Visitors have accessed this post 493 times.

காற்று மாசு காரணத்தால் நடுத்தர வயது பெண்களிடையே அதிகரிக்கும் ஆரோக்கிய பிரச்சனை!

Visitors have accessed this post 493 times.

சமீபத்திய ஆய்வுகளின்படி நீண்ட நாட்கள் காற்று மாசால் பாதிக்கப் படும் நடுத்தர வயது பெண்களுக்கு உடல் எடை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. எதனால் இப்படி ஏற்படுகிறது, எப்படி இதிலிருந்து தற்காத்துக் கொள்வது என்பதை இந்த கட்டுரையில் விரிவாக காணலாம்.

 

உலக அளவில் காற்று மாசு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.இந்திய மக்கள் தொகையில் 63 சதவீதம் பேர் அசுத்தமான காற்றை சுவாசித்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். சுத்தமான காற்றை பாட்டில் போட்டு விற்கும் கடைகள் கூட உருவெடுத்து விட்டன.

 

ஆனால், சத்தமே இல்லாமல் இந்த காற்று மாசால் மற்றுமொரு உடல்ரீதியான பிரச்சனை நடுத்தர வயது பெண்களை குறிவைத்து தாக்கி வருகிறது. அதுதான் காற்று மாசால் ஏற்படும் எடை கூடுதல் , பிஎம்ஐ அதிகரிப்பு, பருமன் அதிகரிப்பு என வித விதமான பிரச்சனைகளை கொடுத்து வருகிறது.

 

ஏற்கனவே, காற்று மாசால் இதய கோளாறுகள், நுரையீரல் புற்றுநோய் , ஸ்ட்ரோக் , நுரையீரல் அடைப்பு நோய்கள் என பல்வேறு விதமான நோய்களுக்கு காரணமாக இருக்கிறது. இந்நிலையில் தற்போது உடல் எடை அதிகரிப்போடும் தொடர்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மிச்சிகன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், 40 வயதின் பிந்தைய வயது மற்றும் 50 களின் தொடக்கத்தில் இருக்கும் பெண்கள் உடல் எடை கூடுவதற்கும், நீண்ட நாளாக அவர்கள் காற்று மாசால் பாதிக்கப்பட்டு வருவதற்கும் சம்மந்தம் உண்டு என்று கண்டறிந்துள்ளனர்.

 

காற்றில் அதிக அளவிலான துகள்கள் இருக்க கூடிய இடத்தில வாழக்கூடிய நபர்களின் சுவாசப்பாதை வழியாக அவை நுழைந்து ரத்த ஓட்டத்திற்குள் நுழைந்து உடலின் உறுப்புகளை பாதிக்கின்றது. இது உடல் எடை அதிகரிப்பதோடு மட்டுமின்றி பின்வரும் பிரச்சனைகளையும் கொடுக்கிறது.

 

மூக்கு, தொண்டை , கண்களில் எரிச்சல் மற்றும் அசௌகரியம் , இருமல், மார்புப்பகுதியில் இறுக்கம், இதயம் மற்றும் சுவாசப்பாதை கோளாறுகள் , நுரையீரல் செல்கள் பாதிப்பு, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்கள் உள்ளிட்ட பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது.

 

இந்த ஆய்வில் 1000 த்திற்கும் மேற்பட்ட வெவ்வேறு விதமான நாடுகளை சேர்ந்த நடுத்தர வயது நபர்களின் 2000 முதல் 2008 வரையிலான மருத்துவ தரவுகளை ஆராய்ந்து பார்த்ததில் 4.5 சதவீதம் உடல் எடை கூடியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. பலருக்கும் உடல் பருமன் அதிகரிக்கும் வாய்ப்பும் அதிகமாக இருந்துள்ளது.

 

தற்காப்பு வழிமுறைகள்

 

N95 போன்ற முகக்கவசங்களை பயன்படுத்துங்கள்.

புகைப்பழக்கத்தை விட்டுவிடுங்கள

 

வீட்டிற்கு அருகில் எதையும் போட்டு எரிக்காதீர்கள்

.

அதிகமாக வெளியில் வராமல் வீட்டிற்குள் இருக்க முயற்சி செய்யுங்கள்

 

உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்ளுங்கள்

 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள், காய்கள், பழங்கள் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

 

காற்றை சுத்தப்படுத்தும் செடிகளை வீட்டில் வளருங்கள்

 

உடற்பயிற்சி போன்றவற்றை வீட்டிற்குள்ளேயே மேற்கொள்ளுங்கள். குறிப்பாக காலை நேரங்களில் அதிகமாக புகை சூழ்ந்திருக்கும் நேரங்களில் வெளியில் வராதீர்கள்.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam