Visitors have accessed this post 654 times.

காரசாரமான சுவைமிகுந்த பாய்வீட்டு சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

Visitors have accessed this post 654 times.

 

சிறிது வருடங்களுக்கு முன்புவரை அசைவம் என்றால் கோழி குழம்பு, ஆட்டுக் குழம்பு என்றுதான் கிராமங்களில் கூறுவார்கள்.ஆனால் இப்பொழுதெல்லாம் கிராமங்களில் கூட பண்டிகைகளில் பிரியாணி வகைகளை செய்து அந்த நாளை சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.

காரணம் பிரியாணி என்பது அதிக கலோரிகளை உள்ளடக்கிய ஒரு சுவையான உணவு வகையாகும்.
அதன் மகத்துவமும், ருசியும் மேலை நாடுகளிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நம்மிடம் வந்து ஒட்டிக் கொண்டுவிட்டது.
 
நாம் இந்த பதிவில் சிக்கன் பிரியாணி எப்படி செய்வது என்று அதே உற்சாகத்தோடு பார்க்கலாம்…
 
பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:
 
சிக்கன் – 1/2 கிலோ
பாஸ்மதி அரிசி – 1/2 கிலோ
நெய் – 50 கிராம்
எண்ணெய் – 150 கிராம்( நறுமணம் இல்லாதது)
பட்டை – 4 துண்டு
கிராம்பு – 3
ஏலக்காய் – 2
அன்னாசி பூ – 1
நறுக்கிய பெரிய வெங்காயம் – 2
கீறிய பச்சை மிளகாய் – 3
நறுக்கிய தக்காளி – 3
கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி
புதினா தழை – ஒரு கைப்பிடி
தயிர் – 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சை பழம் – 1/4
 
பிரியாணி மசாலா செய்ய தேவையான பொருட்கள்:
 
பட்டை – 10
கிராம்பு – 5
ஏலக்காய் – 4
சின்ன வெங்காயம் – 20
 
*மேற்கூறிய பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை தனியாக பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
 
*நாம் இந்த பொடியை முழுமையாக பயன்படுத்த போவதில்லை. பயன்பாட்டிற்கு போக மீதியை அடுத்தடுத்து பிரியாணி செய்வதற்கு சேமித்து வைத்து கொள்ளலாம்.
 
*சின்ன வெங்காயத்தை தனியாக ஒன்றிரண்டாக அரைத்து கொள்ளவும்.
 
*பாஸ்மதி அரிசியை ஒரு கப்பில் அளந்து சுமார் 20 நிமிடங்களிலிருந்து 1/2 மணி நேரம் வரை அரிசியின் தன்மைக்கு தகுந்தாற்போல் ஊற வைத்து கொள்ளவும்.
 
**குறிப்பு:
 
*அரிசியை கப்பில் அளந்து வைத்துக் கொண்டால்தான் பிறகு நாம் அரிசிக்கு தகுந்தாற்போல் பிரியாணிக்கு தண்ணீர் சேர்க்க முடியும்.
 
*பழைய அரிசி – 1/2 மணி நேரம்
*புதிய அரிசி – 20 நிமிடங்கள்
 


 
பிரியாணி செய்முறை:
 
*அடுப்பில் குக்கரை வைத்து நெய், எண்ணெய் ஆகியவற்றை குக்கரில் சேர்க்கவும்.
அடுப்பை நடுத்தர தீயில் வைக்கவும்.
 
*எண்ணெய் கலவை கொஞ்சம் சூடானதும் முதலில் கூறிய பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ ஆகியவற்றை அதில் சேர்க்கவும்.
 
*இவை பொரிந்தவுடன் நறுக்கிய பெரிய வெங்காயத்தை அதில் சேர்க்கவும்.
 
*பெரிய வெங்காயம் சிறிது பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
 
*இதனுடன் கீறிய பச்சை மிளகாயை சேர்க்கவும்.
 
*பிறகு, மேலே கூறியபடி பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து அரைத்த பொடியில் 2 டீஸ்பூன் சேர்க்கவும்.
 
*கிளறி விட்ட பின் கொத்தமல்லி, புதினா தழை சேர்த்து வதக்கி, தயிர் சேர்த்து கிளறவும்.
 
*உடனே நாம் எடுத்து வைத்த மிளகாய் தூள், மல்லி தூள் ஆகியவற்றை சேர்த்து சிறிது கிளறவும்.
 
*பிறகு நறுக்கிய தக்காளி, நன்கு கழுவிய சிக்கன் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
 
*அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
 
*சிக்கன் சிறிது வெந்து வந்ததும் ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் என்ற அளவிற்கு தண்ணீர் சேர்க்கவும்.
 
**குறிப்பு:
 
*அரிசி அளந்த அதே கப்பில்தான் தண்ணீரும் அளக்க வேண்டும்.
 
*அரிசியை சேர்த்த சிறிது நேரத்திலேயே அரிசி வெந்துவிடும் என்பதால் சிக்கன் சிறிது வெந்த பிறகே அரிசியை சேர்க்க வேண்டும்.
 
*பிறகு அந்த தண்ணீருடன் அரை எலுமிச்சை பழச் சாறையும் வடிகட்டி அதனுடன் சேர்க்கவும்.
 
*பிரியாணி கலவை கொதித்த பிறகு அதனுடன் கழுவி வடிகட்டிய அரிசியை சேர்த்து லேசாக கலந்து விடவும்.
 
* பிறகு குக்கரின் மூடியை சரியாக பொருத்தி, மிதமான தீயில் ஒரு விசில் வரும் வரை வைத்து இறக்கவும்.
 
*விசில் சத்தம் முழுமையாக அடங்கியபின் குக்கரின் மூடியை திறந்து லேசாக கிளறிவிட்டு வேறு பாத்திரத்துக்கு மாற்றி பரிமாறவும்.
      
                            நன்றி
 
 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam