Visitors have accessed this post 68 times.
எப்டியோ கல்யாணம் ஆகி ஒரு மாதத்தில் தெரிந்து விட்டது நன் கர்ப்பமாக இருக்கிறேன் என்று .
நான் அப்பொழுது எல்லாம் சென்னையில் கணவனுடன் தங்கி இருந்தேன், அவர் சென்னையில் ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலை பார்த்து கொண்டிருந்தார் .
அதனால் நான் எனது சொந்த ஊரை விட்டு கணவனுடன் தங்கி இருந்தேன் .
அம்மாவிற்கு கொள்ளை சந்தோசம், அப்பா எப்பொழுதுமே சந்தோசத்தை வெளிக்காட்டாதவர் .
அத்தை , நாத்தனார் என்று ஒரு ஆள் விடாமல் சொல்லியாகிவிட்டது .
5 மாதம் கர்ப்பிணியாக தான் சொந்த ஊரிற்கு சென்றேன் .
கொஞ்ச நாள் அங்கு இருந்து விட்டு திரும்பவும் சென்னைக்கு வந்துவிட்டேன்.
எப்பொழுதுமே என் கணவர் தான் என்னை கொண்டு வந்து விடுவதும் அழைப்பதுமாக இருப்பார்.
அதற்குள் என் நாத்தனார் , மற்றும் மாமியார் மார்கள் அதற்குள் அவர்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்து வைத்து விடுவார்கள்.
எனக்கு 7 மாதம் வரையிலும் ஒரே பிரச்சனை தான்.
நிறைய வாந்தி , மயக்கம், பத்தாததிற்கு இவர்கள் செய்யும் குளறுகள் வேறு.
நிறைய நாட்களை அழுது தான் கழித்தேன்.
தனிமையில் இருக்கும் சோகம் வேறு, அம்மாவை பார்க்க வேண்டும் என்ற ஆவல் வேறு, அப்பா அண்ணன் பாசத்திற்காக நிறைய நாட்கள் ஏங்கி இருக்கின்றேன்.
என்ன தான் அவர்கள் தொலைபேசி யில் பேசினாலும் அவர்களை நேரில் காணாததும், யாரும் இல்லாமல் இருப்பதை போல் ஒரு உணர்வு என் மனத்தில் இருந்து கொண்டே இருந்தது.
இந்த நேரத்தில் அவர்களுக்கு மிக பெரிய அரவணைப்பே அம்மாவிடம் இருப்பது தான்.
அதற்காக தான் நான் தினமும் அழுவேன்.
அதற்குள் என் நலம் விரும்பிகள் நான் என் மாமியார் மாமனாரை சரியாக கவனித்து கொள்வது இல்லை என்றும், எந்த ஒரு வேலையும் பார்ப்பது இல்லை என்றும் பத்த வைக்க ஆரம்பித்தார்கள்.
அது அவர்களது வழக்கம் தானே.
முதல் பேச்சு என் நாத்தனாரிடம் இருந்து தான் ஆரம்பிக்கும் என்று எங்கு நன்றாக தெரியும்.
என் மாமியார் சும்மா இருந்தாலும் அவரை ஏற்றிவிட்டுட்டு வேடிக்கை பார்ப்பது என் நாத்தனாருக்கு கை வந்த கலை.
நான் எப்பொழுதுமே அவர் விருப்பத்திற்கு தான் நடக்க வேண்டும், அதற்காக அவர் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போவார்.
எப்படியோ திருமணமாகி பத்து மாதத்தில் என் மகன் பிறந்து விட்டான்.
அவன் பிறந்து பிறகு நான் அம்மா வீட்டில் 3 மாதங்கள் இருந்தேன்.
அந்த சமையத்தில் தான் அந்த ”செய்தி” என் காதில் வந்து விழுந்தது.