Visitors have accessed this post 846 times.
இயற்கை
இயற்கை மிகவும் அழகானது மனிதர்களுக்கும் இயற்கைக்கும் மிகவும் ஒற்றுமை உள்ளது ஏனென்றால் நாம் எதைக் கொடுக்கிறோமோ அதையே நமக்கு இயற்கை திருப்பி கொடுக்கின்றது.
இயற்கையை நாம் நண்பனாகவே கருதிக் கொள்ளலாம் இயற்கைக்கு நாம் நல்லது செய்தால் நமக்கும் நன்மை செய்கின்றது நாம் இயற்கைக்கு தீங்கு விளைவித்தால் நமக்கும் இயற்கை தீங்கு விளைவிக்கின்றது
உதாரணமாக நாம் மரங்களை வளர்த்தால் இயற்கை நமக்கு மழை நீரை தருகின்றது மாறாக நாம் பல குப்பைகளை எரிப்பதால் இயற்கை நமக்கு தீங்கு விளைவிக்கின்றது உதாரணத்திற்கு குப்பைகளை எரிப்பதால் காற்று சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது மற்றும் பனிப்பாறைகள் உருகி கடல் நீர்மட்டம் அதிகரிக்கின்றது
இயற்கை மிகப்பெரிய அற்புதம் ஆகும் அது நமக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும் நாம் தான் அதை சரியான முறையில் பயன்படுத்துவதே இல்லை
எத்தனை செயற்கை பொருட்கள் இருந்தாலும் அதற்கு அடித்தளமாக இருப்பது இயற்கை
இயற்கையிலிருந்து நமக்கு உடல் ஆரோக்கியம் மன ஆரோக்கியம் போன்ற அனைத்துமே கிடைக்கின்றது
எனவே இயற்கை பாதுகாத்து நாம் இயற்கையை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம்