Visitors have accessed this post 795 times.

அம்மா

Visitors have accessed this post 795 times.

அம்மா…

உயிர்த்திருக்கும் எல்லா உயிரினங்களுக்கும் உயிர்ச்சொல்….

 

கடவுள் ஆயினும் கவிஞன் ஆயினும் கவிதைக்கு கவிதை கேட்டால் கலங்கி நிற்பான் உன் காலடியில்….

 

என் இனிய தாயே.. உன்னை போற்றி பாட இந்த ஜென்மம் போதுமோ?

எனினும் உன் கரங்கள் கொண்ட ஆழ்கடல் அன்பை சித்தரிக்க துடிக்கிறது உன் சேயே….

 

தன்னலம் பாராது வாழ்க்கை கொண்டாய்…. தன்னையும் செதுக்கி என்னை படைத்தாய்..

துயரம் துடைக்க என் வாழ்வின் வரமாய் கிடைத்தாய்…

 

தாய் என்றாலே ஓர் தனி சந்தோஷம்..

தந்தையில்லா பிள்ளைக்கு ஏக்கமில்லா அவ்விடத்தை நிரப்பி அன்பால் நிரம்பி‌ வியக்க வைத்த அதிசயம்…

 

கண் முன்னே கடவுள் தோன்றினால் நான் கேட்கும் ஓர் வரம்.

 

சிறு வயது முதல் சிரமம் பாரா என்னை சிறகடித்து பறக்க கற்று கொடுத்த நீ!

சில நூற்றாண்டுகள் உயிர்கொண்டு வாழ வேண்டும்

என் உயிர் இருக்கும் வரை உன் மடி சாய வேண்டும்… இல்லையெனில் உன் கண்முன்னே நான் இறைவனடி சேர வேண்டும்…

 

அளவில்லா ஆனந்தமிக்க அழகான உன் சிரிப்பு.. அதை பார்ப்பதற்காக வாழ்வததே நீ கொடுத்த இப்பிறப்பு….

சந்தோஷமிக்க நிம்மதி நிறைந்த உன் தூக்கம் அதுவே உன் மகனின் உருக்கமான ஏக்கம்……..

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam