Visitors have accessed this post 634 times.
அரிசி மூட்டை எடை போட்டாகிவிட்டது. ‘இனிக் கஞ்சி குடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம்!’ ஐந்துக்கும் மேற்பட்ட தொழிலாளிகள் சாப்பிடச் சென்றனர். அப்போது முதலாளி அங்கே வந்தார். “எங்க கிளம்பிட்டீங்க?” என்றார்.
“கஞ்சி குடிக்கப் போறீங்களா? முதல்ல அரிசியை யெல்லாம் வண்டியில ஏத்துங்க” என்றார். “ஐயா” தயங்கினர்.
“சொன்ன வேலையைச் செய்யுங்க.” என்றவர் தன் வண்டியை உசுப்பிக் கிளம்பினார்.
தொழிலாளிகள் சாப்பிடாமலேயே வேலையைப் பார்க்கச் சென்றனர்.
வீட்டுக்கு சென்றதும், வாசலில் சலவைத் தொழிலாளி நிற்பதைப் பார்த்தார்.
“ஐயா… துணி தேய்ச்ச பணம்” என்று இழுத்தார் சலவையாளி.
“என்னது பணமா? வர்ற நேரமாய்யாஇது… ரெண்டு வாய் அள்ளிப் போட்டுட்டுப் போகலாம்னு வந்தா, எதிர்ல நின்னுகிட்டு’ என்று எரிந்து விழுந்தார்.
“ஐயா! ஒருவாரம் ஆச்சு?”
“ஆனா என்ன? நாங்க அரிசியைத் தூக்கி விட்டுட்டு மாசக் கணக்கு, வருடக் கணக்குன்னு பணம் வாங்கிட்டு இருக்கோம்.” ‘சிடுசிடுத்தார் முதலாளி.
சலவையாளி நகரவில்லை. அப்படியே நின்றார். “போய்யா… அப்புறம் வாய்யா…” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்றார் முதலாளி.
சலவைத் தொழிலாளி வீட்டு வாசலிலேயே நின்றார். அப்போது ஊரிலிருந்து முதலாளியின் அப்பா வந்தார். சலவைத் தொழிலாளியை அவர் நன்கு அறிவார்.
“என்ன முத்து… இங்க நின்னுட்டே?” கேட்டா நல்லாமூர் முனைவர் கோ. பெரியண்ணன் ஐயா… சலவை கொடுத்து ஒருவாரம் ஆச்சு… ஐயா இன்னும் பணம் தரலை…” “கேட்க வேண்டியதுதானே!” “கேட்டேன்… போய்ட்டு பிறகு வாய்யான்னு சொல்லிட்டார்.” “எவ்ளோ பணம்?” “இருநூறு ரூபாய்.” தன் பையில் இருந்து இருநூறு ரூபாய் எடுத்துக் கொடுத்தார். “ரொம்ப சந்தோஷங்க ஐயா” பெற்றுக்கொண்டு கிளம்பினார் சலவைத் தொழிலாளி.வீட்டிற்குள் சென்றார் அப்பா. “என்னடா காரியம் பண்ணியிருக்கே!” என்று கேட்டார். “என்னப்பா?” “ஏன்… டோபியைக் காக்க வச்சே.” “அப்பா… அது.”
“இங்கபாரு சலவைத் தொழிலாளி, நாவிதர், சாக்கடை அள்ளும் தொழிலாளின்னு கஷ்டப்படறவங்க கூலியை ஒருபோதும் நிறுத்தக் கூடாது. அவங்க மனம் வருந்தினால் நாமெல்லாம் நல்லா இருக்க முடியாது” என்றார் அப்பா. அவர் முகத்தையே பார்த்தார் முதலாளி. அப்பாடதொடர்ந்தார்,
“அதேபோல கூலி வேலை செய்யறவங்க சரியான நேரத்துக்குச் சாப்பிடணும். வாட்டி வதக்கி வேலை வாங்கவும் கூடாது. அவங்க வியர்வை காயறதுக்குள்ள கூலியையும் தந்திடணும்” என்றார்.முதலாளி வருந்தினார்.
“இனி அப்படியே நடந்துக்கறேன்… ‘ என்னய மன்னிச்சிடுங்கப்பா” என்றார்.
இதெல்லாம்சொல்லித் தெரியற விஷயம் இல்லை. நாம் நம்ம மனசாட்சியை உணர்ந்து நடந்துக்கணும்” என்று முடித்தார் அப்பா.
முதலாளி அரிசி ஆலைக்கு விரைந்து போன் போட்டார். “நம்ம கூலியாட்களை சாப்பிட்டுட்டே, வேலை பார்க்கச் சொல்லுங்க” என்றார்.