Visitors have accessed this post 825 times.
உறவுகள் RELATIONSHIPS
காதலர்களுக்கு இடையேயான உறவு முறைகள்
Relationship patterns between lovers
கணவன் மனைவிக்கு இடையேயான உறவு முறைகள்
Relationship patterns between husband and wife
இந்தியாவில் காதல் திருமணத்தை விட நிச்சியிக்கப்பட்ட திருமணம் ஏன் சிறந்ததாக கருதப்படுகிறது?
திருமணம் என்பது சமுதாயத்தில் இரு புது உறவுகளை இணைக்கும் ஒரு பந்தமாகும். இது திருமணம் என்ற புனிதமான பிணைப்பின் மூலம் மணமகள் மற்றும் மணமகனையும் மேலும் அவர்களது குடும்பத்தினரையும் மத ரீதியாக இணைக்கிறது.
நம் நாட்டில் திருமண சடங்குகள் மற்றும் மரபுகள் பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகின்றன. பெற்றோர்கள் சிறந்த முடிவை தான் எடுப்பார்கள் என்பதால், காதல் திருமணங்களை விட பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்கள் சிறந்ததாக கருதப்படுகின்றன.
திருமணம்:
ஜாதகம், நம்பகமான திருமண தளங்கள் மற்றும் பெற்றோர்கள் காரணமாக அதிக சதவீத மக்கள் (80-85%) பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்களையே தேர்வு செய்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. மத மோதல்கள், கலாச்சார வேறுபாடுகள், குடும்பங்களுடன் ஒத்து போகாதது மற்றும் பிற முக்கியமான காரணங்களால் வெகு சிலரே இந்தியாவில் காதல் திருமணத்தைத் ஏற்று கொள்கிறார்கள்.
ஆரம்பத்தில் காதல் திருமணம் செய்ய விரும்பினாலும் கூட மக்கள் பிற்பாடு பெற்றோரால் நிச்சயிக்கப்படும் திருமணங்களையே விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சமுதாயத்தில் காதல் திருமணங்களை விட பெற்றோரால் நிச்சியிக்கப்படும் திருமணங்கள் சிறந்தவை என்ற ஊகத்திற்கு நம்மை அழைத்துச் எது என்று தெரிந்து கொள்வோம்.
நம்பிக்கை சார்ந்த விஷயம்:
பெற்றோரால் நிச்சியிக்கப்படும் திருமணங்கள் என்பது யுகங்களாக தொடரும் நம்பிக்கையாகும். பெற்றோரால் நிச்சியிக்கப்படும் திருமணங்கள் சிறந்தது என்பது பல யுகங்களுக்கு முன்பிருந்து பிரபலமான நம்பிக்கையாகும். இதேபோன்ற நம்பிக்கைகள், கலாச்சாரங்கள் மற்றும் மரபுகள் உள்ளவர்கள் திருமண பந்தங்களில் நெருங்கி வருகிறார்கள். திருமணம் என்பது இரண்டு பேருடன் முடிவதல்ல, அவர்களது குடும்பங்கள் இரண்டிற்கும் இடையிலான பிணைப்பு ஆகும். பழங்காலத்திலிருந்தே, மற்றோரு குடும்பங்கள், பெற்றோர்கள், சமூகங்கள், நாடுகளை ஒன்றிணைக்க திருமணங்கள் உதவுகின்றன. இந்த வழக்கம் ஆதி காலத்திலிருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் இப்போதும் மக்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.
சம்மதம் பெறுவது:
அதிக சதவீத மக்கள் எந்தவிதமான வற்புறுத்தலும் இல்லாமல் நடைபெறும் பெற்றோரால் நிச்சியிக்கப்படும் திருமணத்தை விரும்புகிறார்கள். அவர்கள் அமைதியுடனும் ஒற்றுமையுடனும் வாழ இது ஒரு சரியான தீர்வாக இருக்கும் என நம்புகிறார்கள். பல நேரங்களில், காதல் திருமணங்கள் செய்பவர்களுக்கிடையே அதிக சிரமங்களும் சச்சரவுகளும் ஏற்படுகின்றன.
