Visitors have accessed this post 816 times.

இந்த 6 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க… எப்பேர்ப்பட்ட முடி உதிர்வும் நின்னுடும்… கட்டுக்கடங்காமல் வளரும்…

Visitors have accessed this post 816 times.

இந்த 6 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க… எப்பேர்ப்பட்ட முடி உதிர்வும் நின்னுடும்… கட்டுக்கடங்காமல் வளரும்…

நீண்ட, வலுவான மற்றும் ஆரோக்கியமான கூந்தல் வேண்டும் என்பதே இந்த பூமியில் பெண்களாக பிறந்த அனைவரது ஆசையாக இருக்கும். சில எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் இது சாத்தியம் ஆகும் என்பதை அவர்கள் மறந்துவிட வேண்டாம்.

 

எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல் தலை முடியை நீளமாக வளர்ப்பது எப்படி? தலைமுடி நீளமாக வளர்வதற்கு பின் உள்ள அறிவியல் என்ன என்ன வகை சத்துகள் தேவை உள்ளிட்டவற்றை முழுமையாக காணலாம் வாருங்கள்.

 

பெண்களுக்கு சிறு வயதில் இருந்தே, நீண்ட, அழகிய, வலுவான கூந்தல் அதுவும் ராபன்ஸல் என்ற கார்ட்டூன் கதாபாத்திரம் போன்று இருக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். சிலருக்கு இந்த விருப்பம் நிறைவேறாமல் இருந்தால், அவர்களுக்கு இந்த கட்டுரை மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கும்.

 

நீண்ட கூந்தல் என்பது பெண்மையின் சிறந்த அடையாளமாக விளங்குகிறது. அதை பெறுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பதை பெண்கள் நன்றாக அறிவார்.

 

காற்று மாசு, அழுக்குகள், தூசி உள்ளிட்ட காரணிகள், முடி வளர்ச்சியை கடுமையாகப் பாதிக்கின்றன. சில எளிய முடி பாதுகாப்பு வழிமுளைகளை மேற்கொண்டு முடி உதிர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை தவிர்க்கலாம். உங்கள் கனவு ரபன்ஸ்ல் முடி அமைப்பையும் நனவாக்கலாம்.

​உச்சந்தலையில் மசாஜ் செய்யுங்கள்

உச்சந்தலையில் மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள் நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. இதற்குப்பதிலாக, நாம் அதிகளவு பேன்சி பொருட்களை பயன்படுத்தி வருகிறோம். உச்சந்தலையில் நன்றாக மசாஜ் செய்வதன் மூலம், ரத்த ஓட்டம் சீராகி, மயிர்க்கால்கள் உள்ளிட்ட தலையின் மற்ற பகுதிகளுக்கு ரத்தம் சரியான அளவிற்கு செல்கிறது. இதன்மூலம், மயிர்க்கால்கள் வலிமை பெறுவதோடு மட்டுமல்லாது, முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.

தினமும் காலையில் சாதாரணமாக வெறும் கைகளினால், உச்சந்தலையில் மசாஜ் செய்து வரவும். எண்ணெயை தயவுசெய்து பயன்படுத்த வேண்டாம்.

 

வெந்நீர் தவிர்க்கலாம்

சுடு தண்ணீரில் குளிப்பது குளிர் காலங்களுக்கு மட்டுமே ஏற்றது. இந்த காலகட்டங்களில், கூட, தலைக்கு சுடு தண்ணீரை பயன்படுத்த வேண்டாம். இது உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் உள்ள எண்ணெய் பசைகளை முற்றிலும் அகற்றிவிடும்.

 

இது முடியை வலு இழக்க செய்து, இறுதியாக முடி உதிர்வுக்கு வழிவகுத்துவிடுகிறது. குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரை கொண்டு தலைக்கு குளிப்பதன் மூலம், முடிக்கு தேவையான ஈரப்பதம் உள்ளிட்ட பண்புகள் இழக்காமல் காக்கப்படுவதை உறுதி செய்யலாம்.

 

ஆமணக்கு எண்ணெய்

ஆமணக்கு எண்ணெயின் பலன்கள் குறித்து நாள் முழுவதும் பேசிக்கொண்டே இருக்கலாம். அந்தளவிற்கு இதில் எண்ணற்ற மருத்துவ பயன்கள் நிறைந்துள்ளன. முடி வளர்ச்சிக்கு இந்த எண்ணெய் பேருதவி புரிகிறது. கேச பராமரிப்பு நிபுணர் இதுகுறித்து கூறியதாவது, ஆமணக்கு எண்ணெயில் அதிகளவில் கொழுப்பு அமிலங்கள் உள்ளன.

