Visitors have accessed this post 296 times.

காதல் பயணம்

Visitors have accessed this post 296 times.

அழகிய காதல் கதையின் தொடக்கமே அந்த பேருந்தில் தான் ஏற்பட்டது.

               அழகிய ”சிகப்பு நிற சுடிதார்” அவள் அழகை இன்னும் மெருகேற்றி இருந்தது. 

 

   ‘சில்லென்ற காற்று முகத்தில் வீச முன் நெற்றி முடியை காதோரம் ஒதுக்கி விட்டு’ ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்தாள். 

 

            அலுவலக அழைப்பு வர போனை காதில் வைத்தால் . அவசரமாக பேருந்தில் பிரேக் புடிக்க , அனைவரும் இருக்கையின் முன்னாள் வந்தனர்.

 ஓட்டுநர் மட்டும் பேருந்தில் முன்னாள் வந்த அவனை ”திட்டி” கொண்டிருந்தார், எதையும் காதில் வாங்காதவனாய் அலுவலக அவசரத்தில் வந்தவன் தேடி பிடித்து அவளின் பின் இருக்கையில் இருந்த காலி இருக்கையில் அமர்ந்தான் .

           நல்ல உயரம் சிகப்பு நேரம் அவனுடைய தாடி மீசையும் அளவானது. ஆளுக்கேற்ற திடகாத்திரமான உடல்வாகு .

                                  அவன் வந்த ஒரு நிமிடத்தில் அவள் ”அவனை ”முழுவதும் கவனித்து இருந்தால். 

 அவள் உடையை சரி செய்தவாறு அவனை திருப்பி பாத்தாள்.

அவனோ கையில் இருந்த ஏதோ ஒரு பேப்பரில் இருந்ததை பார்த்து கொண்டிருந்தான் .

                                  இவள் திரும்பி திரும்பி பார்ப்பதை அவன் கவனிக்காமல் இல்லை . இருந்தாலும் கவனிக்காதவனை அமர்ந்து இருந்தான் .

        அவள் இருக்கும் இடம் வந்ததும் இருக்கையை விட்டு எழுந்து இறங்கினால் . இறங்கும் போதும் இவனை பார்த்தால் . இவன் பார்க்கவில்லை. 

           மறுநாளும் இதே போல அவள் வருவதும் அவன் வருவதுமாய் இருந்தது . ஆனால்,  அவளோ அன்று ஒரு நாள் அவனை பார்த்ததோடு சரி அதற்கு பிறகு அவனை கவனிக்கவில்லை.

  ஆனால் அவனோ , அன்றிலிருந்து இன்று வரை அவள் வைத்து வரும் பூவை கூட சேகரித்து வைத்திருந்தான். என்ன நாள் என்ன நிற உடை உடுத்தியிருந்தால் என்று கூட அவன் தெளிவாய் கூறுவான், அந்த அளவிற்கு அவளை கவனித்தும் காதலித்து கொண்டிருந்தான் .

  நாட்கள் நகர அவனோ ஒரு நாள் எப்படியும் அவளிடம் காதலை சொல்லிவிட வேண்டும் என்று காத்திருந்தான், அதற்க்கான நாளையும் எதிர் பார்த்திருந்தான் . 

   ஆம் !, அந்த நாளும் வந்தது. அது ஒரு ”காதலர் தினம்” தான்.  

அவளோ அவளுடைய நிறத்திற்கு ஏற்றார் போல மஞ்சள் நிற உடையில் அழகிய மின்னும் தேவதையாய் ஜொலித்தாள் .

 அவள் அழகில் மயங்கியவனாய் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான், அவளும் அவன் கவனிப்பதை பார்த்தாள் .  

    சற்று மெல்லிய புன்னகையுடன் திரும்பினாள் . இதுவே அவனுக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது.

இன்று எப்படியும் காதலை சொல்லி விட வேண்டும் என்று , அவளின் இருக்கையின் அருகில் அமர்ந்தான் . இதை சற்றும் எதிர் பாரத அவள் , சற்று நகர்ந்து அமர்ந்தாள். 

        இது அவனுக்கான நேரமா இல்லை அவளுக்கான நேரமா என்று தெரியவில்லை, அன்று அவர்கள் இருந்த பேருந்தில் அதற்கு மேல் வேறு எங்குமே காலி இருக்கை  இல்லை.

 இன்னும் நெருங்கி அவள் அருகில் அமர்ந்தான். இருவருக்கும் மூச்சுக்காற்று அடைப்பது போல் இருந்தது. இதயம் வேகமாக துடித்து கொண்டிருந்தது. இவன் ஒரு காகிதத்தில் ”இந்த மின்னும் தங்கத்திற்கு நான் சொந்தக்காரன் ஆகலாமா ” என்று எழுதி அவளிடம் கொடுத்தான் . 

       சட்டென்று அதை பிரித்து பார்த்தவள் கண்களில் காதல்  இருந்தது உண்மை தான் . 

படித்தவள் , அவனிடம் அதை திருப்பி கொடுத்தால் , 

  அவனும் ஆர்வமாக அதை பிரித்து பார்த்தான் , ”கண்டிப்பாக ” என்று எழுதி இருந்தால். 

அதை பார்த்தவனின் சந்தோசத்தை நாம் வார்த்தையில் தான் கூறிட வேண்டுமா என்ன!.

    ஆனால் இந்த பதிலை சற்றும் எதிர் பார்க்காதவன் அவளின் கையை சட்டென்று பிடித்தான், மறுப்பு ஏதும் பேசாமல் இருந்த அவளை பார்க்கையில் அவனுக்கு இன்னும் ஆனந்தம் .

  அவளின் கையை இன்னும் இறுக்கமாக பற்றினான்  

  

  அவளோ அவன் நெஞ்சின் மேல் சாய்ந்தவாறு ” சீக்கிரம் வீட்டில் வந்து பேசுங்கள்” என்று கூறினால். நடப்பது நிஜமா கனவா என்று யோசித்து கொண்டிருந்த சஞ்சய் கீழே  விழுந்தான் .

        அவன் மகன் ” வினை ” சஞ்சய்யை தூக்கத்தில் கீழே தள்ளி வீட்டிருந்தான் . சத்தம் கேட்டு அங்கு வந்த அவன் மனைவி ” கல்பனா ” என்ன ஆச்சி ! , இன்றைக்கும் அதே கனவா ?!. இன்னும் எத்தனை வருடத்திற்கு தான் நம் முதல் சந்திப்பையும் காதலை வெளிப்படுத்தியத்தையும் நினைத்து கொண்டிருப்பீர்கள்!. என்று சொல்லி விட்டு , வாங்க வேண்டிய மளிகை சாமான்களை எழுதி கையில் கொடுத்திருந்தால்.       

             முகத்தை கழுவி விட்டு கடைக்கு செல்ல தயாரானான் சஞ்சய் ……………………

Leave a Comment

Write and Earn with Pazhagalaam