அல்வா

Visitors have accessed this post 364 times.

அல்வா 

 

தேவையான பொருட்கள் :

 

பொருள் – அளவு

கோதுமை கால் கிலோ

சர்க்கரை அரை கிலோ

முந்திரி 20

ஏலக்காய்(பொடித்து) தேவையான அளவு

பாதாம் 10

நெய் தேவையான அளவு

செய்முறை :

 

  முதலில் கோதுமையை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைக்கவும். குறைந்தது எட்டு மணி நேரம் நன்றாக ஊற வேண்டும். 

 

   மறுநாள் ஊறிய கோதுமையை எடுத்து மிக்ஸியில் அரைத்து பால் எடுக்க வேண்டும்.

 

  அரைத்த கோதுமையை ஒரு வெண்மையான துணியில் ஊற்றி வடிகட்டி பாலை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். வடிகட்டியப் பாலை அப்படியே சிறிது நேரம் வைத்து விட்டால், கெட்டியான பால் அடியில் தங்கி நீரானது மேலே வந்துவிடும்.

 

  அந்த நீரை வடித்துவிட்டு, அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் கோதுமைப் பாலை ஊற்றி, பாலானது கொதித்து வரும்போது சர்க்கரையை சேர்த்து ஏலக்காய் பொடித்தது போட்டு நன்றாக கிளற வேண்டும். 

 

  கை விடாமல் கிளறி கொண்டே இருந்தால் கொஞ்சம் கொஞ்சமா அல்வா கெட்டியாக ஆரம்பிக்கும். இப்போது நெய்யை தேவையான அளவு சேர்த்துக் கிளறி கொண்டே இருக்கவும். வறுத்த முந்திரி மற்றும் பாதாமை சேர்த்து கொள்ளவும்.

 

  கிளறிக் கொண்டிருக்கும் போதே அல்வா குங்கும நிறத்திற்கு மாறிவருவதைக் காணலாம். அப்படி வந்தவுடன் ஒரு நெய் தடவிய பெரிய தட்டில் ஊற்றி ஆறியதும் துண்டுகளாக போட்டால் அசத்தலான அல்வா தயார்.

 

 

 

 

 

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam