Visitors have accessed this post 977 times.
ஆன்மீக ஞானம்
வாழ்க்கையில் மேம்பட அறிவோம் ஆன்மீகம்
கோபுர தரிசனத்தின் முக்கியத்துவம் என்ன?
கோபுர தரிசனம் கோடி பாவவிப்போசனம் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம் ,பலருக்கும் அதில் ஐயம் உண்டு .கோவிலுக்கு உள்ளே சென்று வனாக்கினால்தானே நமக்கு புண்ணியம் கிடைக்கும் , வெளியே இருந்து கோபுரத்தை பார்த்தால் நமக்கு புண்ணியம் கிடைக்குமா .
உள்ளே சென்று வழிபடமுடியாத பக்தர்களுக்கு வெளியே கோபுரம் கண்களுக்கு எவ்வளவு தூரம் தேதரிகிறதோ அவ்வளவு தூரத்தில் கோபுரத்தை பார்த்து தரிசிக்க அடியார்களுக்கு பயன்கிட்டும் என்பதனால் தான் அந்த காலத்தில் நம் முன்னோர்கள் கோபுரத்தை மிக உயரமாக கட்டினார்கள் . எங்கே கோபுரத்தை பார்த்தாலும் நாம் வணங்கினோம் என்றால் அந்த இறைவனின் அருளை பரிபூரணமாக நம்மால் பெறமுடியும் .
யாருடைய அனுமதியுடன் சிவனை வணங்க வேண்டும் ?
சிவன் கோவிலுக்கு உள்ளே நுழைகின்ற போது பலபேர் நேராக சன்னதியை நோக்கி போய்விடுகிறார்கள் ,விநாயகர் முருகன் மற்றும் சுற்றி இருக்கும் அணைத்து தெய்வங்களையும் வணங்கிவிட்டு ,ஒரு விசயத்தை பலரும் நியாபகம் வைத்துக்கொள்வதில்லை ,நந்திதேவர் -னு ஒருவர் இருக்கிறார் அவரை வணங்கி விட்டுத்தான் உள்ளே போகவேண்டும் என்பதை மறந்து விடுகிறார்கள் .
நேராக சென்று சிவபெருமானை வணங்கிவிட்டு வெளியே வரும்போதுதான் வணங்குகிறார்கள் ,அது தவறு ஒவ்வொரு நபரும் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டிய விசையம் எப்போது கோவிலுக்கு சென்றாலும் முதலில் நந்திதேவர்- ஐ வணங்கி அவரின் அனுமதி பெற்றுதான் சிவபெருமானை வணங்க வேண்டும் . ஏன் என்றால் சிவபெருமானுக்கு நந்திதேவர் மெய்க்காவலர் மட்டும் அல்ல ,சிவனை வணங்க அனுமதி தருகின்ற நிலையில் இருக்கின்றவர் நந்திகேஸ்வரர்.
இந்த நந்திகேஸ்வரர் ஈஸ்வரர் பட்டமும் பெற்றவர் எனவே நந்திகேஸ்வரரை வணங்கி அவர் அனுமதி வாங்கிய பிறகு சிவனை சேவித்து மகிழவேண்டும் .
கோவில்களில் தீர்த்தம் வாங்கி பருகும்முறை ?
பெருமாள் கோவில் ,ஆஞ்சநேயர் கோவில் ,சக்கரத்தாழ்வார் கோவில் -களில் நமக்கு தீர்த்தம் கொடுக்கிறார்கள் அந்த தீர்த்தத்தை வாங்கக்கூடிய முறை நமக்கு தெரிவதில்லை .ஆண்களாக இருந்தால் வேஷ்டியில் ஒரு நுனியை இடது கையில் பிடித்துக்கொண்டு வலது கையில் தீர்த்தம் வாங்கி குடிக்கணும் ,பெண்களாக இருந்தால் புடவை முந்தானையை இடது கையால் பிடித்து வலது கையால் தீர்த்தம் வாங்கி குடிக்கணும் .
இரண்டு கையால் தீர்த்தம் வாங்க வேண்டும் ,ஒரு கையை நீட்டி தீர்த்தம் வாங்க கூடாது ,குடித்த பிறகு மீதி உள்ள தீர்த்தத்தை தலையில் தடவ கூடாது .கையில் தான் துடைத்து கொள்ள வேண்டும் ,ஏன் தலையில் தடவ கூடாது என்றால் ,தீர்த்தம் குடித்த பிறகு நமக்கு சடாரி வைக்கப்படுகிறது ,இறைவனின் இரண்டு பாதங்களையும் நமது தலையில் வைக்கிறார்கள்.