பல ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, காதல் திருமணங்களில் விவாகரத்து விகிதம் அதிகமாக உள்ளது என தெரிகிறது. இந்திய இளைஞர்கள் தங்கள் பெற்றோர்கள் திருமணத்திற்கு பொருத்தமான சிறந்த ஒருவரை தேர்ந்தெடுக்கிறார்கள் என்று நம்புகிறார்கள். திருமண ஜோடிகள் வெவ்வேறு மதங்களை அல்லது சாதியைச் சேர்ந்தவர்கள் என்றால், காதல் திருமணம் செய்ய தம்பதியினர் அவர்களது குடும்பங்களை சம்மதிக்க வைக்க கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்,
நிச்சயிக்கப்பட்ட திருமணம்:
பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் சமமான நிலை, நிதி ஸ்திரத்தன்மை, கலாச்சார அடையாளம் மற்றும் குடும்பங்களிடையே ஒத்த கருத்துக்களை ஏற்படுத்துகின்றன. எனவே, இங்கு பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு மிக குறைவு. இதில் உள்ள ஒரு பிரச்சனை என்னவென்றால், தம்பதியினருக்கு ஒருவருக்கொருவரை பற்றி தெரிந்திருப்பதில்லை அல்லது திருமணத்திற்கு முன்பு அவர்கள் ஒருவரை ஒருவர் நேசிப்பதில்லை என்பது தான்.
காதல் திருமணத்தை பற்றிய தாழ்மையான சித்தரிப்பு:
பெற்றோரால் நிச்சயம் செய்யப்பட்ட மற்றும் காதல் திருமணங்களுக்கிடையே உள்ள ஒரு பெரிய பாகுபாடு என்னவென்றால், காதல் திருமணத்தைத் தேர்ந்தெடுத்தவர்கள் நன்றாக வாழ்ந்து காட்டினால் கூட பெரியவர்கள் அவர்களை ஏற்றுக் கொள்வதில்லை. இரு தம்பதியினரும் அவர்களது குடும்ப வாழ்க்கையில் சிறப்பாக இருந்தாலும், பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமண தம்பதிகள் அவர்களின் சிறந்த பிணைப்புக்காக அதிகம் பாராட்டப்படுகிறார்கள். இன்றுவரை, நாட்டின் பல பகுதிகளில் உள்ள பெரியவர்கள் காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்ளாமல், அது முறையற்றது என்று கருதி, அதை ஒரு ‘முதிர்ச்சியற்ற, அவசர’ முடிவாக முத்திரை குத்துகிறார்கள்.
காதல் திருமணங்கள்:
இருப்பினும், தற்போது பல காதல் திருமணங்கள் பலராலும் வரவேற்கப்படுகின்றன. குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின் விருப்பங்களையும், அவர்கள் விரும்பும் ஒருவருடன் அவர்களது வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்கான முடிவுகளையும் புரிந்துகொள்வதில் முன்னேறி இருக்கின்றனர். தற்போதைய காலகட்டத்தில் காதல் திருமணங்கள் அதிகரித்து வந்தாலும், பெற்றோரால் நிச்சயம் செய்யப்பட்ட திருமணங்கள் இன்றும் ஆதிக்கம் செலுத்துகின்றன.
இந்த காதலர் தினத்திலாவது லவ் செட் ஆகணுமா? எப்பப்போ என்னென்ன செய்யணும்?
