Visitors have accessed this post 763 times.

ஆரோக்கியத்திற்கான இயற்கை உணவுகள்

Visitors have accessed this post 763 times.

 

 

                       ஆரோக்கியத்திற்கான இயற்கை உணவுகள் 

 

நமது உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே நம்மால் ஒரு சிறப்பான வாழ்க்கையை வாழ முடியும் ,அப்படி இருக்க முன்னோர் வழியை நாடும் மனித குலம் ,விழிப்புணர்வும் அவசியம் .நிலவினை நம்பி இரவுகள் இல்லை ,விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை என்பது ஒப்பற்ற மனித ஆற்றலை போற்றும் வரிகள் ,ஆனாலும் இரவென்றால் நிலவை தேடி விடுகிறது நமது விழிகள் .இப்படி நிலவாய் நம்மை தொடர வேண்டியது முன்னோர் காட்டிய உணவுப்பழக்கம் .ஆனால் விளக்காய் நாம் பிடித்துக் கொண்டிருப்பது கண்ணை மறைக்கும் நாகரீக வழக்கம் இதிலிருந்து விடுபட்டு சமீபகால பயணத்தை தொடங்கியுள்ளது மனித குலம் ,இதிலும் சற்று விழிப்புடன் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் .

 

ஆதி மனிதன் இயற்கையாக விளைந்த காய் ,கனிகளை பச்சையாக உண்டு வாழ்ந்து வந்தான் ,ஒரு கட்டத்தில் கற்களின் உரசலில் பறந்த நெருப்பு பொறிகள் அதன் மீது பட்டதும் சுவையை உணர்ந்து சுவைக்க ஆரம்பித்தான் மனிதன் ,தொடர்ந்து விறகுகளை வெட்டி நெருப்பு மூட்டி காய் ,கனிகளை சமைத்து உன்ன ஆரம்பித்த போதே மனித வாழ்க்கையில் இயல்பான வழக்கத்தில் மாற்றம் ஏற்பட்டது .ஆனால் இயற்கையாக விளைந்த காய்கறிகளும் ,கம்பு ,கேழ்வரகு ,சோளம் ,சாமை ,கோதுமை ,குதிரைவாலி தினை போன்ற உணவு ரகங்களும் மண்பாண்டங்கள் மற்றும் விதவிதமான பண்டம் பாத்திரங்களில் தயாரித்து உண்பது வழக்கமானது .இப்படிப்பட்ட கால மாற்றத்தில் நாகரீகம்  என்ற பெயரில் உலகத்தில் 1990- ம் ஆண்டு முதல் உணவு முறையில் பெரிய மாற்றம் உண்டானது .காலையில் இட்லி ,தோசை மதியம் சாம்பார் ,ரசம்,மோர் ,பொரியல் அரிசி சாதம் ,இரவில் தோசை சப்பாத்தி என்று உண்பதை வழக்கமாக்கினர் மக்கள் .ஆனால் இந்த உணவு முறையும் 2000-ம் ஆண்டுக்கு மேல் மாறிவிட்டது .

 

2001-ம் ஆண்டுக்கு பின்னர் உலகம் முழுவதும் மேலை நாட்டு உணவு பழக்க வழக்கங்கள் மின்னல் வேகத்தில் பரவ ஆரம்பித்தது .இறைச்சி வகைகளின் மீது ஆர்வம் அதிகமானதால் கறிக்கோழி பண்ணைகள் அதிகரித்தது வெளிநாட்டு குளிர் பானங்கள் ,பொறிக்கப்பட்ட ரெடிமேடு சிக்கன் பாஸ்ட் புட் உணவகங்கள் என்று   திரும்பிய இடம் எல்லாம் மசாலா வாசனைக்கு அடிமையாகி விட்டது மனித குலம் .குறிப்பாக உலகத்தில் எந்த ஊரின் முக்கிய சாலை ஓரங்களில் 1000-ம்   மீட்டருக்கு ஒரு பாஸ்ட் புட் கடைகளும் சில்லி சிக்கன் கடைகளும் இருக்கும் கண்களை மறைக்கும் கலாச்சார மோகத்தால் தொடங்கிய இந்த உணவு முறை பல்வேறு நோய்களும் மனிதர்களுக்கு வர கரணம் ஆகிவிட்டது .

