Visitors have accessed this post 624 times.
கண் கருவளையத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் காணாமல் போக்க இந்த 1 பொருள் போதுமா? இத்தனை நாட்களாக இந்த குறிப்பு தெரியாமல் போச்சே!
பெண்களுக்கு முக அழகை குறைத்து காட்டக்கூடிய முதல் விஷயம், கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையம் தான். பார்ப்பதற்கு நோயாளி போல ஒரு தோற்றத்தை கொடுத்து விடும். முகம் என்னதான் வெள்ளையாக இருந்தாலும் கண்ணுக்கு கீழே கருவளையம் இருந்தால் அவ்வளவு தான். அழகு இருந்தும் அது அழகாக தெரியாது. கண்ணுக்கு கீழே இருக்கக்கூடிய பிரச்சனை என்பதால் எல்லா பொருட்களையும் எடுத்து அந்த இடத்தில் போட்டு விடக்கூடாது. அது ரொம்பவும் சென்சிட்டிவ் ஸ்கின் என்பதால் நாம் அந்த இடத்தில் போடக்கூடிய கிரீம்களை ரொம்பவும் கவனமாக உபயோகிக்க வேண்டும்.
கண் கருவளையத்தை போக்குவதற்கு மிக மிக சுலபமான முறையில் இயற்கையான மூன்று குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த மூன்றில் உங்களுக்கு எது பெஸ்ட் என்று நினைக்கிறீர்களோ, உங்களுக்கு எது ரொம்ப பிடிக்குதோ அதை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் அதன் மூலம் நிச்சயமாக நல்ல ரிசல்ட்டை பெறலாம்.
குறிப்பு 1: இந்த குறிப்புக்கு கேரட் ஜூஸ் – 1 ஸ்பூன், தேன் – 2 ஸ்பூன் நமக்கு தேவைப்படும். சுத்தமான தேனாக இருக்கட்டும். ஃபிரஸான கேரட்டை சிறிய துண்டுகளாக வெட்டி மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் அரைத்து ஒரு வடி கட்டியில், வடிகட்டி எடுத்தால் கேரட் ஜூஸ் கிடைத்துவிடும். ஒரு சிறிய கிண்ணத்தில் கேரட் ஜூஸ் – 1 ஸ்பூன், தேன் – 1 ஸ்பூன் சேர்த்து அடித்து கலக்கி இந்த பேக்கை உங்களுடைய கண்களை சுற்றி லேசாக போட்டு அப்படியே விட்டு விடுங்கள். 20 நிமிடத்தில் பேக் காய்ந்து விடும். அதன் பின்பு லேசாக மசாஜ் செய்து பேக்கை கழுவி விடலாம். 20 நிமிடத்திற்கு மேலே 30 நிமிடம் இந்த பேக்கை கண்களில் போட்டாலும் தவறு கிடையாது. இந்த பேக்கை ஃப்ரிட்ஜில் வைத்தால் 7 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். தினமும் இந்த பேக்கை கண்ணுக்கு கீழே போடலாம் தவறு கிடையாது.
குறிப்பு 2: இரண்டாவது குறிப்பு. கலர் வாசனை திரவியம் சேர்க்காத ஆலோவேரா ஜெல் – 1 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், விளக்கெண்ணெய் – 1/2 ஸ்பூன், தேவை இந்த மூன்று பொருட்களையும் ஒரு பாட்டிலில் போட்டு நன்றாக அடித்து கலக்கினால் சூப்பரான ஜெல் தயார். இந்த ஜெல்லை இரவு தூங்க செல்வதற்கு முன்பு கண்களுக்கு கீழே அப்ளை செய்ய வேண்டும் ஐந்து நிமிடத்தில் இந்த ஜெல் காய்ந்தவுடன் அப்படியே தூங்கச் செல்லலாம். மறுநாள் காலை சுத்தமான தண்ணீரில் முகத்தை கழுவிக் கொள்ளலாம். இந்த ஜெல் பிரிட்ஜ் இல்லாமல் வைத்தாலும் 10 நாட்களுக்கு கெட்டுப் போகாது அப்படியே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
குறிப்பு 3: இந்த மூன்றாவது குறிப்பு நமக்கு பேரிச்சம் பழங்கள் 3 தேவை. இந்த பேரிச்சம் பழத்தை அரைக்க தேவையான அளவு காய்ச்சிய பால் தேவை. பேரிச்சம் பழத்துக்கு உள்ளே இருக்கும் கொட்டைகளை நீக்கிவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவு பாலை விட்டு விழுது போல அறைத்தால் பேஸ்ட் நமக்கு கிடைக்கும். இந்த பேஸ்டை கண்களுக்கு கீழே கண்களை சுற்றி போட்டுவிட்டு 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிக்கொள்ளலாம். (முடிந்தால் இரண்டு பேரிச்சம் பழங்களை உள்ளுக்கு சாப்பிட்டு வாருங்கள். ரொம்ப ரொம்ப அழகுக்கு ஆரோக்கியத்திற்கு நல்லது.)
இந்த பேக் பிரிட்ஜில் வைத்தால் ஏழு நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். எந்த வகை பேரிச்சம் பழத்தை வேண்டும் என்றாலும் இந்த குறிப்புக்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலே சொன்ன மூன்று குறிப்பை பயன்படுத்துவதன் மூலம் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது. ஏதாவது ஒரு குறிப்பை தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது கண் கருவளையம் படிப்படியாக குறைவதை உணர முடியும்.