வேலன்டைன்ஸ் தினத்தை உலகமே, இன்னும் சில தினங்களில் கொண்டாட உள்ள நிலையில், வேலண்டைன் வாரம் என காதலர் தினத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே இந்த தினம் கொண்டாடப்படுகிறது. ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாளாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் என்ன நாள்? அதை காதலர்கள் எப்படி கொண்டாட வேண்டும் மேலும் அந்த தினங்கள் குறித்து நீங்கள் அறியாதவற்றை இங்கு பட்டியலிட்டுள்ளோம்…
எந்த நாடு, எந்த மதம், எந்த சாதி ஆக இருந்தாலும், ஆண், பெண் பேதமின்றி உலகில் உள்ள அனைவராலும், கொண்டாடும் பண்டிகைகளில் மிக முக்கியமான ஒன்றாக வேலன்டைன்ஸ் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்னும் சில தினங்களில், வேலன்டைன்ஸ் தினத்தை நாம் கொண்டாட உள்ளோம். இந்நிலையில், இந்த தினம் குறித்து நாம் இதுவரை பல தகவல்களை அறிந்தபோதிலும், அறியாத இன்னபிற தகவல்களை உங்களுக்காக நாங்கள் இங்கு தொகுத்து உள்ளோம். படித்து பயன்பெறுங்கள்…
ஹேப்பி வாலன்டைன்ஸ்:
பிப்ரவரி மாதம் அன்பின் மாதம் ஆகும். நாம் அனைவரும் இந்நேரத்தில் காதலர் தினத்திற்காக காத்திருப்பதால், காதல் என்ற அன்பின் காற்றில்.நாம் நம்மை மூழ்கடிப்பதை உணர முடிகிறது. பிப்ரவரி 14ம் தேதி, காதலர் தினம் சர்வதேச அளவில் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாள் காதல் / அன்பை முழுமையாக குறிக்கிறது.
ரோஸ் டேவில் துவங்கும் இந்த வாரம், வேலன்டைன்ஸ் தினத்தில் முடிவடைகிறது. இந்த ஒருவார கோலாகல கொண்டாட்டத்தில், பரிசுகள், சாக்லேட்டுகள், ரோஜாக்களை,நமக்கு பிரியமானவர்களுக்கு பரிசளிப்பதன் மூலம், இந்த கொண்டாட்டம் மேலும் கோலாகலம் அடைகிறது. வேலன்டைன்ஸ் வாரத்தின் ஒவ்வொரு நாளுக்கும் உள்ள சிறப்புகள் மற்றும் அதன் அர்த்தங்கள் குறித்து இனி ஒவ்வொன்றாக தெரிந்து கொள்வோம்.
பிப்ரவரி 7 – ரோஸ் டே:
காதல் வாரத்தின் முதல் நாள் ரோஸ் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிவப்பு ரோஜாக்கள், அன்பின் தூய வடிவமாக கருதப்படுகிறது. இந்த சிவப்பு ரோஜாக்கள் அடங்கிய பூச்செண்டுகளை, நமக்கு பிடித்தமானவர்களிடம் வழங்கும் நிகழ்வு, தூய அன்பை வெளிப்படுத்துவதை விட, அழகான காதல் வேறு எதுவும் இல்லை என்றே கூற வேண்டும். நீங்கள் இந்த தினத்தில், நமக்கு பிரியமானவர்களுக்கு ரோஜாப் பூவை பரிசாக வழங்கலாம். இது ஒற்றுமை மற்றும் ஆர்வத்தின் சக்தியை தன்னகத்தே கொண்டுள்ளது. இது அன்பை பகிர்ந்து அளிக்கிறது.
பிப்ரவரி 8 – புரபோஸ் டே:
ரோஸ் தினத்தை அடுத்து நாம் கொண்டாடுவது புரபோஸ் டே ஆகும். இந்த தினத்தில், நாம் அவர்களை உண்மையாக விரும்புகிறோம் என்பதை கடைசியாக சொல்வதற்கான சிறந்த வாய்ப்பாக அமைகிறது. இந்த நாள் தன்னகத்தே, ஒற்றுமையையும். வாக்குறுதியையும் கொண்டுள்ளது. இந்த நாளில், உங்களது வாக்குறுதி அல்லது நிச்சயதார்த்த மோதிரத்துடன் உங்களது காதலை வெளிப்படுத்த கிடைத்த வாய்ப்பே இந்த நாள் ஆகும்.