 

இதற்க்கு தீர்வு தான் என்ன? செயற்கையை மறந்து இயற்கையை நாடுவது  தான் ஒரே வழி .நம் பாரம்பரிய உணவே அரிசி ,கம்பு ,கேழ்வரகு ,சோளம் சாமை ,திணை ஆகியவை .இதைவிட தேங்காய் ,பழங்கள் உணவாக இருந்தது அரைமூடி தேங்காய் வாழைப்பழம் சாப்பிட்டால் அரை நாளுக்கு பசி எடுக்காது இரண்டிலும் கால்சியம் சத்துக்கள் அதிகமா உள்ளது .

 

“ஆரோக்கியமான உணவு தான் நோய் எதிர்ப்பு சக்திக்கு அடிப்படை”

ஆரோக்கிய உணவுகள்: பொதுவாக குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், அவர்களுக்கு அடிக்கடி இருமல், ஜலதோஷம், காய்ச்சல் போன்றவை ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.

மேலும் குழந்தைகளுக்கு ஒரு ஆரோக்கியமான உணவின் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் அறிவோம். உங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சில 6 முக்கிய ஆரோக்கிய உணவுகள் மற்றும் அதன் நன்மைகளை பற்றி பார்ப்போம்…

 

6 முக்கிய உணவுகள்

கீரை வகைகள்

காய்கறிகள்

பழவகைகள்

பூண்டு

தானிய வகைகள்

பச்சை பட்டாணி

 

கீரை வகைகள்

வளரும் குழந்தைகளுக்கு தினமும், அல்லது வாரத்தில் குறைந்த பட்சமாக இரண்டு நாட்களாவது கீரை கொடுப்பது நல்லது. கீரையில் அதிகளவில் அயர்ன், வைட்டமின்கள், தாது உப்புக்கள் போன்றவை இருப்பதால் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி ரத்தத்சோகை ஏற்படாமல் தவிர்க்கும்.

காய்றிகள்

உங்கள் குழந்தைகளின் உண்ணும் உணவில் கட்டாயம் இடம்பெற வேண்டும். அதிலும் முக்கியமாக பீட்ரூட், கேரட், பீன்ஸ், வெண்டைக்காய், பாகற்காய், தண்ணீர் காய்கள் போன்றவை அதிகம் இருக்கவேண்டும்.

பழங்கள்

ஆப்பிள், வாழைப்பழம், மாதுளை, கொய்யாபழம், மாம்பழம் போன்ற பழங்களை தான் பொதுவாக வாங்குகிறோம். அத்துடன், வைட்டமின் சி இருக்கும் பழங்களை அதிக அளவில் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். நெல்லி, சாத்துக்குடி, ஆரஞ்சு மற்றும் பப்பாளி போன்ற பழங்களில் வைட்டமின் சி அதிகமாக இருக்கும். எனவே இது குழந்தைகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

பூண்டு

குழந்தையின் உடலுக்குக் கெடுதல் செய்யும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிற்கும் தன்மை கொண்டது பூண்டு. இதில் உள்ள Allicin என்ற பொருள், இன்ஃபெக்ஷனால் வரக்கூடிய நோய்களைத் தடுக்கும். மேலும் பூண்டு காய்ச்சல் மற்றும் சளி அண்டாமல் காக்கும். அதனால் வாரத்திற்கு ஒருமுறையாவது குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.

தானிய வகைகள்

கம்பு, சோளம், கோதுமை, ராகி, கேள்வரகு போன்ற தானியவகைகளை வளரும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். இவற்றில் இருக்கும் அதிகளவு நார்ச்சத்து குழந்தையின் உடலைத் தொற்றுகளில் இருந்து காக்கும்.

