Visitors have accessed this post 807 times.
- கிளியோபட்ரா பல கோடி உயிர்களை கவர்ந்திழுத்த மகா தேவதை .கிளியோபட்ரா பெண்மையின் நலீனத்திற்கு வல்லினம் வாசித்தவர் .கிளியோபட்ரா ஒவ்வொரு நாளும் கழுதைப்பாலில் தான் குளிப்பார் .அவருடைய உடல் செம்மண்ணில் பூத்த நீல நிறப் பூ போல் இருக்கும் .சாக்லேட் நிறம் என்று சொல்வார்களே அதே போல் ,தனது உடலை வெண்மையாக காட்ட வித்தியாசமான குளியலை தேடினார்.கழுதைப்பாலில் குளிப்பதற்காக கிளியோபாட்ரா தனது அரண்மனைக்கு அருகில் ஒரு பெரிய கழுதை பண்ணையை வைத்தார் .அது மட்டுமல்ல அந்தப் பாலில் குங்குமப் பூவும் கலந்தார். கிளியோபாட்ரா என்ற பெயரில் ஏழு கிளியோபாட்ரா வாழ்ந்து வந்தார்கள் .இவர்தான் .தன்னை பல வன்மை களால் அலங்கரித்து கொண்டுள்ளார் .உடல் மினுமினுப்பு காக முத்துக்களை அரைத்து பூசிப்பாள் .அவள் பேரழகி மட்டுமல்ல ஜூலியஸ் சீசர், மார்க் ஆண்டனி போன்றவர்களின்காதல் மனைவியாக இருந்தார் .அவள் எகிப்து பேரரசியாக இருந்தாலும் ,அவள் கிரேக்க பேரரசர் அலெக்சாண்டரின் தளபதி தாலமியின் வம்சத்தில் இருந்து வந்தவர்கள்பேச்சாற்றல் நிறைந்தவள் அவளது பேச்சுக்கு யாரும் மறு பேச்சு பேசியதில்லை .14 வயது ஆகும்போது தந்தையோடு சேர்ந்து ஆட்சி பகிர்ந்துகொண்டார் .தந்தை இறந்த பொழுது பின்பு பதினெட்டாவது வயதில் அரசியாக வந்தார். எகிப்து வழக்கப்படி அரசி மட்டும் தனியாக ஆட்சி நடத்த முடியாது இதனால் அந்த நாட்டு வழக்கப்படி தனது தம்பியான பதிமூன்றாம் தாலமிகளில் திருமணம் செய்து கொண்டார் .அக்காலத்தில் தம்பியையும் திருமணம் செய்யும் வழக்கமும் இருந்தது. எகிப்தில் பெரும் படை கிடையாது .தாலமிகள் தங்களை கிரேக்கர்கள் என்று கூறுவதில் பெருமை கொண்டிருந்தனர் .ஆனால் பன்னிரண்டாம் தாலமிகளில் பிறந்தவள் கிளியோபட்ரா .தன்னை எகிப்து தேவதை என்று மறுபிறவி என்றும் கூறிக்கொண்டார் .தன்னுடைய முன்னோர்களைப் போல் இல்லாமல் மிகுந்த சிரத்தை எடுத்து எகிப்து மொழியை கற்றுக்கொண்டார். இதனால் எகிப்து மக்கள் அவளை ஒரு தேவதையாக கொண்டாடினர் .வசீகரம் ,இளமை ,புத்தி ,கூர்மை ,தேசப்பற்று ,நினைத்ததை சாதிக்கும் உறுதி இவையாவும் கிளியோபாட்ராவின் வெற்றியின் ரகசியம்.செல்வதற்கு பஞ்சமில்லை .அதனால் அண்டை நாடுகளுக்கு எழுத்தின் மேல் பொறாமை .எகிப்தையும் தனது ஆட்சியையும் பாதுகாக்க கிளியோபட்ரா எடுத்த முடிவு யாரும் எதிர்பார்க்காதது.உலகத்து உருண்டையில் ஓரிரண்டு இடத்தில் மட்டுமே நிலையான அரசுகள் இருந்த காலம். அதிலொன்றுதான் ரோம். ஜூலியஸ் சீசரின் சிவந்த விழிகளைப் பார்த்தே சிலநூறு கிராமங்கள் ரோமோடு ஒட்டிக்கொண்டன. அப்போது வலிமையாக இருந்த ஜூலியஸ்சீ ஸரை காதலிக்க முடிவு செய்தார் .