பிப்ரவரி 9 – சாக்லேட் டே:
என்னது சாக்லேட் தினமா என்று கேட்பவர்களுக்கு, ஆமாம். அன்றைய தினம் சாக்லேட் தினம் தான் என்பதை உரக்க சொல்லுங்கள். உங்களது காதலருக்கு இந்த நாளில், ஒரு சாக்லேட் அல்லது ஒரு பாக்சையே பரிசளிக்க வேண்டும். நீங்கள் உங்களது முயற்சியையும், விருப்பத்தையும் தெரிவிக்க உதவும் இந்த நாளில், அழகாக தயாரிக்கப்பட்ட சாக்லேட்களை வாங்கி பரிசாக அளிக்கலாம்.
பிப்ரவரி 10 – டெடி டே:
மென்மையான பொம்மைகள், மிருதுவாகவும், அழகாகவும் இருப்பதால், பெண்களுக்கு மிகவும் பிடித்தவைகளாக உள்ளன. டெடி பியர் பொம்மையை பரிசாக அளித்தால், அது அவர்களது முகத்தில் நிச்சயம் புன்முறுவலை வரவழைக்கும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. நடுவில் சிவப்பு இதயத்துடன் உள்ள டெடி பியர் பொம்மையை,நாம் விரும்புபவருக்கு பரிசாக அளிக்கும்போது, உங்களை அவர் உண்மையாக நேசிப்பதையும் நன்றாக கவனித்துக்கொள்வார் என்பதை அவர் புரிந்து கொள்வார். இது குழந்தை பருவ நினைவுகளின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. இது அவர்கள் மீது நீங்கள் நீண்ட காலமாக கொண்டிருந்த ஏக்கத்தை வெளிப்படுத்துவதாக அமையும்.
பிப்ரவரி 11 – பிராமிஸ் டே:
உங்களை உங்கள் காதலர்கள் எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கும் வகையிலான வாக்குறுதிகளை அளிக்க, இந்த நாளைத் தவிர சிறந்த நாள் வேறு எதுவும் இல்லை. பிப்ரவரி 11ம் தேதி, வாக்குறுதி நாளாக கொண்டாடப்படுகிறது. இது, விரைவில் துவங்க உள்ள பல தொடக்கங்களை குறிக்கிறது. ஒரு உறவில் ஒருவரை நேசிக்கவும், அவரை மதிக்கவும் முடியும் என்பதை வலியுறுத்தும் விதத்தில் இந்நாள் அமைந்துள்ளது.
பிப்ரவரி 12 –ஹக் டே:
நீங்கள் உங்கள் காதலரை கட்டி அணைப்பதன் மூலம், அவர் பாதுகாப்பாகவும், பாதுகாப்புத் தன்மையோடும் இருப்பதாக உணர்வார். காதலர்களுக்கு இடையேயான நெருக்கத்தை குறிக்க இந்த கட்டி அணைக்கும் நாள் போன்தொரு நாள் கட்டாயம் தேவைப்படுகிறது. காதலன், தனது காதலியை இந்நாளில் கட்டி அணைத்து, அவர்களின் அன்பு எனும் ஆற்றலை காதலியிடம் கடந்து செல்வதை உணர்வார். இது தன் மனம் விரும்பியவர் மீது அளவுகடந்த பாசத்தை பொழிவதற்காக மிகவும் இயல்பான பழக்க வழக்கங்களில் இதுவும் ஒன்றாகும்.