பச்சை பட்டாணி

பச்சை பட்டாணியில் வைட்டமின்கள் ஏ, சி பி1 மற்றும் பி6 போன்ற ஆரோக்கியமான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. மேலும் அவற்றில் கரோட்டினாய்டுகள், பினோலிக் அமிலங்கள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்களிலும் அதிகமாய் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.

 

குழந்தைகளுக்கு உணவு இடைவெளி தேவை…

 

குழந்தைகளின் உணவு விஷயத்தில் பெற்றோர்களுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லை. குழந்தைகளின் உணவு விஷயத்தில் பெற்றோர்கள் செய்யும் தவறுகளை பார்க்கலாம்.

 

குழந்தைகளின் உணவு விஷயத்தில் பெற்றோர்களுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லை. எந்த உணவை, எந்த அளவில் கொடுக்கவேண்டும் என்பது பெரும்பாலான பெற்றோர்களுக்கு புரியவில்லை. குழந்தைகள் நிறைய சாப்பிட வேண்டும் என்பது மட்டுமே அவர்கள் ஆர்வமாக இருக்கிறது. குழந்தைகள் போதும்.. போதும் என்று கூறினாலும் விடாமல் அதிகப்படியான உணவினை பெற்றோர்கள் திணிக்கிறார்கள். இதனால் குழந்தைகள் குண்டாகிவிடுவார்கள். அவர்கள் செயல்திறன் பிற்காலத்தில் பாதிக்குமாம்.

 

குழந்தைகளின் உணவு விஷயத்தில் பெற்றோர்கள் செய்யும் சின்னச்சின்ன தவறுகள்:

 

1. நொறுக்குத்தீனி..! 

குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் அதிகமாக சாக்லேட், ஐஸ்கிரீம் என கொடுத்துவிட்டால், அது அவர்களது இரவு உணவுத்தேவையை குறைத்துவிடும். அதற்காக மாலை நேர நொறுக்குத்தீனி வேண்டாம் என்பதில்லை. உணவுகளுக்கு இடையில் போதிய உணவு இடைவெளி வேண்டும். நொறுக்குத்தீனி உணவுகளை குறைந்த அளவே வழங்கவேண்டும். அதில் வறுத்தது பொரித்ததை தவிர்க்கவேண்டும்.

 

10 வயது குழந்தைக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் கலோரிகளே போதுமானது. அதனால் உணவையும், நொறுக்குத்தீனியையும் அளவுக்கு அதிகமாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். உணவின் அளவு அதிகரித்துவிட்டால், மெட்டபாலிசம் குறைந்து செரிமானப்பிரச்சினைகள் ஏற்படும். குழந்தைகள் குண்டாகுவது தவிர்க்க முடியாததாகிவிடும்.

2. அளவின் அவசியம்

பெரும்பாலான பெற்றோர்களுக்கு ஒரு வேளைக்கு தனது குழந்தைக்கு எவ்வளவு உணவு தேவை என்பது தெரிவதில்லை. நன்றாக சாப்பிடவேண்டும் என்ற நினைப்பில் உணவைத் திணிக்கிறார்கள். அவர்களுக்கு தேவைக்கு அதிகமான உணவை கொடுப்பதால், உடல் எடை அதிகரிப்பதுடன், ஆரோக்கிய பிரச்சினைகளும் தலைதூக்கும். அதிகமாக உணவு உண்ணும் குழந்தைகள் செயல்திறன் குறைந்தவர்களாகிவிடுவார்கள். வயதுக்கு தக்கபடி குழந்தைக்கு எவ்வளவு உணவு கொடுக்கவேண்டும் என்பதை உணர்ந்து கொடுங்கள். குழந்தைகளை மைதான விளையாட்டுகளை விளையாடவும் அனுமதியுங்கள்.