அப்படி சாடாரி வைக்கின்றபோது அந்த பாதங்கள் ( பற ஞானம் ,அப்பற ஞானம் ) அந்த இரண்டு திருவடியும் அந்த எச்சில் நீரில் பட்டால் அது பாவமா (அ ) புண்ணியமா , குடிக்கின்ற வரைக்கும் புனிதம் ,குடித்த பிறகு மிச்சம் இருப்பது எச்சில் தண்ணீர்தானே ,அதை தான் நாம் தலையில் தடவுகின்றோம் அதன் மீது சடாரி வைப்பது சரியில்லை . எனவே தீர்த்தத்தை குடித்த பிறகு கையில் துடைத்து கொள்ளுங்கள் .சடாரி சாத்தப்படும்போது குனிந்து பணிவாக வாங்க வேண்டும் .
நெற்றியில் திருமண் அணிவதன் பாரம்பரியம்…
பொதுவாக திருமண் இடுகின்ற பழக்கம் நமக்கு உண்டு ,இந்த திருமண் ஏன் இட வேண்டும் என்ற கேள்வி நிறைய பேருக்கு உண்டு .இது ஒரு அடையாள சின்னம் என்கிறது மட்டும் கிடையாது முதலில் திருமண் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும் .இயற்கயாகவே கிடைக்கக்கூடிய ஒரு மண் வகையை சேர்ந்தது ஒரு சுண்ணாம்பு பாறை மாதிரி அமைந்திருக்கக்கூடிய மண் வகையை சார்ந்ததுதான் திருமண் .
புனிதமான இடங்களில் விளைவதை எடுத்துக்கொண்டு வந்து அதை திருமண்ணாக தயார் செய்து கொடுக்கப்படுகிறது. முன்பெல்லாம் அனைத்து வீடுகளிலும் நாமக்கட்டி கட்டாயம் வைத்திருப்பார்கள். அது நெற்றியில்இட்டு கொல்வதற்காக மட்டும் அல்ல ,உடலில் ஏற்படும் பல வகையான நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியது இந்த திருமண் .
இந்த திருமண்ணின் சிறப்புகள் எம்பெருமானின் திருப்பாதங்களின் அடையாளமாக நாம் நெற்றியில் வைத்துகொள்ள கூடியது தான் இந்த திருமண் . உடலில் நாம் இட்டு கொல்வதற்கு காரணம் எம்பெருமானின் பாதங்களை நாம் சுமந்து கொள்ளவது . அந்த மண்ணை தண்ணீரில் குழைத்து அதை நெற்றியில் வைத்து கொண்டு ,நடுவில் ஸ்ரீசூரணம் (சிவப்பு )வைத்து கொள்கிறோம் .
தாயாரின் அடையாளமாகவும் ஸ்வாமியின் அடையாளமாகவும் இடக்கூடியது இதற்குத்தான் திருமண் என்று பெயர் .அந்த காலத்தில் நாமக்கட்டி என்பது எல்லாருடைய வீட்டிலும் இருக்கும் ,குழந்தைகள் கீலே விழுந்து அடிபட்டு விட்டால் அந்த இடம் வீக்கமாக இருந்தால் நாமக்கட்டியை தண்ணீரில் குழைத்து வீக்கம் உள்ள இடத்தில் தடவி விடுவார்கள் ,இப்படி செய்வதினால் (அதில் சுண்ணாம்பு சத்து அதிகம் இருப்பதினால் ) அந்த பகுதியில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி அந்த வீக்கத்தை சரிசெய்து விடும் .
அதிக குளிரின் காரணமாகவோ (அ ) அதிகமாக கத்தி பேசிக்கொண்டிருந்தாலோ (அ ) பாடகர்களுக்கோ பயன்பட்ட ஒரு மருத்துவ பொருள் இந்த நாமக்கட்டிதான் .இவர்களுக்கு அடிக்கடி தொண்டையில் ஒரு விதமான வலி தொண்டை கட்டு ஏற்ப்படும் அப்போது உடனடியாக செய்ய கூடிய மருத்துவம் என்னவென்றால் நாமக்கட்டியை நன்கு குழைத்து அதை ஒரு பற்று மாதிரி போட்டுவிட்டு இரவில் தூங்கி காலையில் எழுவதற்குள் அந்த குரல் பழைய நிலைக்கு மாறிவிடும் .
அது நல்ல சுகமாக இருக்கும் ,அதனால் தான் அந்த காலத்தில் புனிதமாக விளையக்கூடிய திருமண்ணை கட்டி வடிவத்தில் செய்து நாமக்கட்டி என்று விற்பார்கள் ,அது எல்லார் வீட்டுலையும் இருக்கும் .
துளசி மாட வழிபாட்டு முறை எப்படி செய்ய வேண்டும் ?
பெருமாளை வழிபடக்கூடிய இந்த முறையில் ரொம்ப முக்கியமான மலராக கருத்தக்கூடியது இதழாக கருத்தக்கூடியது துளசி .துளசிக்கு தனி வழிபாடு இருந்தாலும் ,அந்த துளசி மாடத்தை வழிபடக்கூடிய முறை ரொம்ப விசேசமான பலனை நமக்கு தரக்கூடியது.
முன்பெல்லாம் துளசி மாடம் வீட்டில் வைக்க வேண்டும் என்ற நியதி இருந்தது இப்போது பலபேர் அதை கடைபிடிப்பதில்லை ,ஒரு வீடு இருந்தால் அங்கு துளசி செடி கண்டிப்பாக இருக்க வேண்டும் .இது மருத்துவ குணம் வாய்ந்தது என்றும் சொல்லியிருக்கிறார்கள் காலையில் எழுந்தவுடன் முதலில் வழிபடவேண்டியது இந்த துளசி மாட வழிபாடுதான் என்று பெரியோர்கள் கற்று கொடுத்து இருக்கிறார்கள் .
துளசி மாட பூஜைக்கு மணி ,உத்ராணி ,பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் ,சாம்பிராணி ,ஊதுபத்தி , ஏதாவது ஒரு நெய்வேத்திய பொருள் கல்கண்டு (அ ) திராட்சை எடுத்து சென்று துளசி மாடத்தின் கீழ்
விளக்கு ஏற்றி வைத்து அதன் பிறகு ஊதுபத்தி (அ ) சாம்பிராணி காட்டிவிட்டு சூடம் ஏற்றி நெய்வேத்தியம் செய்ய வேண்டும் .பிறகு மீதம் உள்ள தண்ணீரை துளசி செடிக்கு ஊற்றி விடுங்கள் .
தினமும் இதுபோல் துளசி மாடத்தை வழிபட்ட பிறகு பூஜை அறைக்கு சென்று வழக்கமாக செய்யும் வழிபாட்டை செய்யலாம் .துளசி மாடத்தை இப்படி வழிபட்டோம் என்றால் துளசியின் அருள் ,மஹாலக்ஷ்மியின் அருள் ,நாராயனணின் அருள் ,வீட்டில் லக்ஷ்மி கடாச்சம் இவை அனைத்தும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் .
ஒரு மண்டல விரதம் என்றால் என்ன ?
பொதுவாக எந்த ஒரு செயலாக இருந்தாலும் ஒரு மண்டலம் செய்ய வேண்டும் என்று முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள் .இதில் நிறைய பேருக்கு குழப்பங்கள் இருக்கிறது ஒரு மண்டலம் என்பது எத்தனை நாட்கள் என்று .இது மூன்று வகையாக நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது .41நாள் ,45நாள் ,48நாள் ,இதில் எது ஒரு மண்டலம் .சபரிமலையில் ஐயப்பனுக்கு இருக்கக்கூடிய விரதம் 41நாள் ஒரு மண்டலமாக கருதப்படுகிறது .
பஞ்ச பூதங்களின் அடக்கமாக அந்த விரதம் அமைந்திருக்கிறது .ஒரு 14நாள் விரதம் இருந்து விட்டு அதை பஞ்ச பூதத்தின் அடக்கம் என்று சொல்லிவிடக்கூடாத என்று கேட்கலாம் .அப்படி ஏன் சொல்லக் கூடாது என்றால் ,எந்த ஒரு விஷயத்தையும் ஒரு மாதத்திற்குமேல் தொடர்ந்து செய்தால் தான் அது உடலுக்கும் நம் ஆன்மாவுக்கும் போய் சேரும் ,அதனால்தான் ஐயப்பனுக்கு 41நாள் ஒரு மண்டலம் .