பிப்ரவரி 13 – முத்த தினம் ( கிஸ் டே):
காதலர் தினத்திற்கு முந்தைய நாள், இந்த கிஸ் டே கொண்டாடப்படுகிறது. நாளை என்ற நாள் இனி இல்லை என்பது போல, உங்களது காதலருக்கு முத்தத்தை கொடுங்கள். உங்களது மனம் கவர்ந்தவருக்கு அன்பு மற்றும் வணக்கத்தின் சுத்தமான வடிவத்தை வெளிப்படுத்தும் வகையில், இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. உங்களது மனம் கவர்ந்தவரின் கன்னங்கள் மற்றும் உதடுகளில் இடும் முத்தமானது, உங்களது காதல் ஹார்மோன்களை வெறித்தனமாக மாற்றிவிடுகிறது. காதலர்கள், இந்த தினத்தை மிகவும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருப்பர். இந்த முத்த தினம் ஆரோக்கியமானதாகவும், இதயத்தை வருடும் வகையிலான விசித்திர அதிர்வுகளை உங்களுக்கு அளிக்கும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
பிப்ரவரி 14 – காதலர் தினம்:
காதல் வாரத்தின் இறுதி மற்றும் கடைசி நாள் இந்த காதலர் தினம் ஆகம். இந்த தினத்தில்,காதல் என்ற உணர்வால், இருவரின் இதயங்களும் ஒன்றோடொன்று இரண்டுற காற்றுடன் கலந்ததை காதலர்கள் உணர்வர். இந்த நாள் பரிசுத்த காதலர் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. உலகெங்குமிலும் உள்ள காதலர்கள், இந்த நாளில், தங்கள் காதலர்களுடன் கபே, சினிமா தியேட்டர் உள்ளிட்ட இடங்களில் இனிமையாக இந்நாளை கழிக்கின்றனர். இந்த நாளில் காதல் மற்றும் மகிழ்ச்சியை அவர்கள் மது வகைகள் உள்ளிட்டவைகளுடன் உற்சாகமாக கொண்டாடி மகிழ்கின்றனர்.
நீங்கள் கமிட் ஆகனும்னா இதுக்கு நோ சொல்லுங்க..
இந்த கட்டுரையில் காதல் தோல்வி மற்றும் ஏமாற்றங்களுக்கு பிறகு புதிய உறவை தொடங்குவதற்கு முன்பு செய்ய வேண்டிய சில டிப்ஸ்கள் தரப்பட்டுள்ளன. நம்மில் பெரும்பாலோர் அன்பு, உற்சாகம், நம்பிக்கை மற்றும் திருப்தி நிறைந்த ஒரு உறவில் இருக்க விரும்புகிறோம். அது எப்பொழுதும் நிலையானதாக இருக்க வேண்டும் என நாம் விரும்புகிறோம்.
எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் விரும்பும் ஒருவருடன் ஒரு வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்வது என்பது பலரின் லட்சியமாகவே இருக்கிறது. கமிட் ஆவது என்பது அவ்வளவு எளிதாக நடந்து விட கூடியது அல்ல. இருப்பினும், சில நேரங்களில், முந்தைய அனுபவத்தின் மோசமான அனுபவங்களையும் அதிர்ச்சியையும் சமாளிக்க ஒரு உறவைத் தேடுகிறோம். காதல் தோல்வியோ அல்லது ஏமாற்றமோ ஏதோ ஒரு கெட்ட அனுபவம் நம்மை ஒரு புது உறவை தேட சொல்கிறது. ஆனால் இது தவறானது. இது உங்களுக்கு மேலும் தீங்கு விளைவிக்கும் என்பதால் இதைச் செய்யக்கூடாது என்பது தான் எங்களது அட்வைஸ். இதைப் பற்றிய கூடுதலாக தெரிந்து கொள்ள இந்த கட்டுரையை முழுமையாக படியுங்கள்.
உங்கள் லவ் பெயிலியரை பற்றி நீங்கள் இன்னும் சிந்திக்கிறீர்கள்:
நீங்கள் ஒவ்வொரு ஆணையும் அல்லது பெண்ணையும் உங்களது எக்ஸ் (கடைசியாக காதலித்த நபர்) உடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அல்லது அவரை இன்னும் சமூக ஊடகங்களில் பின்தொடர்ந்தால், அவரை அல்லது அவளை வேறொரு பெண்ணுடன் அல்லது ஆணுடன் பார்க்கும்போது உங்களுக்கு டென்சன் ஆகிறது என்றால், நீங்கள் ஒரு புதிய ஆணுடனோ பெண்ணுடனோ தொடங்குவதற்கு முன்பு அதை விட வேண்டும். கடினம் தான் என்றாலும் அவரை மறப்பது மட்டுமே புது உறவுக்கு நல்லது.