 

3. உணவு நேர இடைவெளி

குழந்தைகளுக்கான உணவை சரியான இடைவெளியில் கொடுக்க வேண்டியது அவசியம். அதன்படி அவர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு மற்றும் 2 முறை ஸ்நாக்ஸ் தருவதே சிறந்ததாகும். சரியான இடைவெளிவிட்டு உணவு வழங்கினால்தான் நன்றாக ஜீரணமாகும். நன்றாக ஜீரணமாகுவதுதான் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு ஏற்றது.

4. ஆரோக்கிய உணவுகள்

வீட்டில் சமைக்கப்படாத எந்த உணவும் ஆரோக்கியமானது அல்ல. நீங்கள் உங்களது குழந்தைகளுக்கு வெளியில் இருந்து உணவுகள் அல்லது குளிர்பானங்களை வாங்கி கொடுத்தால் அவற்றில் உள்ள லேபிளை கவனமாக படிக்க வேண்டியது அவசியம். பதப்படுத்தப்பட்ட உணவு களில் அதிகமாக சர்க்கரை இருக்கும். எனவே கவனம் தேவை. இல்லையேல் சிறுவயதிலேயே பல உடல் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

 

5. நேரத்திற்கு உணவு

நீங்கள் உங்களது குழந்தைகளுக்கு தரும் உணவினை தினமும் சரியான நேரத்திற்கு தர வேண்டியது அவசியம். அதேசமயம் உணவு நேரத்திற்கு இடையில் சிற்றுண்டி கொடுக்க நேரிட்டால் அது விரைவில் செரிமானமாகக்கூடியதாக இருக்கவேண்டும். தினமும் குறிப்பிட்ட நேரத்தில் உணவு வழங்கவேண்டும். கண்ட நேரத்தில் எல்லாம் உணவு கொடுப்பது அவர் களது ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல.

 

சத்தான உணவை உண்ண உங்கள் குழந்தை மறுக்கிறதா? – இதை முயற்சியுங்கள்…

உலகம் முழுவதுமுள்ள பெற்றோர்களுக்கு தங்களது குழந்தைகளை சாப்பிட வைப்பது, அதுவும் குறிப்பாக சத்தான உணவுகளைச் சாப்பிட வைப்பதென்பது மிகவும் சவாலான விசயமாகும். , உடல் பருமனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஏதுவான உணவு பொருட்களை தெரிவு செய்வது இன்னமும் கடினமான காரியமாக உள்ளது.  இந்நிலையில், குழந்தைகளின் உணவு கட்டுப்பாடு மற்றும் ஆரோக்கியத்தை பேணுவதில் பெற்றோர்கள் கடைபிடிக்க வேண்டிய அணுகுமுறை குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.

தேர்வு செய்ய வாய்ப்பளியுங்கள்

குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே அவர்களுக்கு பிடித்தமான உணவை தேர்வு செய்வதற்கு பெற்றோர்கள் வாய்ப்பளிக்க வேண்டும் என்கிறார் லண்டனை சேர்ந்த குழந்தைகள் நல நிபுணரான டினாலே.

“நீங்கள் கூறியதை மட்டும் உண்பதற்கு குழந்தைகளுக்கு எப்போதும் பிடித்திருப்பதில்லை. எனவே, பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட உணவு வகைகளை வாய்ப்பாக அளித்து, அதில் ஒன்றை தேர்வு செய்ய சொல்லலாம். இதன் மூலம், ‘நான் சாப்பிட மாட்டேன்’ என்று குழந்தைகள் முற்றிலுமாக நிராகரிப்பதைத் தவிர்க்க முடியும்” என்று டினா கூறுகிறார்.

“நீங்கள் இதைத்தான் சாப்பிட வேண்டுமென்று குழந்தைகளிடம் கூறினால் அவர்கள் வெறுப்படைவதுடன், சாப்பிட மறுப்பார்கள்.”