 

அதுமட்டுமல்லாது, இதில், ஓலேயிக் அமிலம், லினோயிக் அமிலம், வைட்டமின் இ,மினரல்கள் மற்றும் புரதங்கள் உள்ளன. இவை மயிர்கால்களுக்கு தேவையான சத்துகளை அளித்து முடி வளர்ச்சிக்கு துணை புரிகிறது.

 

கொழுப்பு உணவுகளை சேர்த்துக் கொள்ளுதல்

முடி வளர்ச்சிக்கு பல்வேறு காரணிகள் தேவைப்படுகின்றன. நமது உணவில், ஆரோக்கியமான கொழுப்பு அடங்கிய உணவு வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒமேகா 3 போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள், முடி வளர்ச்சியை துரிதப்படுத்துகின்றன. இந்த கொழுப்புகள், மயிர்க்கால்களை பொலிவுறச் செய்து முடியை வலுவாக வைத்திருக்க உதவுகிறது.

 

எசன்ஷியல் ஆயில்

அத்தியாவசிய எண்ணெய்களை சரியான நேரங்களில், சரியான அளவில் நாம் பயன்படுத்தும் போது, அது நமது மனஅழுத்தத்தை குறைப்பதோடு மட்டுமல்லாது, அழகான மற்றும் உறுதியான கேசம் கிடைப்பதற்கும் உதவுகிறது. ரோஸ்மேரி, லாவண்டர், பெப்பர்மின்ட் ஆயில் போன்றவை அத்தியாவசிய எண்ணெய்களாகும், இவை முடி வளர்ச்சிக்கு பேருதவி புரிகிறது.

 

இந்த வகை ஆயில்களை மிகச் சிறிதளவே எடுக்க வேண்டும். அளவுக்கு மிஞ்சினால், அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியை நாம் எத்தருணத்திலும் மறந்துவிடக் கூடாது.

 

​உச்சந்தலையை எக்ஸ்போலியேட் செய்யவும்

ஆரோக்கியமான உச்சந்தலையால் மட்டுமே, ஆரோக்கியமான முடியை தாங்கிக்கொள்ள முடியும். முடி வளர்ச்சிக்கு வித்திட முடியும். வாரத்திற்கு ஒருமுறை, தலைமுடியை எக்ஸ்போலியேட் செய்வது போன்று, உச்சந்தலையையும் அவ்வப்போது எக்ஸ்போலியேட் செய்து கொள்ள வேண்டும்.

 

காபிப்பொடியை கொண்டு உச்சந்தலையில் தேய்த்து வருவதால் , அபரிமிதமான பலன்களை நாம் காண முடியும் என்று பிரிட்டிஷ் டெர்மடாலஜி ஜெர்னலில் குறிப்பிடப்பட்டுள்ளது. காபியில் உள்ள காஃபின் வேதிப்பொருள், முடி வளர்ச்சியை துரிதப்படுத்தும் சக்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

​பாரம்பரிய முறை

நம்முடைய அம்மாக்கள், பாட்டிகளுக்கு தலைமுடி எவ்வளவு நீளமாக இருந்துள்ளது என்பதை நாம் கண்கூடாகவும், செவி வழி செய்தியாகவும் கேட்டு பிரமித்து இருந்திருப்போம். அவர்கள் தங்களது தலைக்கு தேய்க்கும் எண்ணெய்களில் பெரும்பாலும், வீட்டிலேயே இருக்கும் இயற்கைப் பொருட்களே நிறைந்திருக்கும்.

 

இந்த எண்ணெயை கொண்டு, தலைமுடி மட்டுமல்லாது உடலுக்கு ஏற்படும் அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் அவர்கள் தங்களை காத்துக் கொண்டனர். அவர்கள் பயன்படுத்திய எண்ணெயில், கறுப்பு எள் மற்றும் நெல்லிக்காய் பிரதான பொருளாக இருந்து வந்துள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

 

நெல்லிக்காய் எண்ணெய் நன்மைகள்

இந்தியன் கூஸ்பெரி என்று அழைக்கப்படும் ஆம்லா (நெல்லிக்காய்), வைட்டமின், மினரல்கள் பவர் ஹவுஸ் ஆக விளங்குகிறது. இது உங்கள் கூந்தலுக்கு மெருகூட்டுவதோடு மட்டுமல்லாது, முடி சம்பந்தமான பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவுகிறது.

