Visitors have accessed this post 57 times.
நான் என்னோட முதல் பதிவுல சொல்லியதோட தொடர்ச்சி தான் இது .
உண்மையிலேயே நம்ம நாத்தனார்களுக்கு விருது தாங்க கொடுக்கணும்.
அவங்க சொந்த காரங்க முன்னாடி நம்மள தாங்குறதுலயும், தனியா இருக்கும் பொது நம்மள நடத்துற விதத்துல நடிகர் திலகமே தோத்துருவாரு போங்க .
இந்த மாமியார்களுக்கும் நாத்தனார்களுக்கும் எதனால இந்த மருமகள்களை புடிக்காம போகுதோ எனக்கு தெரிலைங்க .
நாம உண்டு நாம வேல உண்டுன்னு இருந்தாலும் நம்மள சொறிஞ்சி பாக்குறது தன அவங்களோட முதல் வேலைய இருக்கும்.
ஒன்னும் இல்லைங்க நம்ம கொஞ்ச நேரம் அதிகமா தூங்கிட்டா கூட அவங்களுக்கு மூக்கு வேர்த்துறது .
”என்ன இன்னுமா அவ தூங்கிட்டு இருக்கா?
இவ்ளோ நேரம் தூங்குன குடும்பம் எப்படி விளங்கும்?”
என்னமோ இதுக்கு முன்னாடி அவங்க செல்வ செழிப்போடு இருந்த மாதிரியும் நாம தூங்குற அந்த கொஞ்ச நேரத்துல தான் அவங்க வீடு மஹாலக்ஷ்மி வீட்டை விட்டு ஓடி போயிருவாங்குற மாதிரியும் பேச வேண்டியது.
இதுலயும் அவங்க பொண்ணுங்களுக்கு ஒரு சட்டம்னும், வீட்டுக்கு வந்த மருமகள் ஒரு சட்டம் னு இருக்குறது என்ன நியாயம்னு எனக்கு புரிலைங்க .
பெத்த பொண்ணு தூங்குனா , ” பாவம் அசத்திய இருக்கா போல அதான்தூங்குறா”
நாம தூங்குன” நல்லா தின்னுட்டு தூங்க வேண்டியது “.
அவங்க எதிர்த்து பேசுனா ” என் பொண்ணு எவ்ளோ தைரியமா பேசுறா பாரு’
நாம பேசுனா ” அதிக பிரசங்கி , எவ்ளோ துமுரா பதில் சொல்றா பாரு, என்ன வளர்ப்போ ?”.
இந்த பொண்ணுங்களுக்கு எதிரி , கூட இருக்குற இன்னொரு பொண்ணு தாங்க
அதுவும் கல்யாணம் ஆகி இருக்குற பொண்ணுங்களுக்கு , மாமியாரும் , நாத்தனாரும் தாங்க ,.
இந்த உலகத்துல நிறைய மாமியாருங்க மருமகள்களை பொண்ண பாத்துக்குறவங்களும் இருக்காங்க அதுவும் கொஞ்ச பேர் தான் .
அண்ணிக்கு ஒண்ணுன்னா ஓடி வர நாத்தனார்களும் இருக்காங்க ,.
நன் அவங்கள பத்தி பேசல .
ஆனா எங்களுக்குனு வராங்க பாத்திங்களா அவங்களபத்தி மட்டும் தான் பேசுறேன்.