ஒரே இரவில் எகிப்தை எட்டிப்பிடித்தான் சீசர். நைலின் கரையில் நதியாக விளையாடிக் கொண்டிருந்தவளுக்குச் செய்தி போய்ச் சேர்ந்தது. தாலமி மரணித்தான். துரோகச் சிறகுகள் கிளியோபாட்ராவிற்குள் கிளர்ந்தெழுந்தன. ஜூலியஸ் சீசரைக் கொண்டே ரோமின் வரலாற்றை மாற்றி எழுத நினைத்தாள். அடிமைகளின் அணிவகுப்பை பார்த்துக்கொண்டிருந்த சீசர், கிளியோபாட்ராவின் அழகில் சொக்கிப்போனான். ரோமின் புகழில் ரோமங்கள் முளைக்கத் தொடங்கிய நாள் அது. மனதில் மலர்ந்த மகரந்தத்தை அவளிடம் கொட்டினான்.பழிவாங்கும் படலத்தின் முன்னுரையை கிளியோபாட்ரா சீசரின் உதட்டில் எழுதினாள். ரோமின் வரலாற்றில் அதுவரை எவரும் பார்த்திடாத அளவிற்கு கோலாகலங்கள் கொடிகட்டிப் பறந்தன. தங்கப்பல்லக்கில் அரச வீதிகளில் வலம் வந்தாள் கிளியோபாட்ரா. சீசரின் மனைவி என்னும் பெயரில். அரசவையில் பெருகிவந்த அபாயக்குரல்களை அவனுக்குத் தெரியாமல் பார்த்துக்கொண்டாள் பதுமை. சீசரின் இந்த காதல் மோகம், ரோமின் எதிர்காலத்தை நாசமாக்கும் என அரசவை மந்திரிகள் மாநாடு நடத்தினார்கள். சபுரூட்டஸ் என்பவனின் குருவாளில் தோய்ந்தது சீசரின் குருதி. இறுதி ஊர்வலத்தில் இரங்கற்பா பாட மேடையேறினான் மார்க் ஆண்டனி. பின்னாளில் வார்த்தையின் ஜாலத்தால் எவரையும் வளைத்துவிடும் ஆண்டனி ரோமிற்குத் தலைவனானான். சீசரின் இழப்பு இத்தனை சீக்கிரம் சரியானதை கிளியோபாட்ராவால் நம்ப முடியவில்லை.இறுதியில், அழகென்னும் ஆயுதத்தில் வீழ்ந்தான் ஆண்டனி.அத்தோடு சூழ்ச்சியை முறியடிக்க சூழ்ச்சியே துணை என்று முடிவெடுத்தான். அதன் ஒருபகுதியாக கிளியோபாட்ரா கொல்லப்பட்டாள் என்ற செய்தி ஆண்டனிக்கு அனுப்பப்பட்டது. வெற்றியின் விளிம்பில் நின்றுகொண்டிருந்தவனை, தோல்வி எனும் கடலில் கரையொதுங்கச் செய்தது அந்தச் செய்தி. வரலாற்றில் முதல் முறையாக போரில் பின்வாங்கியது ஆண்டனியின் படை.தாய்நாடு சென்ற கிளியோபாட்ராவிற்கு, போர்க்களத்தின் நடுவில் புதுக்கவிதை எழுதியனுப்பினான்.ஆண்டனியின் மரணம் கிளியோபாட்ராவின் கனவுகளைக் கத்தரித்தது.ஜூலியஸ் சீசருக்கும், ஆண்டனிக்கும் தான் இழைத்த துரோகத்திற்காக கடைசி காலத்தில் கண்ணீர் விட்டாள். நிலைமை புரிந்துவிட்டது.பல ஆண்டுகளாக ஆண்டுகளாக அவள் வளர்த்து வந்த பாம்புகளை எடுத்து மேனியில் படரவிட்டாள். இணையில்லாத அழகினைத் தீண்டித் திளைத்தன பாம்புகள். ஆக்டேவியஸ் வந்து பார்க்கும்போது நீலநிறப் பறவையாக கிளியோபாட்ரா மாறியிருந்தாள்.
Nice