ஆம்லாவில் உள்ள அதிகளவிலான கொழுப்பு அமிலங்கள், மயிர்க்கால்களில் ஊடுருவி, அதன் வளர்ச்சியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாது முடிக்கு வலுவையும் வழங்குகிறது. இதன் காரணமாக, முடி உதிர்வு தடுக்கப்படுகிறது.

முடி உதிர்தலுக்கு காரணமான அமினோ அமிலங்களோடு போராடுகிறது. ஆம்லாவில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள், இளவயதிலேயே ஏற்படும் வெள்ளை முடிகள் வளர்ச்சிக்கு தடை விதிக்கிறது.

கருப்பு எள் பயன்படுத்துவதன் நன்மைகள்

கறுப்பு எள், கூந்தலை பராமரிப்பதோடு,முடியில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைகிறது. முடி நலத்திற்கு இந்த கருப்பு எள் பேருதவி புரிகிறது. கறுப்பு எள்ளில் உள்ள ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள், முடி வளர்ச்சியை தூண்ட உதவுகிறது.

இதில் உள்ள மாய்ஸ்சுரைசர்கள், தலை முடியில் வறட்சி ஏற்படுவதை தடுக்கிறது. கூந்தலுக்கு தேவையான நீரேற்றம் செய்வதால், முடியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது.முடிக்கு தகுந்த பளபளப்பையும், வனப்பையும் அளிக்கிறது.

கறுப்பு எள் மற்றும் ஆம்லா ஹேர் ஆயிலில் இத்தகைய நற்பலன்கள் இருக்கும்போதும், இவை இரண்டும் சேர்ந்த கலவை, நம் கூந்தலுக்கு இதுபோன்ற எத்தகைய நற்பலன்களை வழங்கும் என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். முடி வளர்ச்சிக்கு உதவும், கருப்பு எள் கலந்த ஆம்லா ஹேர் ஆயிலை நாம் வீட்டிலேயே தயாரிக்க முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு.

 

கருப்பு எள் ஆம்லா ஹேர் ஆயில் செய்முறை

ஒரு கோப்பை ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்

3 ஆம்லா (நெல்லிக்காய்)

2 தேக்கரண்டி கருப்பு எள் விதைகள்

செய்முறை

ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெயில் தேவையான அளவு கறுப்பு எள்ளை சேர்த்து, அதை நாள் முழுவதும் ஊற வைக்கவும். கறுப்பு எள்ளில் உள்ள சத்துக்கள் அனைத்தும் தற்போது அந்த எண்ணெயில் இருக்கும்.

ஆம்லாவை ( நெல்லிக்காயை) நன்றாக கலப்பான் வைத்து தட்டி வைத்துக் கொள்ளவும்.

தட்டி வைக்கப்பட்ட ஆம்லா உடன், கருப்பு எள் கலந்த எண்ணெய் சேர்க்கவும்.

இந்த கலவையை, குறைந்த வெப்பநிலையில், 2 நிமிடங்கள் சூடுபடுத்தவும். இவை இரண்டும் ஒன்றோடு ஒன்றாக கலப்பதை கண்கூடாக காணலாம். அதை ஆற வைக்கவும். பின் அதை நன்றாக கலக்கவும். பின் மீண்டும் இந்த கலவையை குறைந்த வெப்பநிலையில், 2 மணி நேரத்திற்கு சூடுபடுத்தவும். பின் அதை குளிர்விக்கவும். வடிகட்டியை கொண்டு இந்த கலவையை வடிகட்டவும். கருப்பு எள் கலந்த ஆம்லா ஹேர் ஆயில் தயார்.

​எப்படி பயன்படுத்த வேண்டும்?

கருப்பு எள் கலந்த இந்த ஆம்லா ஹேர் ஆயில், வாரத்திற்கு ஒருமுறை தலையில் தடவி வந்தால், அளப்பரிய பலன்களை கண்கூடாக காணலாம்.

ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெய் உங்களுக்கு சேராத பட்சத்தில், அழகுப்பொருட்களில் பயன்படுத்தப்படும் ஜோஜேபா எண்ணெயை இதில் பயன்படுத்தலாம்.

கறுப்பு எள் கலந்த இந்த ஆம்லா ஹேர் ஆயில்,முடி வளர்ச்சிக்கு ஏற்றதாக இருப்பதோடு மட்டுமல்லாது, முடிகளில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதோடு, கூந்தல் வலுவுடன் இருக்கவும் உதவுகிறது.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam