Visitors have accessed this post 813 times.

இயற்கை தந்த பரிசு

Visitors have accessed this post 813 times.

இயற்கை தந்த பரிசு

ஒரு பெரிய கிராமம் அந்த கிராமம் மிகவும் செழிப்பாக இருந்தது அதன் அருகில் ஒரு அழகான அடர்ந்த காடு இருந்தது அந்த காட்டில் அனைத்து வகையான மரங்கள் , பறவைகள், விலங்குகள் , பூச்சிகள் அனைத்தும் வாழ்ந்து வந்தன அவைகள் அனைத்தும் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தன நாட்கள் கடந்து சென்றுகொண்டிருந்தது திடீரென்று ஒருநாள் ஒரு மனிதன் மரங்களை வெட்டுவதற்கு காட்டிற்குள் வந்தான் உடனே காட்டில் உள்ள விலங்குகள் பறவைகள் மரங்கள் அனைத்தும் பயந்து கொண்டே இருந்தன அந்த மனிதன் தனக்கு வேண்டிய மரங்களை வெட்டி எடுத்துச் சென்றுவிட்டான் இதேபோன்று அந்த மனிதன் தினந்தோறும் காட்டிற்குள் வந்து மரங்களை வெட்டி எடுத்துக் கொண்டு சென்றான் தினமும் இவ்வாறே நாட்கள் சென்றன அந்த மனிதன் வெட்டி கொண்டு செல்லும் மரத்தைப் பார்த்து சிலரும் நாமும் மரங்களை வெட்டி கொள்ளலாம் என்று அந்த காட்டிற்குள் போய் தினம்தோறும் மரங்களை வெட்ட ஆரம்பித்தனர் மரங்களை வெட்டி  காட்டில் உள்ள மரங்கல் அனைத்தும் தீர்ந்து போய்விட்டது  காட்டில் வாழ்ந்த மிருகங்கள் பறவைகள் அனைத்தும் அந்த காட்டை விட்டு வேறொரு இடத்திற்கு சென்று விட்டனர் கோடை காலம் தொடங்கியது  குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லாமல் கிணறு வற்றி விட்டது   வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் ஒதுங்கி நிற்பதற்கு குடை போன்று இருந்த மரங்களும் இல்லை மிகவும் வறுமையின் எல்லைக்கே சென்று விட்டது அந்த கிராமம் மக்களுக்கு ஒன்றும் புரியவில்லை அனைவரும் மிகவும் பயத்துடன் இருந்தன இப்படியே சில மாதங்கள் சென்றுவிட்டன பருவ காலம் தொடங்கியது ஆனால் மழை துளி கூட பொழியவில்லை மக்கள் அனைவரும் மிகுந்த வேதனையுடன் இருந்தன  ஒரு தாத்தா காட்டிற்குள் சென்று ஒரு மரத்தின் அடியில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார் திடீரென்று ஒரு குரல் கேட்டது  சுற்றும் முற்றும் பார்த்தார் யாரும் இல்லை திரும்பியும் குரல் கேட்டது தாத்தா தனது பின்புறம் திரும்பிப் பார்த்தார்  தங்களை நான்தான் அழைத்தேன் என்று கூறியது மரம் தாத்தாவுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது மரம் தாங்கள் ஏன் அழுகிறீர்கள் என்று தாத்தாவிடம் கேட்டது பதிலுக்கும் தாத்தா தன்னுடைய கிராமத்தில் நடந்த அத்தனையும் கூறினார்  பதிலுக்கு மரம் ஆமாம் அது எனக்கும் தெரியும் நாங்கள் இங்கு செழிப்பாக இருந்ததனால் நீங்கள் அங்கு நான்றாக இருந்தீர்கள் உங்கள் மனிதர்கள் எங்களை வெட்டி எடுத்து சென்றுவிட்டனர் அதனால் எங்களால்உங்களுக்கு உதவ முடியாமல் போய்விட்டது என்று மரம் கூறியது தாத்தாவிற்கு புரியவில்லை தாத்தா பதிலுக்கு எனக்கு சரியாக புரியவில்லை எனக்கு தெளிவாக சொல் மரமே என்றார் நாங்கள்  காடாக இருந்தோம் இங்கு அனைத்து வகையான பறவைகள் விலங்குகள் இருந்தனர் அதனால் அவர்களின் மூலம் மரங்கள் அதிகமாக வளர்ந்தன ஆனால் நீங்களோ காட்டில் இருந்த மரங்கள் அனைத்தையும் வெட்டி காட்டையே அழித்து விட்டீர்கள் அதனால் பறவைகள் விலங்குகள் வேறு இடத்திற்கு சென்று விட்டன மரங்கள் அதிகமாக இருந்தால்தான் மழை பொழிவு ஏற்படும் மண் அரிப்பைத் தடுக்கப்படும் நிழல்கள் தரப்படும் ஆனால் நீங்களோ சரியாக இதை அறியாமல் எங்களை நீங்கள் வெட்டி எடுத்து விட்டீர்கள் அதனால் எங்களால் உங்களுக்கு உதவி செய்யாமல் போய் விட்டது அதனால் நீங்கள் இப்பொழுது வறுமையில் வாடுகிறார்கள் அப்படி என்று மரம் கூறியது தாத்தா மிகவும் வேதனைப்பட்டார் உடனே தாத்தா கிராமத்திற்கு சென்று மக்களிடம் நாம் காட்டை அழித்த பின்பு தான் இதெல்லாம் நடந்தது உடனே நாம் அனைத்து வகையான மரங்களும் காட்டில் நட்டு வளர்க்க வேண்டும் என்று கூறினார் 

உடனே மக்களும் சரி என்று கூறினர் மரங்களை நட்டு வளர்க்க ஆரம்பித்தனர் சில நாட்கள் போக போக  மரங்களும் வளர்ந்து விட்டன பருவ காலம் தொடங்கியது மழைப்பொழிவு ஏற்பட ஆரம்பித்தது மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அப்பொழுது தான் தன்னுடைய தவறை அவர்கள் உணர்ந்தார்கள் மரங்கள் இல்லை என்றால்   மழைகள் கிடைக்காது மரங்களை நாம் நன்றாக பாதுகாக்க வேண்டும் காடு என்பது நமக்கு முக்கியமான ஒன்று என்று அந்த கிராமத்து மக்கள் உணர்ந்து கொண்டனர் காடு என்பது இயற்கையின் உயிராகும் அவற்றை பாதுகாப்பது நம் கடமையாகும் இவை கதை மட்டுமல்ல நம் வாழ்க்கையின் ஒரு முக்கியமான பகுதி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்

Leave a Comment

Write and Earn with Pazhagalaam