தனியாக இருக்க பிடிக்கவில்லை:
சிலருக்கு, தனிமை என்பது கடினமான ஒன்றாக இருக்கிறது. அது அவர்களுக்கு பிடிப்பது இல்லை. அத்தகைய நேரத்தில் தான் அவர்கள் ஒரு உறவைத் தேட ஆரம்பிக்கிறார்கள். இது மேலும் சிக்கல் ஆக்கும். ஒரு தேவைக்கு இன்னொரு உறவை தேடினால் அது சரி அல்ல. ஆனால், தனியாக இருந்தாலும் உங்களை நீங்கள் எண்டர்டெய்ன் செய்துக் கொள்ள வேண்டும். அது தான் உங்களுக்கு நல்லது. தனியாக இருப்பது உங்களுக்கு பிடிக்க வேண்டும். இப்படி பழகினால் தான் உங்கள் எதிர்கால உறவுகள் நீண்ட காலம் நீடிக்கும்.
உங்களை நீங்களே இழந்துவிட்டீர்கள்:
சிலர் தாங்கள் யாருடன் இருக்கிறார்கள் என்பதன் மூலம் தங்களை வரையறுக்கிறார்கள். அதாவது தனது தனித்துவத்தினை இழந்து விடுகிறார்கள். அவர்கள் தங்கள் காதலரின் நலன்களை ஏற்றுக்கொள்கிறார்கள், அது தான் அவர்களுக்கும் என்று மாய உலகில் வாழ துவங்கி விடுகிறார்கள். எப்போதும் தங்களை ஒரு பிரிக்க முடியாத ஜோடி என்று நினைக்கிறார்கள். அவர் இல்லாமல் தான் இல்லை என்று கற்பனை செய்து கொள்கிறார்கள். ஆனால், நீங்கள் யார் என்பதை நீங்கள் இழந்துவிட்டால், சிறிது நேரம் தனிமையில் இருப்பதன் மூலம் உங்களை மீண்டும் கண்டுபிடிக்க முடியும். கடந்து போனதை மறந்து விட்டு புது வாழ்வுக்கு தயாராக வேண்டிய நேரம் இது.
உங்கள் மனது கனமாக உணர்கிறது:
உங்கள் கடைசி உறவு பிரிந்ததிலிருந்து உங்கள் மனசு அதிகம் பாதிப்படைந்து விடுகிறது. அது உங்களை கஷ்டப்படுத்துகிறது. நீங்கள் குழப்பிக் கொள்கிறீர்கள். மறக்க முடியாமல் தவிக்கிறீர்கள். உங்களுக்கு தேவை சிறிது ஓய்வு. இப்பொழுது சிறிது நேரம் தனியாக இருக்க வேண்டிய நேரம் இதுவாக இருக்கலாம். உதாரணமாக, நீங்கள் ஏமாற்றப்பட்டிருந்தால், எல்லோரும் உங்களை ஏமாற்றுவார்கள் என்ற எண்ணத்தை இப்போது நீங்கள் உங்கள் மனதில் நினைக்க துவங்குவீர்கள் ஆனால் இது உண்மை இல்லை அல்லவா? எனவே, ஓய்வு எடுத்து அந்த பிரச்சினைகளில் இருந்து வெளி வர முயற்சிக்கும் நேரம் இது.
நீங்களே முதலிடம் வகிக்கவில்லை:
உங்கள் வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் நீங்கள் தேர்ச்சி பெறவில்லை என்று குழம்புகிறீர்கள். சரியாக வேலை இல்லை, துணை இல்லை எனவே நான் வாழ்க்கையில தோல்வி அடைந்து விட்டேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்றால் உங்களைப் பற்றி நீங்களே நன்கு தெரிந்துகொள்ள நேரம் ஒதுக்குவது நல்லது. இப்பொழுது உடனடியாக வேறு ஒருவருடன் கமிட் ஆகி விடாதீர்கள். ஏனென்றால் இன்னும் நீங்கள் அதற்கு தயாராகவில்லை. மற்றவர்கள் நேசிக்கும் அளவிற்கு நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட துவங்க வேண்டும்.
உங்களை தனிமைப்படுத்துகிறீர்கள்:
நீங்கள் அதிக நேரம் தனிமையாக இருக்க செலவிடுகிறீர்கள் என்றால், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கலந்துக் கொள்ள பாருங்கள். ஊர் சுற்றுவதற்கும் ஒருவருடன் நெருங்கிய தொடர்புகளை உருவாக்குவதற்கும் உங்களுக்கு ஒரு காதலன் அல்லது காதலி தேவையில்லை. நீங்களே உங்களை தனிமைப்படுத்தி கொள்வதற்கு பதிலாக பழைய நண்பர்களை அழைத்து பேசவும்.
நீங்கள் முழுமையானவராக இருக்க உங்களுக்கு காதலர் தேவை என்று நினைக்கிறீர்கள்:
உங்களை முழுமையாக்க வேறு யாரோ தேவையில்லை. உங்களை நீங்களே நேசிக்கவும், உங்களை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள். தனிமையில் இருக்கும்போது மேலும் குழப்பி கொள்ளாமல், எப்படி சுதந்திரமாக இருக்க வேண்டும் என்றும் உங்கள் வாழ்க்கையை நேசிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள்.
காதல் பிரேக்அப்பிற்கு பிறகு மீள முடியலயா? இந்த விஷயங்களை செய்யுங்க போதும்.
பொதுவாக ஆணோ பெண்ணோ அவர்கள் விரும்பிய நபர் அவர்களை விட்டு போய் விட்டால் வாழ்க்கையே இருண்டு விட்டதாக நினைத்து கொள்வார்கள். ஆனால் உண்மையில் காதல் பிரேக்அப்பிலிருந்தும் கூட உங்களால் மீள முடியும். அதெப்படி என பார்ப்போம்.
காதலில் பிரிவு என்பது ரணமானது. இது வேதனை மிகுந்தது. நீங்கள் விரும்பும் ஒருவருடன் உடனேயே முறித்துக் கொள்வது என்பது அவ்வளவு எளிதானது கிடையாது. இது உங்கள் உணர்ச்சி மற்றும் மன ஆரோக்கியத்தை பெருமளவில் பாதிக்கும். இதயம் உடைந்து நொறுங்கியது போல் தோன்றும். சோகக் கடலில் மூழ்கி அன்றாட வேலைகளைக் கூட செய்ய முடியாமல் தவிப்பீர்கள். எனவே காதல் பிரேக்அப்பிற்கு பிறகு மீண்டும் எப்படி மீள்வது, இது போன்ற விஷயங்கள் இன்றும் பெரும்பாலானவர்களுக்கு கஷ்டமான ஒன்றாக இருக்கிறது. பிடித்த ஒருவரின் பிரிவை தாங்கிக் கொண்டு எப்படி வாழ்வின் அடுத்த அடியை எடுத்து வைப்பது அதற்காகத்தான் இந்த எளிய வழிகள் உதவுகின்றன. கீழ்க்கண்ட விஷயங்களை நீங்கள் பின்பற்றுவதன் மூலம் உங்க காதல் பிரிவை ஆற்ற முடியும். உங்க இதயத்தை சரி செய்ய முடியும். உங்க பழைய வாழ்க்கைக்கு தேவையான அனைத்து உங்களால் திரும்ப முடியும்.
மீண்டும் ஒன்றிணைக்க வேண்டாம்:
இவ்வளவு காலம் காதலித்து விட்டு உடனேயே பிரிந்து செல்வது உங்களுக்கு வேதனையாக இருந்தால் சிறிது காலம் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு நல்லா முடிவாக இருவரும் யோசித்து முடிவெடுக்கலாம். இது உங்க வலியை குறைக்கும். இருவருக்கும் ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையை உங்களுக்கு வழங்கும். பிரிந்த உறவை மீண்டும் ஒன்றிணைக்க முயலாதீர்கள்.
