Visitors have accessed this post 754 times.
அரிசி உளுந்து கஞ்சி
தேவையான பொருட்கள்:
பொருள் – அளவு
அரிசி 1 கப்
உளுத்தம் பருப்பு 1ஃ2 கப்
பு+ண்டு 6 பற்கள் (பொடியாக நறுக்கியது)
வெந்தயம் 1 டீஸ்பு+ன்
தண்ணீர் 5 கப்
சுக்கு பொடி 1 டீஸ்பு+ன்
உப்பு தேவையான அளவு
துருவிய தேங்காய் 1ஃ2 கப்
பால் 1ஃ2 லிட்டர் (கொதிக்க வைத்தது)
செய்முறை :
முதலில் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் அரிசி, உளுத்தம் பருப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, அத்துடன் பு+ண்டு, வெந்தயம் சேர்த்து, குக்கரை மூடி 5 விசில் விட்டு, தீயை குறைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.
அதன் பின்பு குக்கரை திறந்து, மத்து கொண்டு லேசாக கடைந்து, பின் சுக்கு பொடி, உப்பு, துருவிய தேங்காய் சேர்த்து கிளறி, கொதிக்க வைத்த பாலை ஊற்றி நன்கு கிளறி இறக்கினால், அரிசி உளுந்து கஞ்சி ரெடி.