சிறு முயற்சிகள்

தனக்கு பிடித்த உணவு வகைகளை தவிர்த்த மற்றவற்றை சாப்பிட மறுக்கும் குழந்தைகளை கையாள்வது என்பது மிகவும் சவாலானது என்கிறார் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவரான அன்னா க்ரூம்.குழந்தைகளுக்கு அறிமுகம் இல்லாத உணவு வகைகளை படிப்படியாக சாப்பிட வைப்பதே இதற்கு ஒரே தீர்வு என்று அவர் கூறுகிறார்.”உங்களது குழந்தைகளுக்கு பிடித்த உணவு வகைகள் அவர்களது தட்டில் தினமும் இருப்பதை உறுதிசெய்யுங்கள். ஆனால், அதே சமயத்தில் ஒவ்வொரு நாளும் புதிய உணவு வகைகளை சிறிது சிறிதாக அவர்களுக்கு அறிமுகம் செய்து வையுங்கள்,” என்று அவர் கூறுகிறார்.”முற்றிலும் புதிய வகை உணவை அவளுக்கு கொடுக்கும்போது தூக்கி எறிந்துவிடுவாள். ஆனால், சிறிது சிறிதாக கொடுத்தபோது ஆர்வமுடன் அதை ருசிக்க தொடங்கினாள்,” என்று அவர் கூறுகிறார்.இதை முதல் முறை முயற்சிக்கும்போதே எதிர்பார்த்த பலன் கிடைக்குமென்று சொல்ல முடியாது என்பதால், பெற்றோர்கள் எரிச்சலும், சோர்வும் அடையாமல் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்று பெலிண்டா கூறுகிறார்.

நல்ல முன்மாதிரியாக இருங்கள்

சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு முன்மாதிரியை ஏற்படுத்தித் தருவது மிகவும் முக்கியமானது என்று டினா கூறுகிறார்.”நீங்கள் ஆரோக்கியமான உணவு வகைகளை உண்ணும்பட்சத்தில், அதை உங்களது குழந்தையும் முன்மாதிரியாக எடுத்துக்கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படும்,” என்று அவர் கூறுகிறார்.அதுமட்டுமின்றி, குழந்தைகளுடன் வீட்டிலுள்ள அனைவரும் சேர்ந்து ஒன்றாக உண்பது அவர்களுக்கு நல்ல உணவுப் பழக்கம் குறித்த முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்று அவர் மேலும் கூறுகிறார்.மேலும், தங்களுக்கு பிடிக்காத உணவுப் பொருட்கள் குறித்து பெற்றோர்கள் பேசுவது குழந்தைகளின் எண்ண ஓட்டத்திலும் தாக்கத்தை ஏற்படுத்த கூடும் என்று அவர் எச்சரிக்கிறார்.

 

சிறு சிறு பரிசுகள்

குழந்தைகள் நல்ல உணவு பழக்கத்தை வெறும் பாராட்டுடன் விட்டுவிடாமல், சிறு சிறு பரிசுகளை அளிப்பதும் அவர்களை மென்மேலும் உற்சாகப்படுத்தும் என்று டினா கூறுகிறார்.ஆனால், அந்த பரிசானது பூங்காவிற்கு அழைத்துச்செல்வது, ஓவியம் வரைய வைப்பது, விளையாடுவது போன்றவற்றுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டுமே தவிர உணவு சார்ந்ததாக இருக்கக் கூடாது என்று அவர் மேலும் கூறுகிறார்.”நீ இதை சாப்பிட்டால் சாக்லேட் வாங்கி தருவேன் என்றோ, ஐஸ் கிரீம் வாங்கி தருகிறேன் என்றோ கூறாதீர்கள். ஏனெனில், நீங்கள் சாப்பிட கொடுக்கும் உணவு பரிசாக கொடுக்கும் உணவைவிட தரம் தாழ்ந்தது என்று குழந்தைகள் நினைக்கக் கூடும்,” என்று டினா கூறுகிறார்.

 

 

 

 

 

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam