Visitors have accessed this post 766 times.
பாலக்கீரை கட்லெட்
தேவையான பொருட்கள் :
பொருள் – அளவு
பாலக் கீரை 2 கட்டு
உருளைக்கிழங்கு2
பச்சை மிளகாய்3
இஞ்சி1 துண்டு
பிரட் ஸ்லைஸ்2
சீஸ் துருவல்1ஃ2 கப்
மைதா மாவு1ஃ2கப்
ப்ரட் தூள்1ஃ2 கப்
உப்பு தேவையான அளவு
எண்ணெய்தேவையான அளவு
செய்முறை :
🍩 பாலக்கீரை கட்லெட் செய்வதற்கு முதலில் இஞ்சியையும், பச்சை மிளகாயையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
🍩 பிறகு ஒரு பாத்திரத்தில் 3 கப் நீரை ஊற்றி கொதிக்க வைத்து, அதில் கீரையை போட்டு 2 நிமிடம் வேக வைக்கவும்.
🍩 பிறகு கீரையில் உள்ள நீரை வடித்து விட்டு, கீரையை நன்கு அரைத்து எடுக்கவும். பிறகு பிரட் ஸ்லைஸை நீரில் பிழிந்து எடுத்து வைக்கவும்.
🍩 கீரை கலவையுடன் உருளைக்கிழங்கு, உப்பு, சீஸ், இஞ்சி மிளகாய் விழுது, ப்ரட் சேர்த்து பிசையவும். சிறிது சிறிதாக எடுத்து வேண்டிய வடிவில் செய்து மைதா மாவு கரைசலில் முக்கி ப்ரட் தூளில் பிரட்டி சூடான எண்ணெயில் பொரிக்க சுவையான சூப்பர் கட்லெட் ரெடி.