Visitors have accessed this post 768 times.
கீரைகளின் இளவரசி
முருங்கை கீரை:
முருங்கை கீரை பல மருத்துவ குணங்கள் நிறைந்தது.இது கண் பார்வை குறைபாடு, வயிற்று புண், ரத்தசோகை, மூட்டுவலி,உடல் சூடு போன்ற பல வியாதிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.
முருங்கை கீரை நோய் எதிர்ப்புச் சக்தியைஅதிகரிக்கும்.ஹீமொகோலோபின் அதிகரிக்க உதவும்.இது அதிகப்படியான புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து கொண்டது.
வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளதால் கண்பாரவைக்கு நல்லது. தாய்ப்பால் நன்கு சுரக்க செய்யும். முருங்கை கீரையை பொரியல், சூப் மற்றும் பொடியாக சமைத்து உணவில் சேர்த்து கொள்ளலாம்.
முருங்கை கீரை உடன் சீரகம், பூண்டு, மிளகு, மஞ்சள்தூள், சின்ன வெங்காயம், சிறிது தக்காளி சேர்த்து நீர் விட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி காலை, மாலை சூப் ஆக அருந்தலாம்.
இது உடல் பருமன், மூட்டு வலி, நாள்பட்ட ஆஸ்துமா , ரத்தசோகை ஆகிய நோய்களை குணப்படுத்தும்.அதிகப்படியான கால்சியம், தாமிரம், நார்ச்சத்து மிகுந்தது.மலச்சிக்கலை போக்கும். வாரம் இருமுறை ஏனும் நம் உணவில் முருங்கை கீரையை சேர்த்து நோய் இன்றி வாழ்வோம்.