அதற்கு அடுத்து 45நாள் விரதம் வேதங்களில் இருந்தும் , புராணங்களில் இருந்தும் ஒரு மண்டலமாக சொல்லப்படுகிறது அது என்ன கணக்கு என்றால் பிரதமையில் ஆரம்பித்து பௌர்ணமி வரைக்கும் (அ ) அமாவாசை வரைக்கும் அப்படி எடுத்துக்கொண்டால் , 15நாள் திதி இருக்கிறது இல்லையா அந்த திதி காலத்தை மூன்று திதி காலமாக எடுத்துக்கொள்ள வேண்டும் .ஏன் என்றால் வேதங்கள் எதையுமே மூன்று முறைதான் சொல்லும் . அது தான் 45 நாள்கள் இந்த 45 நாள்கள் என்பது ஒரு மண்டலம் .
இது போல 8 மண்டலமானது ஒரு ஆண்டு 8*45=360 நாட்கள் .
48 நாள்கள் ஒரு மண்டலம் என்று சொல்கிறோமே அது என்ன என்றால் ஒரு கோவில் கும்பாபிஷேகம் செய்தார்கள் என்றால் அப்போது மண்டலாபிஷேகம் என்பது 48 நாள் ,இந்த மண்டலத்திற்கு என்ன கணக்கு நவக்கிரங்கள் -9, நம்மை ஆளக்கூடிய ராசிகள்-12, நட்சத்திரங்கள் -27, இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்தால் 48. எந்த ஒரு காரியமாக இருந்தாலும் இந்த ராசி ,நட்சத்திரம் ,நவக்கிரகம் இவற்றில் அடக்கம் .
இவை அனைத்தும் நமக்கு துணை செய்ய வேண்டும் என்பதனால் 48 நாள் பூஜை செய்ய வேண்டும் .சித்தர்கள் சொல்லக்கூடிய வைத்தியமுறை 48 நாள் நாம் பயன்படுத்த வேண்டும் ஏனென்றால் சித்தர்களின் வைத்தியமும் ,கோள்கள் முறையும் ஒன்றோடு ஓன்று தொடர்புடையது எனவே இது 48 நாள் மண்டலமாக கருதப்படுகிறது .
காகம் தலையில் தட்டினால் அபசகுணமா ?
நாம் நடந்து சென்று கொண்டிருக்கும் போது (அ ) வீட்டில் இருக்கும்போது காக்கா தலையில் தட்டிவிட்டால் ஏதோ கெட்டது நடக்கப்போகிறது என்று எண்ணிக்கொள்கிறார்கள் . இது ஒரு சாதாரண விசயம் . காகம் தலையில் தட்டிவிட்டால் அதையும் சனிஷ்வரனையும் தொடர்பு படுத்துவது தவறு காகத்திற்கு சனிபகவானுக்கும் இருக்கும் தொடர்பைவிட காகத்திற்கும் முன்னோர்களுக்கும் உள்ள தொடர்பு அதிகம் .
நம்முடைய முன்னோர்களை நாம் கும்பிட மறந்திருந்தாலோ ( அ ) யாருக்காவது திதி கொடுப்பதை விட்டிருந்தாலோ அதை ஞாபகப்படுத்தும் விதமாக இந்த காகத்தின் ரூபத்தில் வரலாம் .அதை நாம் யோசித்து பார்க்க வேண்டும் ,1.நாம் யாருக்கு திதி கொடுக்கவில்லையோ அதை செய்ய வேண்டும், 2.காகத்திற்கு பின்னால் நடக்கக்கூடிய ஒரு விசயத்தை முன்னால் யூகிக்க கூடிய ஒரு தன்மை உண்டு .
அது எந்தமாதிரி என்றால் இயற்கை உபாதைகள் ,இயற்கை சீற்றங்கள் நடைபெறும்போது அதை மனிதர்களை விட விலங்குகள் முன்கூட்டியே அறிந்து கொள்ளும் ,சுனாமி வந்த போது எந்த பறவைகளும் மாட்டிக்கொள்ள வில்லை அவை அனைத்தும் தப்பித்துவிட்டது .
