Visitors have accessed this post 712 times.

ஆரோக்கியம்

Visitors have accessed this post 712 times.

நம்முடைய அன்றாட வாழ்வில் ஆரோக்கியம் என்பது மிக முக்கியம்.நாம் தினமும் பிரம்ம முகூர்த்தில் எழுந்திருக்க வேண்டும். அதாவது அதிகாலை 3.00மணியில் இருந்து 5.00மணிக்குள் எழுந்திருக்க வேண்டும்.எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க வேண்டும்.அவ்வாறு நாம் தண்ணீர் குடிப்பதால் நம்முடைய வயிறு சுத்தமாக வழி வகுக்கும்.அதிகாலையில் வடக்கு திசையை நோக்கி அமர்ந்தபடி நாம் தியானம் செய்ய வேண்டும்.அவ்வாறு நாம் செய்வதால் வடக்கு திசையில் இருந்து தென் திசையை நோக்கி பாயும் மின்காந்த அலைகளை சுவாசிப்பதன் மூலம் உடல் நலம் மேம்படும். (இப்போது இதை வாசிக்கும் உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம்.உறங்கி கொண்டு சுவாசிப்பதால் நமக்கு எந்த ஒரு பயனும் கிடையாது.நமது உடலும் மூளையும் உறக்கத்தில் இருந்து எழுந்த பின்னர் அதிகாலையில் நாம் சுவாசிக்கும் சுவாசம் நம்முடைய உடலில் அதிக சக்தியை அதிகரிக்க செய்கிறது.)

டீ,காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.அதற்குபதிலாக பால் அல்லது புரதச்சத்து நிறைந்த ஏதாவது ஒரு உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.உதரணமாக முட்டை எடுத்துக் கொள்வது நல்லது.நாட்டுகோழி முட்டையாக இருந்தால் மிகவும் நல்லது.

அசைவம் பிடிக்காதவர்கள் கருப்பு சுண்டல் அல்லது பச்சை பயறு ஏதேனும் ஒரு தானியத்தை இரவு நனைய வைத்து அதிகாலையில் முளைக்கட்டிய தானியமாக உண்பது உடலுக்கு நல்லதாகும்.

நாம் எடுத்துக் கொள்ளும் உணவை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.நேரம் தாமதமாக உணவை எடுத்துக் கொண்டால் குடல்புண் ஏற்படும். அதனால் உணவை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகாலையிலும்,மாலைப் பொழுதிலும் சூரிய ஒளியானது நம்மீது படுவதால் வைட்டமின் டி என்ற ஒருவகை சத்து நமக்கு கிடைக்கிறது.

நாம் குளிக்கும் பொழுது தண்ணீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும்.அதன் பின்னர் படிப்படியாக தண்ணீரை மேலே ஊற்ற வேண்டும். இவ்வாறு செய்தால் உடலில் உள்ள சூடானது சரியான முறையில் வெளியேறும்.

தலையில் முதலில் தண்ணிரை ஊற்றினால் உடம்பில் இருக்கும் சூடானது இதயத்தை நேரடியாக தாக்கும் . அதனால் இதயநோய் ஏற்படும்.

நமக்கு தேவையான நல்ல தூய்மையான ஆக்ஸிஜனை ஆலமரம், அரசமரம் மற்றும் வேப்பமரம் தருகிறது. இன்னும் பல மரங்கள் தூய்மையான ஆக்ஸிஜனை நமக்கு நிறைவாக தருகிறது.

அதனால் மரத்தை வெட்டி வீடு கட்டாமல் ,வீட்டின் அருகில் மரத்தை நட்டு வைப்பது நல்லது. இதனால் நல்ல காற்று நமக்கு கிடைக்கிறது.

இதனால் நம்முடைய உடல் நலம் மட்டுமின்றி சுற்றுச்சூழலும் தூய்மையாகிறது.

எல்லா மனிதருக்கும் ஓய்வு

 என்பது அவசியமான ஒன்றாகும்.

மதியம் உணவு உண்ட பிறகு அரைமணி நேரம் ஓய்வு எடுத்தால் அடுத்து நாம் செய்யும் வேலையை மிகவும் சுறுசுறுப்பாக செய்ய முடியும்.

இரவு உணவை சீக்கிரமாக உட்கொள்ள வேண்டும்.

சீக்கிரமாக உறங்க வேண்டும்.அதிகபட்சம் இரவு 10.00மணிக்குள் உறங்க வேண்டும்.

இரவு உறக்கத்தின் போதுதான் நம்முடைய உடலானது (update)புதுப்பிக்கப்படுகிறது. அதனால் இரவு உறக்கம் மிகவும் அவசியமானதாகும்.

இரவில் நாம் உறங்கும் போது வடக்கு திசையில் தலை வைத்து உறங்க கூடாது.

இரவு நேரத்தில் தான் மின்காந்த அலைகள் அதிக அளவில் வடக்கு திசையில் இருந்து தென் திசையை நோக்கி செல்கிறது.

நாம் வடக்கு திசையில் தலை வைத்து உறங்கினால் மின்காந்த அலைகள் நேரடியாக தலை மீது மோதுகிறது.

அதனால் உடலில் உள்ள சக்தியானது குறைகிறது.

மின்காந்த அலையானது தலை மீது மோதி பாதம் வழியாக நம்முடைய சக்தி வெளியேறுகிறது.இதனால் நம்முடைய ஆயுள் காலம் குறையும்.

தென் திசையில் தலை வைத்துப் படுத்தால் பாதம் வழியாக மின்காந்த சக்தி தலைக்கு ஏறி நம் உடலில் ஆற்றல் மற்றும் ஆயுட் காலத்தை அதிகரிக்கிறது.

நாம் உறங்கும் பொழுது குப்பர படுத்து உறங்க கூடாது.அவ்வாறு நாம் உறங்கினால் உடம்பில் உள்ள உறுப்புகளின் செயல்பாடுகள் குறைய ஆரம்பிக்கும். வானத்தைப் பார்த்தும் படுக்க கூடாது. அவ்வாறு உறங்கினால் குறட்டை வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

எப்படி உறங்க வேண்டும் என்றால் இடது கை கீழாகவும் வலது கை மேலாகவும் வைத்து உறங்க வேண்டும்(அதாவது ஒருக்களைத்து படுக்க வேண்டும்)இப்படி உறங்கினால் உண்ட உணவும் நன்கு செரிமானம் அடையும்.நம்முடைய உடலில் இருந்து வெளியேறும் ஆக்ஸிஜனின் அளவானது குறைவாக இருக்கும்.

நம்முடைய அன்றாட வாழ்வில் செய்யும் செயலை மேலே குறிப்பிட்ட படி சரியாக செய்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இயற்கையோடு ஒருங்கிணைந்து வாழ்ந்தாலே நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

 

 

 

 

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam