Visitors have accessed this post 773 times.
பிச்சைக்காரன் ஒருவன் தர்மராஜர் யுதிஷ்ரரிடம் பிச்சை கேட்க, அவரை “நீ நாளைக்கு வா, பிச்சை எடுக்கிறேன்” என்றார்.
இதைக் கேட்ட பீமன் , வெற்றிமுரசு கொட்டி மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தான். இதைக் கண்ட தர்மராஜர் காரணம் கேட்க அதற்கு பீமன், இதுவரை எவரும் காலத்தை வென்றது இல்லை நீங்கள் தான் இந்த வஞ்சகமான காலத்தை வென்று விட்டீர்கள் என்று கூறினான். அது எப்படி என்று தர்மர் கேட்க “இப்போது தானே நீங்கள் பிச்சைக்காரனிடம் நாளைக்கு பிச்சை இடுவேன் என்று கூறினீர்கள் ? அப்படியானால் , நாளை வரை நீங்கள் உயிர் வாழ்வதில் உங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது என்றுதானே அர்த்தம். காலத்தின் தத்துவம், அடுத்த கணம் என்ன நடக்கும் என எவருக்கும் தெரியாத போது நிலையற்ற உயிர் ஒன்று இவ்வாறு கூற முடியுமா? என்று கிண்டலாக கேட்க, தர்மர் தத்துவத்திற்கு மாறாக தான் பேசியதை நினைத்து திகைத்துவிட்டார்.