பறவைகளுக்கு முன்கூட்டியே யூகிக்கின்ற தன்மை உண்டு அந்த வகையில் நமக்கு ஏதாவது உடல் உபாதைகள் ஏற்படப்போகுது என்பது நம்மை தாண்டுகிறபோது அந்த காகத்திற்கு தெரிந்து இருந்தால் அது நம் தலையை தட்டி நம்மை முன்னெச்சரிக்கையாக இருக்க சொல்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம் .இந்த இரண்டு காரணங்களையும் ஞாபகம் வைத்து கொள்ளவேண்டும் தேவையில்லாமல் சனிபகவானோடு தொடர்பு படுத்தி நமக்கு நாமே பிரச்சனைகளை உருவாக்கி கொள்ள வேண்டாம் .
இதற்கு என்ன தீர்வு ,நாம் வீட்டில் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி குலதெய்வத்தை வழிபடலாம் ,கோவிலில் நவக்கிரகத்திற்கு எல்லு விளக்கு ஏற்றி சனிபகவானை வழிபடலாம் ,காகத்திற்கு அன்றாடம் உணவு வைக்கலாம் .காகம் தலையில் தட்டிய அடுத்த அமாவாசை அன்று முன்னோர்களுக்கு படையல் வைத்து வழிபடலாம் .இவைகளை செய்தால் இதனால் ஏற்ப்படும் தோஷங்கள் நம்மை விட்டு விலகிவிடும் .
பெரிய திருவடி சிறிய திருவடி என்றால் என்ன ?
பொதுவாக நாம் பெருமாள் கோவில்களுக்கு போகின்ற போது அந்த கோவில்களுக்கு முன்னாள் அமர்ந்திருக்கக்கூடிய அனுமன் ,கருடன் இந்த இருவரில் யாராவது ஒருவர் கண்டிப்பாக இருப்பார்கள் இவர்களை சிறிய திருவடி பெரிய திருவடி என்று சொல்கிறோம் .இவர்களை வணங்கி விட்டுத்தான் உள்ளே சென்று இறைவனை வழிபட வேண்டும் .
நேராக சென்று பெருமாளை தரிசிக்க கூடாது பெருமாளுக்கு எப்போதும் காவலாக எப்போதும் துணையாக அவரை சுமந்து கொண்டிருக்கக்கூடிய அந்த பாக்கியத்தை பெற்றவர்களிடம் நாம் அனுமதி பெறவேண்டும் ,என்பது மிக முக்கியமான ஓன்று எப்போது பெருமாள் கோவிலுக்கு போனாலும் முதலில் அனுமன் கருடன் இவர்களை வணங்கி அனுமதி கேட்க வேண்டும் ,எம்பெருமானை நான் வணங்க வேண்டும் அதற்கு நீங்கள் அனுமதி அளிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து விட்டு அதன் பிறகு நாம் பெருமானை தரிசித்தால் பெருமாளின் கருணை நம் எல்லோர்க்கும் பரிபூரணமாக கிடைக்கும் .
அடியார்களுக்கு செய்யும் தொண்டிற்கு என்ன சிறப்பு ?
நாம் அனைவரும் வாழ்க்கையில் ஒரு விசயத்தை நினைத்து கொண்டிருக்கிறோம் ,ஆண்டவனுக்கு செய்யும் தொண்டு மட்டும் தான் ஆண்டவனுக்கு சேரும் என்று ,அப்படி அல்ல அடியார்களுக்கு செய்யும் தொண்டும் ஆண்டவனுக்கு சேரும் என்று பலருக்கும் தெரிவதில்லை .இதை ஒரு பாடல் மூலம் சொல்லப்பட்டிருக்கிறது .
படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவர்க்கு அது ஆமே .
அதாவது நாம் நேராக கோவிலுக்கு சென்று செய்வது அடியார்களுக்கு ஆகாது ( அ ) வராது . அதுவே வெளியே இருக்கும் அடியார்களுக்கு செய்தால் அது ஆண்டவனுக்கு ஆகும் அது இறைவனின் திருவடியை போய் சேரும். இறைவன் வீதிக்கு வீதி அடியார்களை வைத்து அந்த அடியார்கள் மூலம் என்னை சுலபமாக அடையாளம் என்று அந்த வழியை காட்டினார்கள் .அடியார்களுக்கு செய்வதே ஆண்டவனை சாரும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
வீட்டில் குழல்ஊதும் கண்ணன் படம் வைக்கலாமா ?
பொதுவாக நம் அனைவருக்கும் ஒரு சந்தேகம் இருக்கிறது. குழல் ஊதும் கண்ணன் படம் வைக்கலாமா என்று .தாராளமாக வைத்து வழிபடலாம். கண்ணனனுக்கு அழகே குழல் தானே,கண்ணனனையும் குழலையும் பிரித்து பார்க்க முடியாதே, இந்த படத்தை வீட்டில் வைத்து நாம் வழிபடுகின்ற போது மிக உயர்ந்த பலன்கள் நமக்கு கிடைக்கும் .
பலபேர் குழல் ஊதுவதை போல வீட்டில் இருப்பதை எல்லாம் ஊதிவிட்டார் என்றால் என்ன செய்வது என்று கேட்கிறார்கள் ,அவர் வீட்டில் இருக்க கூடிய தீமைகளை வெளியே ஊதுவர் ,வீட்டில் இருக்கும் பிரச்சனைகளை வெளியே ஊதுவர் ,நம் மனதில் உள்ள தேவையற்ற எண்ணங்களை வெளியே ஊதி தள்ளுவார் .எனவே குழல் ஊதும் கண்ணன் படத்தை தாராளமாக வீட்டில் வைத்து வழிபடலாம் வீட்டில் எந்த பிரச்சனையும் ஏற்படாது . கண்ணனின் கருணை பரிபூரணமாக நமக்கு கிடைக்கும் .
சிவனுக்கும் நந்திக்கும் குறுக்கே செல்வதை ஏன் தவிர்க்க வேண்டும் ?
சிவன் கோவில்களில் நந்தியை வழிபட்ட பின்னர்தான் சிவனை வழிபட வேண்டும் .கோவிலுக்கு சென்று சிவனை வழிபட்ட பின்னர் வெளியே வரும் போது நிறையபேர் நந்திக்கு குருக்கவே நடந்து அம்பாள் சன்னதிக்கு செல்வார்கள் ,நாம் ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும் ,நந்தி தேவருக்கு குறுக்கே செல்லக் கூடாது .
நந்தி தேவரின் மூச்சு காற்று சிவபெருமானின் மேலே பட்டுக்கொண்டே இருக்க வேண்டும் ,என்பதற்காகத்தான் அவரை நேர் எதிரில்வைத்து இருக்கிறார்கள் .நாம் அதை மறித்து செல்லுகின்ற போது அந்த பாவ பலன்கள் நமக்கு ஏற்படக்கூடிய சூழல் நமக்கு ஏற்பட்டுவிடும் ,எனவே சுவாமிக்கும் நந்திக்கும் குறுக்கே செல்லக்கூடாது .
விளக்கை குளிர வைப்பது (அ ) மலையேற்றுவது எப்படி ?
நாம் எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும் விளக்கு ஏற்றி வழிபடுவது என்ற விசயத்தை பெரியோர்கள் நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.விளக்கு ஏற்றி வழிபட்ட பின்பு அதை எப்படி குளிர வைப்பது என்ற ஐயம் இன்று வரை இருக்கிறது.முதலில் விளக்கை அணைப்பது , விளக்கு அணைந்துவிட்டது என்று சொல்லக்கூடாது.விளக்கை குளிர வைத்தால் ,(அ ) விளக்கை மலையேற்றுதல் (அ ) விளக்கை வளரவைத்தல் இப்படித்தான் சொல்லவேண்டும்.
விளக்கை கையால் ஆட்டி (அ ) வாயால் ஊதி அணைக்க கூடாது.பூஜைகள் முடிந்த பிறகு தூண்டுகோள் வைத்து திரியை பின்னோக்கி இழுத்து எண்ணெய்க்கு உள்ளே விடவேண்டும்,விளக்கில் பால் விட்டு மலையேற்றலாம்,நாணயத்தை வைத்து விளக்கை அணைக்க கூடாது ஏனென்றால் அது செல்வம் .விளக்குக்கு உள்ளே நாணயத்தை போட்டு தீபம் ஏற்றலாமே தவிர,அதை வைத்து விளக்கை அணைக்க கூடாது.