Visitors have accessed this post 339 times.

அழகான குடும்பம் – பாகம் 3

Visitors have accessed this post 339 times.

                                          பேச்சுக்கும் மருதுவுக்கும் நிச்சயம் செய்யும் நாளும் வந்தது . கொரோனா தலை விரித்து ஆடி கொண்டிருந்த நேரமது. அதனால் இருவருக்கும் மிக எளிமையாக நிச்சயம் செய்து விடலாம் என்றும், அவ்வாறு நாம் சிறப்பாக செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் அரசின் விதிமுறை படி 50 நபருக்கு மேல் ஒரு இடத்தில கூட கூடாது என்ற ஆணைக்கு இணங்க , பெண்ணின் வீட்டில் மிகவும் எளிமையாக நிச்சயம் செய்து முடிக்க பட்டது . 

                      மாலை மாப்பிளை வீட்டார் அனைவரும் நல்ல நேரத்தில் கிளம்ப வேண்டும் என்று பெண்ணின் வீட்டில் இருந்து கிளம்பியும் சென்று விட்டனர். அவர்கள் சென்ற பிறகு பேச்சியும் அவளது வீடும் அமைதியானது. அவரவர்கள் வேலையை செய்து களைத்து விட்டனர். 

                      நிச்சயம் முடிந்த இரண்டு நாட்களில் நிச்சயத்திற்கு வராத ஆட்கள் எல்லாம் பேச்சியின் வீட்டிற்கு வந்து விசாரித்து விட்டு சென்று கொண்டிருந்தனர். 

                      அன்று , வழக்கம் போல பேச்சையும் மருதுவும் நள்ளிரவில் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த நேரம் , பேச்சியின் அக்காவிடம் இருந்து அவளுக்கு அழைப்பு வந்தது . இந்த நேரம் யார் அழைப்பது என்று பார்க்கையில், அவளது அக்கா . 

               சரி என்று மருதுவிடம் கூறிவிட்டு, அவளது அக்காவின் அழைப்பை ஏற்றாள் . என்ன ஆனது ?, ஏன் இப்பொழுது அழைத்திருக்கிறாய் என்று கேட்க , அவளோ இரண்டாவது அண்ணன் முத்து எங்கே? என்று கேட்க, இவளுக்கோ குழப்பம். 

           அண்ணன் இங்கே தான் தூங்கி கொண்டிருப்பான். என்று கூற அவளுக்கோ கோபம் வந்து  விட்டது . நீ முதலில் உனது அறையை விட்டு வெளியில் வந்து பார்! என்று கூற  , பேச்சி ஒரு வித பதட்டத்துடன் அறையை விட்டு வெளியில் வந்து பார்க்கிறாள். 

              அங்கே அவளது அம்மாவும் அப்பாவும் ஏதோ கோபமாகவும், அதே நேரத்தில் ஒரு வித பதற்றத்துடனும் பேசி கொண்டிருந்தனர் .

             என்ன ஆனது அம்மா?, என்று இவள் கேட்க , அவர்களோ , நீ உள்ளே செல் , நேரமாகிவிட்டது நீ சென்று தூங்கு என்று கூற ,இவள் ஒரு வித சந்தேகத்துடன் நகர்கிறாள் .

              அந்த நேரம் அவளது பெரிய அண்ணன் வர , அவனோ வந்து நேராக அம்மா அப்பாவிடம், அவனை எங்கு பார்த்தாலும் தேடிவிட்டோம் காணவில்லை அம்மா, முத்து தான் ”போலீஸ் ஸ்டேஷனில் ”இருக்கிறான் நீங்கள் அவனிடம் வீட்டிற்கு வர சொல்லுங்கள்! என்று கூற பேச்சிக்கோ தூக்கி வாரி போட்டது. கடவுளே இங்கு என தான் நடக்கின்றது என்று விழி பிதுங்கி நிற்கிறாள் பேச்சி. 

                 இதை கவனித்த அவளின் அம்மா, பேச்சியிடம் சொல்லுகிறாள், எனது அண்ணனின் மகன் அதாவது பேச்சிக்கு மாமன் மகன் எனது அண்ணனை கத்தியால் குத்திவிட்டதாகவும் , அதே நேரத்தில் அவன் தப்பித்து ஓடிவிட்டதாகவும் , கூறுகிறார். 

                இதை கேட்ட பேச்சிக்கு என செய்வது என்று தெரியாமல் , உடனே அலைபேசியை எடுத்து மருதுவுக்கு செய்தியை கூறுகிறாள். மருதுவும் இவள் சொல்வதை கேட்டு விட்டு பதற்றத்தில் எனக்கும் என செய்வது என்று தெரியவில்லை , நீ என நடந்தாலும் எனக்கு தெரிய படுத்து !என்று கூறி விட்டு வைத்து விடுகிறான்.

                இரவு முழுவதும் விழித்து விட்டு அவளது அண்ணன் முத்து வருவதை எதிர் நோக்கி இருக்கிறாள் , அனால் அவனோ வந்தபாடில்லை .

               இவளும் அசதியில் தூங்கி விட்டதில், மறுநாள் காலை எழுந்து , முதல் வேலையாக அவள் அண்ணனை தேடுகிறாள், அவனோ தோல் பட்டையில் கட்டு போட்டிருக்க , செய்தி வாசித்து கொண்டிருக்கிறான்,. 

            இவள் சென்று என்ன ஆனது!  ஏன் இரவில் வீட்டுக்கு வரவில்லை ?என்று கேட்க இவனும் அனைத்து கதைகளையும் கூறுகிறான் .

                 அண்ணன் முத்துவும் மாமன் மகனும் தொழில் தகராறில் இருவரும் அடித்துக்கொண்டதும் கோபத்தில் அவன் சிறிய கத்தி போன்ற ஒரு பொருளை எடுத்து என் அண்ணன் தோள்ப்பட்டையில் குத்தியதும் தெரிய வந்தது. 

                  அதே வலியோடு சென்று இவன் போலீஸ் ஸ்டேஷனில் அவன் மீது வழக்கு போட்டு வந்ததையும் கூறுகிறான்.  

                   என்ன இது !, நமக்கு நிச்சயம் முடிக்க பட்ட நேரத்தில் இப்படி ஆகிறதே என்று பேச்சி கவலை கொள்கிறாள் . 

              பிறகு என்ன ஆனது என்பதை அடுத்த தொடரில் பார்க்கலாம் . !

Leave a Comment

Write and Earn with Pazhagalaam