ஆறாம் மாதம் வரை
★ தாய்ப்பால்
★ தக்காளி
★ ஆரஞ்சு
★ அப்பிள்
★ திராட்சை
★ கீரை
★ சோறு
★ கேழ்வரகு
ஆறாவது மாதம்
★ தாய்ப்பால்
★ சோறு
★ கீரை
★ காய்கறிகள்
★ கேழ்வரகு
★ காய்கறி மசியல்
ஏழாவது மாதம் தொடக்கம் எட்டாவது மாதம் வரை
★ தாய்ப்பால்
★ வேக வைத்த காய்கறிகள்
★ வாழைப்பழம்
★ பால்
9வது மாதம்
★ தாய்ப்பால்
★ பருப்பு கலந்த சோறு
★ இட்லி
★ கீரை
★ வேக வைத்த கிழங்கு
★ முட்டை
★ காய்கறிகள்
★ பால்
ஒரு வருடத்திற்கு பின்
★ சோறு
★ கீரை பருப்பு
★ வெல்லம்
★ கீரை
★ வாழைப்பழம்
★ தக்காளி
★ மரக்கறி
ஒரு வருட நிறைவு பெற்றாலும் தினசரி மூன்று வேளைக்கும் 4 கிண்ணம் சோறு, ஒரு கிண்ணம் பருப்பு, அரை கிண்ணம் கீரை ஆகியன கொடுக்க வேண்டும். மேலும் வேகவைத்த மரக்கறி வகைகள், கீரைகள், வாழைப்பழம் ஒன்று , ஆகியவற்றையும் கொடுக்கலாம்
சில குழந்தைகளுக்கு சில வகை உணவுகள் ஏற்பதில்லை எத்தகைய உணவுகள் ஏற்கவில்லை என்பதை கண்டுபிடிப்பு அவற்றை தவிர்ப்பது நல்லது.
நீ சொன்ன முறைப்படி ஒவ்வொரு மாதமும் சீராக உணவுகளை கொடுக்க வேண்டும் படிப்படியாக உணவின் அளவை அதிகரிக்க வேண்டும்.
உணவு ஊட்டுவது ஒரு பச்சிளம் குழந்தைக்கு என்பதனையும் அதற்கு இருப்பது சிறிய வயிறு என்பதனையும் மறந்து விடக்கூடாது எனவே குழந்தைக்கு கொடுக்கும் ஆகாரத்தை ஐந்தாறு தடவை சிறிது சிறிதாக கொடுக்க வேண்டும்.கொதித்தாறிய தண்ணீரையே அவ்வப்போது கொடுக்க வேண்டும். அது சிறுநீர் நன்கு வெளியேற பயன்படும் . சிலர் ஆசைப்பட்டு தங்கள்கு ழந்தைகளுக்கு இனிப்புப் பண்டங்களையும் குளிர்பானங்களையும் வாங்கி கொடுப்பார்கள்.
இவ்விரண்டுமே உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களாகும் இதனால் பணமும் விரயமாகும் இப்படி விரயமாகும் அந்தப் பணம் கொண்டு புரதச்சத்துள்ள நிலக்கடலை , பொட்டுக்கடலை, முட்டையும் கொஞ்சம் வாங்கிக் கொடுத்தாள் பயன் கிட்டும்.
வைட்டமின் மாத்திரைகள், டானிக்குகள் ஆகியவற்றுக்குப் பதிலாக பழங்கள், முட்டைகள், காய்கறிகள், வெவ்வேறு வகையான தானியங்கள் சாப்பிட்டு வந்தால் வெவ்வேறு வகையான புரதச்சத்து கிடைக்கும் .
குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைக்காவிட்டால் அதன் தாய் திரவ ஆகாரங்களை பருகவேண்டும். இப்படிச் செய்தால் உடனே பால் சுரக்க ஆரம்பிக்கும்.பால் குறைந்துவிட்ட தாய் மார் பாட்டிலுக்கு பதில் குவளை, கரண்டி, பாலாடை ஆகியவற்றை பயன்படுத்தி பால் கொடுக்க முயற்சிக்க வேண்டும்.
ஏனென்றால் பாட்டிலையும் அதன் ரப்பர் மூடியையும் கழுவி சுத்தப்படுத்துவது சற்று சிரமமானதாகும். தவிர தொற்றுநோய்களும் அந்த பிளாஸ்டிக் மூடியால் ஏற்படுகின்றன.
குழந்தைக்கு கொடுக்கும் உணவுகளில் ஏதாவது ஒன்றில் புரதம் இருக்க வேண்டும். ஒரே வகை உணவே போதிய சத்து தருவதில்லை.
புரதம் இல்லாவிட்டால் குழந்தை சரியாக வளராது, பேசாதே,. புரதம் குழந்தைக்கு அவசியம் தேவையான ஒன்றாகும்.
குழந்தைகளுக்கு வீட்டிலேயே சத்துணவு எப்படி பெறலாம்?
● வீட்டுக்கு ஒரு பசுமாட்டை வளர்ப்பதன் மூலம் பாலை பெறலாம்.
● கோழிகள் வளர்ப்பதன் மூலம் முட்டை களையும் இறைச்சிகளையும் பெறலாம்..
● வீட்டிலேயே தோட்டம் அமைத்தால் காய்கறிகளை பெற்றுக்கொள்ளலாம்.
● முருங்கை மரத்தை நட்டு வைத்தாள் சத்துமிக்க ,முருங்கைக்காய் , முருங்கைக்கீரை பெற்றுக் கொள்ளலாம்.
இதற்கு சிறிதளவு இடம் இருந்தாலே போதுமானது. மாடியில் குடியிருப்பவர்கள் என்ன செய்வது ?அவர்கள் மரத்தாலான தொட்டிகளில் மணலை பரப்பி அவற்றின் காய்கறிகளை பயிரிடலாம்.
இந்த முயற்சிக்கு பணம் அதிகம் தேவையில்லை.ஆர்வமும் உழைப்பும் தான் அதிகம் தேவை நாம் நன்கு முயன்றாள் தான் நம் குழந்தை நன்றாக இருக்கும்
Super good advice akka thank you so much
Welcome. My best wishes for your health