பழைய காதலை பின்தொடராதீர்கள்:
நாம் விரும்பிய ஒருவர் வாழ்க்கையில் என்ன செய்கிறார் என்பதைப் பற்றி அறிய ஆர்வமாக உணர்வது இயல்பான ஒன்று. ஆனால் தொடர்ந்து அவரை பின்தொடர்வது உங்க வேதனையை மேலும் அதிகமாக்கும். எனவே உங்க பழைய காதல் முடிவுக்கு வந்த பிறகும் அதை பின்தொடராதீர்கள்.
மற்ற நபரை குறை கூறாதீர்கள்:
உங்க காதல் பிரிவுக்கு மற்றவர் தான் காரணம் என்று குறை கூற ஆரம்பிக்காதீர்கள். நீங்கள் செய்த தவறை அவர்களுக்குத் தெரியப்படுத்த விரும்பினாலும், பழி விளையாட்டைத் தொடங்குவதற்குப் பதிலாக, உங்களால் முடிந்தவரை உண்மையாக இருக்க முயற்சி செய்யுங்கள்.இது உங்களுக்கு நிம்மதியான உணர்வை தரும்.
உடனேயே அடுத்த உறவுக்குள் நுழைய வேண்டாம்:
நீங்க விரும்பிய ஒருவர் போனதும் அந்த இடம் வெற்றிடமாக தோன்றலாம். ஆனால் அந்த இடத்தை உடனேயே மற்றவரைக் கொண்டு நிரப்ப முயலாதீர்கள். இதிலிருந்து எப்பொழுதும் விலகி இருப்பதே நல்லது. இது உங்களை மேலும் வருத்தத்திற்கு உள்ளாக்கும். அந்த உறவையும் சரியாக பேண முடியாம கஷ்டப்படுவீர்கள்.
உங்க உணர்ச்சிகளை மிகைப்படுத்தாதீர்கள்:
நெருங்கியவருடன் உங்க உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்வது முக்கியம் என்றாலும் அதை சமூக ஊடகங்களில் வெளியிடுவது போன்ற விஷயங்களை செய்யாதீர்கள். பெரும்பாலான இது குறித்து அக்கறை கொள்ள மாட்டார்கள். எனவே, உங்கள் உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயம் உங்களுக்கு ஏற்பட்டால், உங்களைப் பற்றி அக்கறை கொண்டவர்களுடன் மட்டுமே அதைச் செய்யுங்கள்.
உங்களுக்கென்று கொஞ்சம் இடம் கொடுங்கள்:
உங்களை கவனித்துக் கொள்ள போதுமான நேரம் ஒதுக்குங்கள். சமூக ஊடகங்களிலயே நேரத்தை செலவழிக்காமல் உங்களுக்கென்று வேறு வழிகளில் நேரத்தை செலவிடலாம். பார்லருக்கு செல்வது, மிதமான மசாஜ், ஷாப்பிங், ஓவியம் என உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்யலாம்.
புதிய மற்றும் ஆக்கப்பூர்வமான ஒன்றை செய்யுங்கள்:
ஆக்கப்பூர்வமான ஒன்றை செய்வது எப்பொழுதும் உங்களுக்கு கை கொடுக்கும். புதிய பொழுதுபோக்கு அல்லது உங்களுக்கு விருப்பமான மற்றும் அதே நேரத்தில் உங்களை மகிழ்விக்கும் ஒன்றை எடுக்க முயற்சிக்கவும். புத்தகங்கள், உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடலாம். உங்க ஆற்றலை சரியான திசையில் செய்வது உங்களுக்கு நன்மை அளிக்கும்.
உங்க நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பேசுங்கள்:
உங்க மனநிலையை மாற்ற உங்க நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கலகலவென பேசி வரலாம். நீங்கள் விரும்பினால் அழுகை வந்தால் அழுது விடுங்கள். உங்க உணர்ச்சிகளை அடக்க வேண்டாம். உணர்வுகளை வெளியே வர அனுமதிக்கும் போது நீங்கள் நன்றாக உணர்வீர்கள். வேண்டுமானால் மருத்துவரின் உதவியைக் கூட நாடலாம்.
தொடரும் …